குழம்பு வைக்க பயன்படுத்தும் புளியை பயன்படுத்திய பின்பு தூக்கி போடுவீர்களா? இது தெரிஞ்சா இனி அதை கண்டிப்பா தூக்கி போடவே மாட்டிங்க!

puli-tamarind-burner
- Advertisement -

பொதுவாக கார குழம்பு, புளிக் குழம்பு, வத்த குழம்பு, ரசம், சாம்பார் போன்றவற்றில் கண்டிப்பாக புளி சேர்த்து செய்வது வழக்கம். புளி இல்லாத சமையலே பெரும்பாலும் நம் இல்லத்தில் அமைவது கிடையாது. இப்படி சமையலுக்கு பயன்படுத்தும் இந்த குழம்பு புளியை பயன்படுத்திய பின்பு பொதுவாக வேண்டாம் என்று அதன் சக்கையை தூக்கி எறிவது உண்டு. ஆனால் அதை வைத்து இப்படிக்கூட ஒரு விஷயத்தை செய்யலாமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு செய்து விடலாம்! அப்படி நாம் என்ன செய்ய போகிறோம்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

குழம்பு வைக்க பயன்படும் புளியை பொதுவாக மிதமான சுடு தண்ணீரில் ஊற வைத்து கரைத்து பார்த்தால் ரொம்பவே சுலபமாக கரைந்து விடும். சாதம் கொதிக்கும் பொழுது அதிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து புளியை ஊற வைத்தால் காத்திருக்காமல் நொடியில் புளியை கரைத்து விடலாம். கரைக்கும் போது அதிகம் பிசைந்து கரைத்தால் குழம்பு கசப்பு தட்டிவிடும்.

- Advertisement -

இப்படி கரைத்து வடிகட்டி அதன் சாற்றை பயன்படுத்திவிட்டு மீதமிருக்கும் சக்கையை என்ன செய்வது? என்று தெரியாமல் பலரும் குப்பைத் தொட்டியில் போட்டு விடுவது உண்டு. இன்னும் சிலர் அந்த புளியை ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் குழம்பு வைக்கும் பொழுது மறுபடியும் கரைத்து வரும் கரைசலை உபயோகப்படுத்திக் கொள்வார்கள். புளியை இப்படி பிரிட்ஜில் வைத்து மீண்டும் பயன்படுத்தலாமா? என்று கேட்டால் தாராளமாக பயன்படுத்தலாம்.

புளி அவ்வளவு சீக்கிரமாக கெட்டுப் போகும் ஒரு பொருளல்ல. கெட்டியாக கரைத்த புளியை கொண்டு குழம்பு வைத்தால் நான்கு நாட்கள் கூட வைத்து சாப்பிடலாம். சீக்கிரம் கெட்டுப் போகாது எனவே ஒருமுறை பயன்படுத்திய புளியை மீண்டும் பயன்படுத்துவதில் பிரச்சனை இல்லை. ஆனால் அதற்கு பதிலாக இப்படி கூட நீங்கள் ஒருமுறை செய்து பார்க்கலாம். மீதமிருக்கும் இந்த புளி சக்கையை ஒரு 2 மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற விட்டு விடுங்கள். புளி மூழ்கும்படி தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விடுங்கள். அதிகபட்சம் ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரை ஊற விட்டு பின்னர் கரைத்தால் மீண்டும் அதிலிருந்து புளி கரைசல் கிடைக்கும்.

- Advertisement -

இந்த புளி கரைசலை நன்கு ஒரு பில்டரில் வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டிய இந்த தண்ணீருடன் உங்கள் வீட்டில் அதிகம் அழுக்கு படிந்துள்ள அல்லது கருமை படிந்துள்ள பித்தளை, செம்பு ஆகிய பாத்திரங்கள் ஏதாவது இருந்தால் அதனை போட்டு வையுங்கள். அப்படி எதுவும் உங்களிடம் இல்லை என்றால் கேஸ் பர்னரை தனியாக எடுத்து போட்டு வையுங்கள். இந்தப் பொருள் முழுவதும் தண்ணீரில் மூழ்கும்படி தேவையான அளவிற்கு சாதாரண தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு இரவு முழுவதும் அதிகபட்சம் 8 லிருந்து 12 மணி நேரம் வரை நன்கு இந்த புளி நீரில் ஊறி இருக்க வேண்டும். 12 மணி நேரம் கழித்து நீங்கள் எடுத்து பார்த்தால் கொஞ்சம் கூட கை வைக்காமல் புத்தம் புதியதாக பர்னர் மின்னத் துவங்கும். பர்னர் மட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் இருக்கும் வேறு ஏதாவது பாத்திரங்கள் கூட பித்தளையில் போட்டு வைத்தால் நிச்சயம் உங்களுக்கு கை வலிக்காமல் சுத்தமாகிவிடும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.

- Advertisement -