- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதமிழ் புத்தாண்டு அன்று சொல்ல வேண்டிய சிவ மந்திரம்

தமிழ் புத்தாண்டு அன்று சொல்ல வேண்டிய சிவ மந்திரம்

- Advertisement -

நாளை ஏப்ரல் 14ஆம் தேதி, சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் வருடப்பிறப்பு பிறக்கவிருக்கிறது. இந்த தமிழ் வருடப்பிறப்பு, திங்கட்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால் இந்த நாளில் நாம் செய்யக்கூடிய சிவ வழிபாட்டில் இரட்டிப்பு பலன் கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் இந்த தமிழ் வருடப்பிறப்பு, சுவாதி நட்சத்திரத்தில் வந்திருக்கிறது. இதனால் இந்த நாளில் நரசிம்மரையும் வழிபாடு செய்ய வேண்டும்.

சிவன் பெருமாள் இரு பெறும் தெய்வங்களின் ஆசிர்வாதமும் நமக்கு ஒரு சேர கிடைக்கக்கூடிய தமிழ் வருடப்பிறப்பாக இந்த வருடம் அமைந்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கிறது. நாளைய தினம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான சிவ வழிபாடு, சொல்ல வேண்டிய எளிமையான சிவ மந்திரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் கடன் சுமையிலிருந்து வெளிவரலாம். வறுமையில் இருந்து வெளிவரலாம். இந்த வருடம் முழுவதும் பணவரவு அதிகரிக்கவும், அந்த ஈசனின் ஆசீர்வாதம் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். நாளைய தினம் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன, செய்ய வேண்டிய சிவ வழிபாடு என்ன, பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

நாளைய தினம் தமிழ் வருட பிறப்பு அன்று காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு, வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று வில்வ இலைகளை வாங்கிக் கொடுத்து, குடும்ப உறுப்பினர்களின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். அந்த சிவன் கோவிலிலேயே சிறிது நேரம் அமர்ந்து சிவபெருமானுடைய இந்த மந்திரத்தை சொல்லலாம். 27 முறை இந்த மந்திரத்தை சொன்னாலும் போதும். ஆனால் ஒரு விஷயம் மறக்கக்கூடாது ஒரு முறை இந்த மந்திரத்தை படித்தாலும் ஆத்மாற்றமாக படிக்க வேண்டும்.

- Advertisement -

எங்களுக்கு கோவிலுக்கு செல்ல வாய்ப்பு இல்லை என்பவர்கள் என்ன செய்வது? வீட்டிலேயே விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ஈசனை மனதார நினைத்து கொஞ்சம் வில்வ இலைகளை வாங்கி வந்து விளக்கிற்கு அர்ச்சனை செய்து, இந்த மந்திரத்தை சொன்னாலும் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு பணத்திற்கு தட்டுப்பாடு என்பது வராமல் இருக்கும்.

பண பிரச்சினைகளும் படிப்படியாக குறைவதை உணருவீர்கள். காரணம் அந்த குபேரருக்கே பணத்தை கொடுத்து நம்முடைய சிவபெருமான்தான். ஐஸ்வரியேஸ்வரரால் அள்ளி வழங்கப்பட்ட செல்வங்கள் தான் இன்று பூலோகம் முழுவதும் பரவி இருக்கிறது. அந்த ஐஸ்வர்யத்தில் நாமும் கொஞ்சம் பெற வேண்டும் என்றால் இந்த பண வசிய மந்திரத்தை சொல்ல வேண்டும். தமிழ் வருட பிறப்பு அன்று சொல்ல வேண்டிய மந்திரம் இதோ.

- Advertisement -

பண வசிய சிவ மந்திரம்

ஓம் நம சிவாய, சர்வ குபேர வசி வசி ஓம்

இதையும் படிக்கலாமே: துயரங்களை விலக்கும் துர்க்கை தீபம்

இவ்வளவு தாங்க. நாளைய தினம் இந்த வழிபாட்டை மறக்காமல் செஞ்சுருங்க. இந்த மந்திரத்தை மறக்காமல் சொல்லிடுங்க. சித்திரை மாதம் வெயில் கொளுத்தும் மாதம். உங்களால் முடிந்த அளவுக்கு இந்த சித்திரை மாதத்தில் செருப்பு தானம் குடைதானம், நீர்மோர் தானம், தண்ணீர் தானம், முடிந்தால் ரொம்பவும் ஏழையாக இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த குளிர்ச்சி தரும் பழ வகைகளை கூட வாங்கி தானம் கொடுக்கலாம். எந்த அளவுக்கு இந்த மாதம் நீங்கள் தானம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுடைய பிரச்சனைகள் குறையும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்