மொறுமொறு மொளகா பஜ்ஜி இப்படி செஞ்சு பாருங்க ரோட்டு கடை பஜ்ஜி கூட தோத்து போய்விடும்! டேஸ்டியான பஜ்ஜிக்கு Ratio என்ன?

- Advertisement -

சுட சுட பஜ்ஜி செய்து சாப்பிட்டால் வயிறும், மனமும் நிரம்பி போய்விடும். பஜ்ஜிக்கு மயங்காத மனிதர்களே இருக்க முடியாது. விசேஷம் என்றாலும் பஜ்ஜி, விழா என்றாலும் பஜ்ஜி செய்து நம்மவர்கள் அசத்துவார்கள். அது மட்டுமல்லாமல் பஜ்ஜி என்று சொன்னாலே பெண் பார்க்கும் படலம் தான் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வரும். திருமணத்திற்கு பெண் பார்க்க செல்பவர்கள் கட்டாயம் பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் சாப்பிட்டு விட்டு தான் வருவார்கள். இந்த சுவையான மொறுமொறு பஜ்ஜி இப்படி செஞ்சு பாருங்க, செம டேஸ்டா இருக்கும். டேஸ்டியான பஜ்ஜி செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

மொறுமொறுவென்று வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி சுடுவதாக இருந்தாலும் இந்த முறையில் மாவு கலந்து செய்து பாருங்கள், இதற்காக கடைகளில் அதிக காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான பஜ்ஜி மாவு எப்படி கலக்குவது?

- Advertisement -

பஜ்ஜி மாவு செய்ய தேவையான பொருட்கள்:
கடலை மாவு – ஒரு கப், பச்சரிசி மாவு – கால் கப், அரை டீஸ்பூன் – சீரகத் தூள், மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், சோடா உப்பு – 2 சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.

பஜ்ஜி மாவு செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கு கடலைமாவு சேர்த்துக் கொள்ளுங்கள். கடலை மாவு சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள். பிறகு அதில் கால் கப் அளவிற்கு மட்டும் பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் பஜ்ஜி ரொம்பவே சுவையாக வரும். காரத்திற்கு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

உங்களிடம் காஷ்மீரி மிளகாய்த்தூள் இருந்தால், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், காஷ்மீரி மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். காஷ்மீரி மிளகாய்த்தூள் நல்ல ஒரு நிறத்தை அடர்த்தியாக கொடுக்கும், இதனால் பஜ்ஜி பார்ப்பதற்கே எச்சில் ஊற வைக்கும். ஜீரணத்திற்கு கால் டீஸ்பூன் அளவிற்கு சீரகத்தை இடித்து அல்லது சீரகத்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். 2 சிட்டிகை அளவிற்கு சோடா உப்பு சேர்த்து கலந்து கொண்டால் பஜ்ஜி உப்பி வருவதற்கு ஏதுவாக இருக்கும். சோடா உப்பு சேர்க்க விருப்பமில்லாதவர்கள் இதனை தவிர்த்து விடலாம். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கெட்டியாக கரைத்துக் கொள்ளுங்கள்.

பஜ்ஜி மாவு கலந்து வைத்த உடனேயே பஜ்ஜி போட்டு விடக்கூடாது. ஒரு பத்து நிமிடம் நன்கு ஊற விட வேண்டும். அதன் பிறகு நீங்கள் எந்த பஜ்ஜி போட போகிறீர்களோ, அதற்கு ஏற்ப காய்கறிகளை சீவிக் கொண்டு மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு எடுத்தால் சுவையான பஜ்ஜி ரெடி! அதிலும் இந்த மாவு கொண்டு மிளகாய் பஜ்ஜி செய்து பார்த்தால் அடடா என்று சொல்லிக் கொண்டே சாப்பிடுவீர்கள். மொளகா பஜ்ஜி போடும் பொழுது எப்பொழுதும் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு பின்னர் பஜ்ஜி போடுங்கள். வாழைக்காய் பஜ்ஜி போடும் பொழுது இரண்டு புறமும் தோல் பகுதி ஒரளவுக்கு இருக்குமாறு பற்றி போடுங்கள்.

- Advertisement -