பயத்தை நீக்கும் பைரவரின் மூலமந்திரம்

swarna-bairavar-1

தேய்பிறை அஷ்டமி திதியன்று ராகுகால நேரம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இந்த மூல மந்திரத்தை சொல்லி சொர்ண பைரவரை வழிபாடு செய்தால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

சனி பகவானின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஜாதகக்காரர்கள் இந்த தேய்பிறை அஷ்டமியில், ராகு கால நேரத்தில் இந்த மந்திரத்தை 33 முறை உச்சரிப்பது மிகவும் நல்லது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு வெள்ளைப்பூசணியை இரண்டாக வெட்டி அதன் உள்பகுதியை சுத்தம் செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி விட்டு இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். உங்களுக்கான ஸ்ரீ சொர்ண பைரவரின் மூலமந்திரம் இதோ..

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ
ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வே ஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

bairavar

பைரவருக்கு வடை மாலை சாத்துவது நல்ல பலனைத் தரும். வடை மாலையுடன் சேர்த்து நைய்வேத்தியமாக தயிர்சாதம் படைப்பது மேலும் சிறந்தது. பைரவரை தொடர்ந்து நாம் வழிபடும்போது மனதிலிருக்கும் தேவையற்ற பயங்கள் நீங்கி, ஒரு தெளிவான சிந்தனையை நம்மால் உணர முடியும்.

இதையும் படிக்கலாமே
வரலக்ஷ்சுமியின் அருளை முழுமையாக பெற வரலக்ஷ்மி விரத ஸ்தோத்திரம்

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Swarna bhairava moola mantra in Tamil. Swarna bhairava moola mandiram. Swarna bhairavar manthiram in Tamil. Bairavar manthiram Tamil.