துவங்கக் கூடிய புதிய வருடம் உங்களுக்கு நல்ல பலன் தர கூடியதாக அமைய வருடத்தின் முதல் நாள் அன்று தவறாமல் வாங்க வேண்டிய ஐந்து பொருட்கள்

- Advertisement -

எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும் அதன் துவக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே தான் அனைத்து விழாக்களின் போதும், சுப நிகழ்ச்சிகளின் போதும் அதனை துவங்குவதற்கு முன்னர் பூஜை செய்து துவங்குகிறோம். நாம் செய்யக்கூடிய அந்த காரியம் நன்மையாக அமைய வேண்டும், அதனால் எவருக்கும் தீங்கு விளையக் கூடாது என்பதுதான் இதன் முக்கிய நோக்கமாகும். அவ்வாறு செய்யத் துவங்கும் ஒவ்வொரு விஷயமும் இனிதே முடிந்தால் மட்டுமே அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். அதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விட்டால் அனைவரின் மனமும் துன்பத்தில் மூழ்கிவிடும். அவ்வாறு வருடத்தின் துவக்கம் இனிமையாக அமைந்தால் அந்த வருடம் முழுவதுமே நன்மையாக அமையும். எனவே புதிய வருடப்பிறப்பு அன்று இந்த ஐந்து பொருட்களை தவறாமல் வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும். வாருங்கள் அது என்னென்ன பொருட்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வருகின்ற 14.4.2022 தமிழ் வருடப்பிறப்பு சித்திரை முதல்நாள் துவங்குகிறது. இன்றைய தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாக அமைந்துள்ளது. வருடத்தின் முதல் நாளான இன்றைய தினம் துவங்கக் கூடிய இந்த விசேஷ நாள் மக்கள் அனைவருக்கும் நன்மை அளிக்கக் கூடிய சுப நாளாக உள்ளது.

- Advertisement -

சித்திரை மாதம் முதல் நாள் வியாழக்கிழமை பிரதோஷ தினமாக உள்ளது. பிரதோஷ தினம் சிவனுக்கு உரிய தினமாகும். அதிலும் வியாழக்கிழமை வருகின்ற பிரதோஷம் மிகவும் விசேஷமானதாக அமைகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகமும் அன்றைய தினத்தில் அமைந்துள்ளது. எனவே பல விஷயங்கள் ஒன்று சேர அமைந்துள்ள இன்றைய தினம் வருடப்பிறப்பு துவங்குவதால் அனைத்தும் நன்மையாகவே நடைபெறும்.

எப்போதும் புதிய வருடப்பிறப்பு அன்று வீட்டில் வழக்கம் போல் பூஜை செய்வதற்காக பூஜை அறையை சுத்தம் செய்து, வீட்டை துடைத்துவிட்டு, பூஜை பாத்திரங்கள் மற்றும் படங்களுக்கு மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து, பூ சூடி அலங்காரம் செய்ய வேண்டும். பின்னர் பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைக்க வேண்டும்.

- Advertisement -

அதன்பிறகு கடைக்குச் சென்று முதலில் வாங்க வேண்டிய ஒரு முக்கியமான பொருள் என்னவென்றால் கல்லுப்பு. மகாலட்சுமி அம்சமாகும். இந்த உப்பு வீட்டில் எப்பொழுதும் நிறைந்திருந்தால் பணத்திற்கான குறைவு என்பதே ஏற்படாது. அடுத்ததாக வருடம் முழுவதும் இனிமையாக அமைய வேண்டும் என்று வெல்லம், நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு வாங்க வேண்டும்.

அடுத்ததாக மங்கலப் பொருளாக மஞ்சள் வாங்க வேண்டும். பின்னர் ராஜகனியான எலுமிச்சை பழத்தை வாங்கி கொள்ள வேண்டும். இறுதியாக பச்சை அரிசியை வாங்க வேண்டும். இவை ஐந்து பொருட்கள் தான் முதல் வருடத்தில் வாங்க வேண்டிய முக்கியமான பொருட்களாகும். அடுத்ததாக இறைவனுக்கு மிகவும் பிடித்த முக்கனியான மா, பலா, வாழை இவற்றையும் வாங்கிக்கொள்ள வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் பூஜையில் வைத்து இறைவனுக்கு படைக்க வேண்டும்.

- Advertisement -