ஸ்வஸ்திக் சின்னத்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா ?

swastik palan

ஆதிகாலம் தொட்டு மனிதன் கடவுளுக்கு உருவம் கொடுத்தே வழிபட்டு வந்திருக்கிறான். இன்று உருவ வழிபாடுகளை குறை கூறும் மதத்தினர் கூட ஏதாவது ஒரு சின்னத்தை வைத்தே தங்களின் இறைவனை வழிபட்டுக்கொண்டிருக்கின்றனர். அப்படி பண்டைய கால மனிதர்கள் இறைவனைக் குறித்த தேடலிலிருந்த போது எல்லாவற்றிற்கும் பல நன்மைகளை அளிக்கக்கூடிய சின்னங்களை உண்டாக்கி, அதை தங்கள் இறைவழிபாட்டில் பயன்படுத்தினர். அந்த வகையில் நம் நாட்டின் பெரும்பாலான மக்கள் இன்றும் பயன்படுத்தும் மிகப் பழமையான “ஸ்வஸ்திக்” சின்னத்தை பற்றிய சில விடயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

swastik symbol benefits tamil

இந்த “ஸ்வஸ்திக்” “6000” ஆண்டுகளுக்கு முன்பு முதலில் “சிந்து சமவெளி” நாகரீகத்தில் உருவானதாகவும், பிறகு இச்சின்னம் உலகின் மற்ற கலாச்சாரங்களுக்கு பரவியதாகவும் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. பண்டைய காலத்திலிருந்தே “இந்து, புத்தம், ஜைன” மதங்களில் ஒரு தெய்வீக சின்னமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் “ஐரோப்பிய” கண்டத்தில் “கிறிஸ்தவ” மதம் பரவுவதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இச்சின்னத்தை அங்கிருந்த “கிரேக்க, ரோமானிய” நாகரீகத்தினர் பயன்படுத்தி வந்துள்ளனர்.

19 ஆம் நூற்றாண்டுகளில் இச்சின்னத்தைப் பற்றி அதிகம் ஆராய்ந்த ஜெர்மானிய அறிஞர்கள், இச்சின்னம் “இந்தோ-ஐரோப்பிய” “ஆரிய” இன மக்களின் சின்னம் என்று கூறினர். “ஆரிய இனவாத” கொள்கையில் தீவிர நம்பிக்கை கொண்ட “ஜெர்மானிய” சர்வாதிகாரி” அடால்ப் ஹிட்லர்” 1920 ஆம் ஆண்டு தனது “நாஜி” கட்சியின் சின்னமாக இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை வடிவமைத்தார். அதன் காரணமாக பல ஆண்டுகள் இந்த ஸ்வஸ்திகா இனவெறுப்பிற்குரிய ஒரு சின்னமாக மக்களால் பார்க்கப்பட்டது. இப்போது இச்சின்னத்தின் உண்மையையான நோக்கத்தை உலகின் பெரும்பாலான மக்கள் அறிந்துள்ளனர்.

swastik symbol benefits tamil

சமஸ்கிருதத்தில் ஸ்வஸ்திகா என்பது “அதிர்ஷ்டம், நன்மை” என்ற பொருள் கொண்டதாகும். மேலும் இச்சின்னத்தை பயன்படுத்துவதால் அங்கு நேர்மறை சக்திகள் அதிகம் ஈர்க்கப்படும். தீய சக்திகள் அங்கிருந்து நீங்கும். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். செல்வத்தை பெருக்கும். எனவே ஒருவர் இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை அவர் வீட்டின் பூஜையறையின் சுவற்றில் குங்குமம் மற்றும் மஞ்சளாலும், மேலும் வீட்டின் கதவு, பணப்பெட்டி, வாகனங்கள் போன்றவற்றில் சிகப்பு, மஞ்சள், பச்சைநிற வண்ணங்களில் வரைந்தோ அல்லது ஸ்டிக்கராகவோ ஒட்டிக்கொள்வது அனைத்து விதமான நன்மைகளையும் ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே:
2500 ஆண்டுகளாய் சிலை இல்லாத முருகன் கோவில் – தரிசித்தால் நிச்சய் பலன்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த அனைத்து விடயங்களையும் உடனுக்குடன் பெற எங்களோடு இணைந்திருங்கள்.

English overview:
Here we described Swastik symbol benefits in Tamil and also, swastika symbol was evolved and what is the exact meaning of Swastik in Tamil.