வரப்போகும் தமிழ் புத்தாண்டின் குரு பலன். திருமண யோகம் எந்த ராசிக்கு காத்துக்கொண்டிருக்கிறது?

guru for marraige

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு கடந்த வருடம், குரு பகவான் எட்டில் இருந்து, ஒன்பதாம் வீட்டிற்கு இடம்பெயர்ந்து உங்கள் ராசிக்கு குரு பலனை கொடுத்தார். குரு அதிசாரமாக இடம்பெயரும் போது ஆனி மாதம் வரை குடும்ப ஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும் பார்க்கப் போகின்றார். அதன்பின்பு ஆனி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை ஒன்பதாம் இடத்திற்கு வந்து உங்கள் ராசியை பார்க்கும் போது உங்களது வாழ்க்கை சுகமாக இருக்கும். அதாவது கார்த்திகை மாதம் தொடங்கியவுடன் நேரடியாக உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு செல்வதால் ராஜயோகத்தை நீங்கள் பெற போகிறீர்கள். உங்களது வீட்டில் கெட்டி மேள சத்தம் நிச்சயமாக கேட்கும். உங்களுக்கு பல சுகங்களை குருபகவான் தேடி தரப்போகிறார். உங்கள் மனதிற்கு பிடித்த துணையுடன் உங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க நல்ல வருடமாக இது அமையப்போகிறது.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு அஷ்டமத்து குரு இருந்தாலும், இரண்டாம் வீட்டையும், நான்காம் வீட்டையும் குரு பார்க்கப் போகின்றார். பயம் வேண்டாம். குருபலன் உங்களுக்கு வந்துவிட்டது. அதிசாரமாக சென்றாலும், கார்த்திகை மாதம் குரு பெயர்ச்சி நடந்தாலும் உங்களுக்கு நிச்சயமாக திருமணம் நடப்பது உறுதி. தைரியமாக கல்யாண பேச்சுக்களை தொடங்கலாம். எந்தவிதமான தடங்கலும் இன்றி திருமணம் நடந்து முடியும். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். திருமணத்திற்குத் தேவையான பணமும் எந்த வகையிலாவது உங்கள் கைகளுக்கு வந்து சேரும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுனராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி உள்ளது. பயம் வேண்டாம். குருவின் பார்வை உள்ளது. அதிசாரமாக மகர ராசிக்கு செல்லப்போகும் குரு, உங்களுடைய ராசிக்கு 2-ஆம் இடத்தைப் பார்க்கிறார். அதாவது ஆனி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை உங்களுடைய ராசிக்கு குருபார்வை இருக்கின்றது. கார்த்திகை மாதம் குருபெயர்ச்சி நடந்து மகர ராசிக்கு குருபகவான் சென்ற பின்பு குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீது விழும். வீட்டில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும். நீண்ட நாட்களாக பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. திருமண பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம். இந்த வருடம் உங்களுக்கு சுகமான வருடமாக தான் அமையப்போகிறது.

கடகம்
Kadagam Rasi
கடகராசிக்காரர்களுக்கு கண்டக சனி நடந்து கொண்டிருக்கின்றது. இருந்தாலும் பயம் வேண்டாம். அதிசார குரு பெயர்ச்சி ஆகும்போது உங்கள் ராசிக்கு குருவின் பார்வை கிடைக்கப்போகிறது. ஆனி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை தனுசு ராசியைப் பார்க்கும் குரு, குடும்ப ஸ்தானத்தை பார்க்கின்றார். இதனால் பயம் இல்லாமல் வரன் தேடலாம். திருமணத்தில் எந்த தடையும் ஏற்படாது. மனதிற்குப் பிடித்த வரன் நிச்சயமாக அமையும். இதனால் திருமணத்தில் இருந்த தடை நிச்சயமாக உங்களுக்கு இந்த வருடம் நீங்கிவிடும். இந்த வருடம் சந்தோஷமான வருடமாக அமையப்போகிறது.

