பொற்குவியலை அள்ளித்தரும் ஸ்வர்ண பைரவர் மந்திரம்

bairavarl

சிவபெருமானின் வடிவமாக திகழும் ஸ்வர்ண பைரவரை முறையாக வழிபடுவதன் பயனாக நமக்கு எண்ணிலடங்கா செல்வங்கள் வந்து சேரும். ஸ்வர்ண பைரவரின் மந்திரத்தை உச்சரிப்பதன் பயனாக அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இதோ அவருக்கான மந்திரம்.

bairavar

ஸ்வர்ண பைரவர் காயத்ரி மந்திரம்:

ஓம் பைரவாய வித்மஹே-ஆகர்ஷணாய தீமஹி
தன்னோ சொர்ணபைரவ ப்ரசோதயாத்

ஸ்வர்ண பைரவர் மூல மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண பைரவாய
ஹூம்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே சுவர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா.

இதையும் படிக்கலாமே:
தினம் தினம் வெற்றியை தேடித்தரும் பைரவர் போற்றி

தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு பைரவரை வணங்கி இந்த மந்திரத்தை 21 முறை ஜெபிப்பதன் பலனாக தீரா கடனும் தீரும், பொன் பொருள் என அனைத்தும் ஏதோ ஒரு வழியில் வந்து சேரும். இந்த மந்திரத்தை ஜெபிக்கும் சமயங்களில் உடலும் உள்ளமும் தூய்மையாக இருந்து பைரவர் மட்டுமே சிந்தையில் இருக்க வேண்டும். சக்திவாய்ந்த இந்த மந்திரத்தை பரிசுத்தமாக இருந்து ஜபித்தால் மட்டுமே பலன் உண்டு.

- Advertisement -

காசியில் பைரவர் :
காக்கும் கடவுளான பைரவர் எல்லாவற்றையும் இயக்கும் அந்த சிவபெருமானின் அம்சம். எனவே அந்த சிவபெருமானுக்குரிய குணங்கள் பைரவரிடம் காணப்படுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. பைரவர் என்பது வடமொழியான சம்ஸ்கிருத சொல்லாகும். இதற்கு அச்சத்தை போக்குபவர் என்று பொருள். அதனால் தான் வட இந்தியாவின் புராதான நகரமான காசி அல்லது வாரணாசியின் காவல் தெய்வமாக கால பைரவர் விளங்குகிறார். மேலும் அந்நகருக்கு வரும் பக்தர்களின் அனைத்து விதமான அச்சங்களையும், குறிப்பாக மரணத்தை குறித்த அச்சத்தை அவர் நீக்குவதாக கூறப்படுகிறது.

swarna bairavar

அதே நேரத்தில் அவரை உண்மையாக வழிபடும் பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் அவர் நிறைவேற்றுகிறார். பைரவர் பக்தர்கள் அனைவரும் விரும்பி வழிபடக்கூடியவராக இந்த ஸ்வர்ண பைரவர் இருக்கிறார். பைரவரை வழிபடும் போது எல்லாவற்றிலும் நாம் தூய்மையை கடைபிடிப்பது அவரின் அருள் நமக்கு மிகுந்த அளவு கிடைக்கக்கூடியதாக செய்யும். மேலும் இந்த ஸ்வர்ண பைரவரை வெள்ளிக்கிழமைகளில், ஸ்வர்ண பைரவர் மூர்த்தியிருக்கும் ஆலயத்துக்கோ, அல்லது வீட்டிலேயோ ஏதேனும் ஒரு இனிப்பான உணவை தயாரித்து வழிபட நாம் அவரிடம் வேண்டிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும்.

English Overview:
Here we have Swarna bhairava mantra in Tamil. This can also be called as Swarna bhairava manthiram. By chanting this mantra one can get a good amount of money and all his loan problem will get resolved soon.