சித்திரை முதல் நாள் பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள்

gothumai
- Advertisement -

நம்மை தொடர்ந்து வரும் கஷ்டங்கள் எல்லாம் இந்த சோபக்கிருது வருடத்தோடு முடிந்து போகட்டும். வரக்கூடிய குரோதி ஆண்டு இந்த உலகத்திற்கும், உலக மக்களுக்கும் நன்மை தரக்கூடிய வகையில் அமைய வேண்டும் என்று அந்த இறைவனை பிரார்த்தனை செய்துகொண்டு அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டு, இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் பயணம் செய்வோம். நாளை பிறக்கவிருக்கும் தமிழ் புத்தாண்டில் தவறாமல் நாம் கடைபிடிக்க வேண்டிய 5 விஷயங்களை தெரிந்து கொள்வோமா.

நாளை தமிழ் வருட பிறப்பிற்கான நல்ல நேரம்

நாளை 14-04-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7:50 மணியிலிருந்து 9:00 மணி வரை நல்ல நேரம். அப்படி இல்லை என்றால் 10:00 மணி முதல் 11:15 மணி வரை வழிபாட்டை மேற்கொள்ளலாம். நாங்கள் காலை சூரிய உதயத்திற்கு முன்பே வழிபாட்டை முடித்துக் கொள்வோம் என்றால் காலை 6 மணிக்கு முன்பு நீங்கள் பூஜை செய்யலாம். அதில் தவறு கிடையாது.

- Advertisement -

நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று சித்திரை முதல் நாள் பிறக்கவிருகின்றது. ஆகவே அனைவரும் நாளை சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து குடித்து முடித்துவிட்டு தமிழ் புத்தாண்டு கனி காணுதல் வழிபாட்டை செய்ய வேண்டும். குறிப்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உரிய நாள் என்பதால், நாளைய தினம் எல்லோரும் சூரியன் நமஸ்காரம் செய்ய வேண்டும். இது நமக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நல்ல வேலையையும் நல்ல தொழிலையும் நல்ல லாபத்தையும் பெற்று தரும்.

இரண்டாவது விஷயம். தமிழ் புத்தாண்டு என்றாலே எல்லோர் மனதிலும் சந்தோஷம் இருக்கும். உங்களுடைய சொந்த பந்தங்களுடன் இந்த புத்தாண்டை சேர்ந்து கொண்டாடுங்கள். சொந்த பந்த வீடுகளுக்கு சென்று, இனிப்புகளை பரிமாறிக் கொள்ள வேண்டும். உங்களுடைய சிறியவர்களுக்கு உங்கள் கையால் ஆசிர்வாதம் செய்து பணம் கொடுங்க.

- Advertisement -

பத்து ரூபாய் கொடுத்தாலும் போதும். உங்களோடு பெரியவர்களாக இருந்தால் அவர்களுடைய காலில் விழுந்து ஆசிர்வாதத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் ஆசிர்வாதமாக பெற்ற பணத்தை செலவு செய்யாதீங்க. உங்களுடைய பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் நிறைய பணம் சேரும்.

உங்களுக்கு தொழிலில் நிறைய கஷ்டம் இருக்கு வேலையில் பிரச்சனை இருக்கிறது எனும் பட்சத்தில் நாளைய தினம் சூரிய பகவானை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்த கோதுமையை வாங்கி தானம் கொடுங்கள். 1 கிலோ கோதுமை 5 கிலோ கோதுமை உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு வாங்கி தானம் கொடுங்கள். யாருக்கு தானம் கொடுக்கலாம். ஆசிரமங்களுக்கு தானம் கொடுக்கலாம். கோவிலில் இருக்கும் புரோகிதர்களுக்கு இந்த கோதுமையை தானம் செய்யலாம் அது உங்களுடைய விருப்பம்.

- Advertisement -

எந்த நாளாக இருந்தாலும் எல்லா மனிதர்களுக்கும் மூன்று வேளை பசிப்பது என்பது இயல்பு. ஒருவருடைய வாழ்க்கையில் ஒரு வேலை பசியை ஆற்றுவதற்காகவாவது நாளைய தினம் நீங்கள் யாருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். உணவுக்கே வழி இல்லாமல் இருப்பவர்களுக்கு 4 இட்லி வாங்கி நாளை தானம் செய்தாலும் அது உங்கள் பரம்பரைக்கு புண்ணியத்தை சேர்த்து விடும்.

இதோடு சேர்த்து நாளை ஏதேனும் ஏதாவது ஒரு நல்ல பழக்கத்தை தொடங்குவதாக இருந்தால் தொடங்கலாம். உங்களிடம் இருக்கும் கெட்ட பழக்கத்தை விடுவதாக இருந்தால் நாளை முதல் அந்த கெட்ட பழக்கத்தை விட்டு விடுங்கள்.

நாளைய தினம் தமிழ் புத்தாண்டாக இருந்தாலும், மங்களகரமான பொருட்களை முந்தைய நாளை வாங்கி பூஜையறையில் அலங்கரித்து விடுவோம். இருந்தாலும் தமிழ் வருட பிறப்பு அன்று பணம் கொடுத்து புதுசாக கல் உப்பு, மல்லிகைப்பூ, தேன் இந்த மூன்று பொருட்களையும் வாங்க வேண்டும். இது அல்லாமல் விரலி மஞ்சள் குங்குமம் வீட்டுக்கு தேவையான இன்னும் சில மங்களகரமான பொருட்களை உங்களால் வாங்க முடியும், உங்களுக்கு தேவை இருக்கிறது என்றால் அதையும் வாங்கி பலனடையலாம்.

இதையும் படிக்கலாமே: பண வரவுக்கு சித்திரை முதல்நாள் செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த ஆண்டு அனைவருக்கும் சந்தோஷம் நிறைந்த ஆண்டாக அமையும். மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்வோம்.

- Advertisement -