சிம்மம்
Leo zodiac sign
சிம்மராசிக்காரர்களுக்கு புது வருடத்தில் குருபலன் வந்துவிட்டது. இந்த வருடம் உங்களுக்கு பொன்னான வருடமாக தான் அமையும். கடந்த வருடம் குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் அனைத்தும் இந்த வருடம் முழுமையாக தீர்ந்து விடும். வீட்டில் சுபகாரியங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். கல்யாணம் விரைவில் கைகூடும். உங்களது மனதிற்குப் பிடித்த வரன் கூடியவிரைவில் அமையப்போகிறது. வாழ்க்கைத்துணையின் கரங்களை பிடிக்க தயாராக இருங்கள். நீங்கள் மன நிறைவோடு புது வருடத்தை வரவேற்கலாம்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரை மற்றும் கார்த்திகை மாதம் முதல் பங்குனி மாதம் வரை குருவின் பார்வை கிடைக்கப்போகிறது. இந்த மாதங்களில் திருமணத்திற்கு வரன் அமைய அதிக வாய்ப்பு உள்ளது. திருமணத்தைப் பேசி நிச்சயம் செய்து வைத்துக்கொள்ளலாம் உங்கள் கையில் இருக்கும் பணம் திருமணத்திற்காக செலவு ஆகப்போகின்றது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே சந்தோஷமான வருடமாக தான் இந்த வருடம் உங்களுக்கு அமையப் போகிறது.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு திருமணத்தில் சற்று தடை ஏற்படுவது போல் இருக்கும். ஆனால் ஆனி மாதம் முதல் கார்த்திகை மாதத்திற்குள் சிலருக்கு திருமண காரியங்கள், அவசர அவசரமாக முடி வாக்கப்பட்டு, அவசர அவசரமாக கண்களை மூடி திறப்பதற்குள் முடிந்திருக்கும். அதாவது சுய ஜாதகத்தில் குரு பகவான் வலிமையோடு இருக்கும் பட்சத்தில் சுப காரியங்கள் விரைவாக நடந்துவிடும். பயம் வேண்டாம். இந்த வருடம் உங்களுக்கு சிறப்பான வருடமாக தான் அமையும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தற்போது ஏழரைச்சனி முடிந்திருக்கின்றது. குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், பிரச்சனைகள் வரும் என்று பயப்பட வேண்டாம். உங்களின் ராசிக்கு ஏழாம் வீடான ரிஷப ராசியை குரு பார்க்கிறார். திருமண பேச்சுவார்த்தை தொடங்கலாம். சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். வழக்கு வரை சென்ற குடும்பப் பிரச்சினைகள் கூட நல்ல முடிவுக்கு வரப்போகும் காலம் இந்த வருடம். இந்த வருடம் உங்களுக்கு சந்தோஷமான வருடமாக தான் அமையப்போகிறது.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வை 7ம் வீட்டில் இருப்பதால் சங்கடங்கள் ஏற்படும் என்ற எந்த பயமும் தேவையில்லை. இந்த வருட அதிசார பெயிற்சியும், கார்த்திகை மாதம் நடைபெறப்போகும் நேரடி குரு பெயற்சியும் உங்களுக்கு நல்ல வாழ்க்கையை தரப்போகிறது. திருமணத்தை முடிவு செய்ய, முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். உங்களின் ஜாதகத்தை பொருத்து திருமணம் நல்லபடியாக முடிய அதிக வாய்ப்பு உள்ளது. பயப்படாமல் திருமண பேச்சை தொடங்குங்கள். இந்த வருடம் உங்களுக்கு நல்ல வருடமாக தான் அமையப்போகிறது.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்கள் ஏழரை சனி, ஜென்ம சனி இருந்தாலும் 30 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு தைரியமாக திருமண பேச்சுவார்த்தையை தொடங்கலாம். யோசித்து நிதானமாக முடிவினை எடுங்கள். உங்களுடைய ராசிக்கு 7-ம் வீடான கடக ராசியில் குருவின் பார்வை விழும் போது நிச்சயமாக உங்களுக்கு திருமணம் நடந்து விடும். அவசரப்படாமல் திருமண பேச்சை ஆரம்பித்து, தைரியமாக செயல்படுத்தலாம். பொறுமை அவசியம் தேவை. இந்த வருடம் உங்களுக்கு நல்ல வருடமாக தான் அமையப் போகிறது.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரைச்சனி தொடங்கியுள்ளது. இந்த அதிசார குரு பெயர்ச்சியால் உங்களுக்கு சுகமான வாழ்க்கை தான் கிடைக்கும். நீங்கள் தொட்ட காரியம் வெற்றி அடையும். இந்த வருடம் உங்களுக்கு திருமணம் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. உங்களுடைய புது துணையுடன் புதுவருடத்தை வாழ்வதற்கு தயாராகிக் கொள்ளுங்கள். இந்த வருடம் உங்களுக்கு நல்ல வருடமாக அமைய வாழ்த்துக்கள்.

மீனம்
meenam
இந்த வருடம் உங்களுக்கு சந்தோஷமான வருடமாக தான் அமையப்போகிறது. மனதிற்கு பிடித்தவர்களை கைபிடிக்க போகிறீர்கள். உங்களுடைய குடும்ப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுகின்றது. ஆனி மாதம் முதல் கார்த்திகை மாதத்திற்குள் நிச்சயமாக கெட்டி மேள சத்தம் உங்கள் வீட்டில் கேட்கும். திருமணப் பேச்சுவார்த்தை விரைவாக தொடங்கி, உங்களது வாழ்க்கையை நல்ல படியாக இந்த வருடம் தொடங்குங்கள். உங்கள் மனதிற்குப் பிடித்த வாழ்க்கைத்துணை கட்டாயமாக இந்த வருடம் அமைந்துவிடும்.

இதையும் படிக்கலாமே
அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் அதிசார குரு பெயர்ச்சி. யோகம் பெற போகும் லக்னக்காரர்கள் யார்? யார்?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Guru thisai palangal in Tamil. Guru palangal in Tamil. Guru palan 2020. Guru palan Tamil. Guru palan for marriage.