தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020 – கடகம், சிம்மம், கன்னி.

2020 Tamil new year rasi palan Kadagam

கடகம்:

Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு முன்னேற்றத்தைத் தரக்கூடிய வருடமாக தான் பிறக்கப் போகின்றது. உங்கள் முயற்சிகள் அனைத்தும் இந்த வருடம் நிறைவேறி, வெற்றிப் பாதையில் செல்லும். வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். பணவரவு சீராக இருக்கும். உங்களது பொருட்களை மட்டும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்களது அலுவலகப் பணியில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு ரகசிய விஷயங்களையும், உங்களுடன் பணிபுரிபவர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளக் கூடாது. அனாவசியமாக ரகசியங்களை வெளியில் கூறுவதன் மூலம் உங்களுக்கு பிரச்சினை வரும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். சொந்தத் தொழிலை விரிவுபடுத்த, புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

குறிப்பாக அரசாங்க வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். கடக ராசிகாரர்கள் அரசாங்க வேலைக்காக வைக்கப்படும் தேர்வுகளை தைரியமாக எழுதலாம். பெண்களுக்கு இந்த வருடம் அமோகமான வருடமாக தான் அமையப் போகின்றது. தங்களது சேமிப்பின் மூலம் பல வகையான, விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

பரிகாரம்:
தினம் தோறும் முருகர் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

சிம்மம்:

- Advertisement -

simmam

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் யோகமான வருடமாக தான் பிறக்கப் போகின்றது. இதுநாள் வரை கஷ்டப்பட்டு வந்த பல வகையான பிரச்சினைகளுக்கு இந்த வருடம் தீர்வு கிடைத்துவிடும். வருமானம் கணிசமாக உயரும். உங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளை மட்டும் சற்று கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். உறவினர்களின் வருகையால் வீட்டில் சந்தோஷம் பிறக்கும். சொந்தத் தொழில் சற்று மந்தமாகத்தான் செல்லும். விடாமுயற்சி வெற்றியைத் தரும் என்பதை மறந்துவிடாதீர்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சம்பளமும் அதிகரிக்கும். பதவி உயர்வும் கிடைக்கும். நீங்கள் கடன் தொகைக்காக விண்ணப்பித்தால், கடன் கிடைக்கும். முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பிரச்சனை என்று வரும்போது மட்டும் அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்காமல், சற்று நிதானமாக சிந்தித்து முடிவெடுப்பது நல்ல பலனைத் தரும். பெண்களுக்கு இந்த வருடம் அமோகமாக இருக்கப்போகிறது. குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பரிகாரம்:
தினம்தோறும் அம்மனை நினைத்து வீட்டிலேயே தீபமேற்றி வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

கன்னி:

Kanni Rasi

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் வெற்றியைத் தரும் வருடமாக தான் பிறக்கப் போகின்றது. உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றியை அடையும். சொத்துக்கள் வாங்குவது விற்பது என்றால் அதில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்தவரை பண பரிமாற்ற விஷயங்களில் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டியது அவசியம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சியில் வெற்றி அடைவீர்கள். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கதவை தட்டும். வாய்ப்பை நழுவ விடாதீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க நேரம் வந்துவிட்டது. வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் தொடங்கலாம். திருமணத்தடை நீங்கும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.

உங்களுடைய அம்மாவின் உடல்நலனில் மட்டும் சற்று கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த வருடம் சந்தோஷமான வருடமாக தான் அமையும். மன அமைதியான குடும்ப சூழ்நிலையை உருவாக்குவது, பெண்கள் கையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து நடந்து கொள்வது நல்லது.

பரிகாரம்:
தினம் தோறும் அனுமன் வழிபாடு மன வலிமையை அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே
தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020 – மேஷம், ரிஷபம், மிதுனம்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Tamil new year Rasi palan 2020, Tamil puthandu Rasi palangal 2020, Sarvari tamil puthandu Rasi palan 2020. Tamil puthandu rasi palan 2020 in Tamil.