இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் 2 மாதம் ஆனாலும் தேய்க்கவே வேண்டாம் வெள்ளி பாத்திரங்கள் புதுசு போல மின்னுமா? இதையெல்லாமா தூக்கி போட்டோம் என்று யோசிக்க போறீங்க!

tonic-tablet-silver
- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் வெள்ளி பாத்திரங்கள் பளபளன்னு புதுசு போல மின்னுவதற்கு நாம் சிரமப்பட்டு தேய்க்க வேண்டிய அவசியம் இனி இல்லை. நம் வீட்டில் எக்ஸ்பைரி ஆன சில பொருட்கள் இருந்தால் போதும் சட்டுன்னு புதிதாக வாங்கிய வெள்ளி பாத்திரங்கள் போல பளிச்சென மின்ன வைக்கலாம். அப்படியான ஒரு பொருள் என்ன? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்கிற வீட்டு குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பொதுவாக பித்தளை பாத்திரங்களை தேய்ப்பதற்கு கொஞ்சம் புளியும், எலுமிச்சையும் இருந்தால் போதும். ஊற வைத்து சபீனா போட்டு தேய்த்து எடுத்து விடலாம். ரொம்பவே சூப்பரான முறையில் பித்தளை பாத்திரங்கள் ஜொலித்திடும். அது மட்டும் அல்லாமல் பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு பல வழிமுறைகள் உண்டு. ஆனால் வெள்ளி பொருட்களை சுத்தம் செய்வதற்கு பெரும்பாலும் விபூதியை தவிர அதிகமாக வேறு எதையும் பயன்படுத்துவது கிடையாது.

- Advertisement -

வெள்ளி பாத்திரங்களை விபூதி போட்டு தேய்த்தால் பளிச்சென மின்னும். ஆனால் அதை விட எஃபக்டிவ் ஆக சூப்பரான முறையில் ஜொலித்திட நம் வீட்டில் எக்ஸ்பைரி ஆன மாத்திரைகள் அல்லது டானிக் இருந்தால் போதும். நீங்கள் வேண்டாம் என்று தூக்கி எறியக்கூடிய இந்த மாத்திரை மற்றும் டானிக்கில் இருக்கக்கூடிய ஒரு வகையான கெமிக்கல் சில்வர் பாத்திரங்களை சுத்தம் செய்யக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது. இது பக்க விளைவுகளும் இல்லாதது என்பதால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

செம்மண் ஒரு பிடி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த காலத்தில் எல்லாம் மண்ணை கொண்டே பாத்திரங்களை தேய்ப்பார்கள். செம்மண் இல்லை என்றால் நீங்கள் குளவி கூடு அல்லது கரையான் புற்றை கூட பெயர்த்து எடுத்துக் கொள்ளலாம். இந்த மண்ணுடன் ஒரு மூடி அளவிற்கு ஏதாவது ஒரு எக்ஸ்பைரி ஆன டானிக் சேர்த்துக் கொள்ளுங்கள். டானிக் இல்லை என்றால் ஏதாவது ஒரு எக்ஸ்பைரியான மாத்திரைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். சிலருக்கு வீட்டில் இருக்கும் மாத்திரைகள் எதற்காக பயன்பட்டது என்று நினைவில்லாமல் இருப்பார்கள். அப்படியான மாத்திரைகளையும் வீணாக தூக்கி போடாமல் பயன்படுத்தலாம்.

- Advertisement -

இதை நைசாக பேஸ்ட் போல கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த பேஸ்ட்டை கொண்டு நீங்கள் வெள்ளி பாத்திரம் முழுவதையும் தேய்த்து ஊற விட வேண்டும். ஒரு ரெண்டு நிமிடம் ஊறிய பிறகு மீண்டும் கைகளால் தேய்த்து தண்ணீரில் கழுவி விடுங்கள். அவ்வளவுதான் புதுசு போல பளபளன்னு மின்னும். இதை இன்னும் புதிதாக்குவதற்கு கழுவிய பிறகு நன்கு துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சுத்தமான காட்டன் அல்லது டிஷ்யூ கொண்டு ஈரம் இல்லாமல் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
மழை பெய்து முடித்த ஒரு சில நாட்களில் ஈசல் கூட்டம் உங்கள் வீட்டில் படையெடுக்குமா? கூட்டமாக அதை அப்படியே பிடிக்க இதோ ஒரு சூப்பர் ஐடியா.

அதன் பிறகு அரை ஸ்பூன் விபூதியுடன், ஒரு சிறிய கற்பூர வில்லையை நுணுக்கி சேர்த்து பவுடர் போல கரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த பவுடரை கொண்டு வெள்ளி பாத்திரம் முழுவதும் தேய்த்து வையுங்கள். அப்போது தான் 2 மாதம் ஆனாலும் உங்களுடைய வெள்ளிப் பொருட்கள் எதுவுமே கறுத்து போகவே போகாது. அப்படியே புதுசு போலவே இருக்கும். நீங்கள் ஒரு மாதத்திற்கு ஒருமுறை தேய்த்தால் கூட போதும் உங்களுடைய வெள்ளி பாத்திரங்கள் அனைத்தும் புதுசாக வாங்குனது போலவே எப்போதும் இருப்பதை கண்டு நீங்களே வியந்து போவீர்கள்.

- Advertisement -