குண்டு குண்டு குலோப்ஜாம் செய்ய உங்க வீட்டில் 1 பிஸ்கட் பேக்கெட் இருந்தா போதும்! 15 நிமிஷத்துல இப்படி செஞ்சு அசத்துங்க.

biscuit-gulab-jamun
- Advertisement -

குண்டு குண்டு சுவையான குலாப் ஜாமுன் செய்வதற்கு குலோப்ஜாமூன் மாவு வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களிடம் ஒரு பாக்கெட் பிஸ்கட் இருந்தால் ரொம்ப ரொம்ப சுலபமாக சுவையான குலாப் ஜாமுன் குழந்தைகளுக்கு இன்ஸ்டண்டாக செய்து கொடுத்து அசத்தலாம். ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வைத்து எப்படி அருமையான, டேஸ்டியானா குலோப் ஜாமுன் செய்வது? என்பதைத் தான் இந்தப் பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

பிஸ்கட் குலோப் ஜாமுன் செய்ய தேவையான பொருட்கள்:
மேரி பிஸ்கட் – பதினைந்து, சூடான பால் – அரை கப், சர்க்கரை – ஒரு கப், தண்ணீர் – ஒரு கப், ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன், சோடா உப்பு – ஒரு பின்ச்.

- Advertisement -

பிஸ்கட் குலோப் ஜாமூன் செய்முறை விளக்கம்:
பிஸ்கெட் குலோப் ஜாமுன் செய்வதற்கு முதலில் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய பொருள் மாரி பிஸ்கட்(marie gold) குறைந்தபட்சம் 15 பிஸ்கட்டுகள் இருந்தால் போதும் சூப்பராக இந்த குலோப் ஜாமுன் செய்து அசத்தி விடலாம். 15 பிஸ்கட் துண்டுகளை எடுத்து ஒரு நான்ஸ்டிக் பேனில் போட்டு கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து பேனை தூக்கி அடுப்பில் வையுங்கள். ஒருபுறம் நன்கு கொதிக்க வைத்த பாலை அரை கப் அளவிற்கு எடுத்து பிஸ்கட்டில் ஊற்றிக் கொள்ளுங்கள். பாலை ஊற்றியதும் பிஸ்கெட் கரைய ஆரம்பிக்கும்.

கரைந்து கொஞ்சம் கெட்டியானதும் கால் ஸ்பூன் அளவுக்கு ஏலக்காய்த் தூளும் அதனுடன் ஆப்ப சோடா ஒரு பீன்ச் அளவிற்கும் சேர்த்து கலந்து விடுங்கள். இது குலோப்ஜாமுன் சாப்பிடும் பொழுது நல்ல ஒரு வாசனையைக் கொடுக்கும். அதன் பிறகு மீண்டும் நன்கு அழுத்தம் கொடுத்து கெட்டியாக பிசைந்து கொள்ளுங்கள். குலோப்ஜாமூன் மாவு பிசையும் பொழுது எவ்வளவு சாஃப்டாக இருக்குமோ, அந்த அளவிற்கு இந்த மாவு இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப பிஸ்கட் மாவை பிசைந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் ஸ்பூன் அளவிற்கு பால் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் வெடிப்புகள் இல்லாமல் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் எண்ணெயை காயவிட்டு அதில் ஒவ்வொரு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். பிஸ்கட் உருண்டைகள் என்பதால் ரொம்பவும் சீக்கிரமாக வெந்து விடும், எனவே ரொம்ப நேரம் வறுக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. உருண்டைகளை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இப்பொழுது சர்க்கரை பாகு தயாரிக்க வேண்டும். சூடாக இருக்கும் ஒரு கப் தண்ணீரில் ஒரு கப் அளவிற்கு சர்க்கரையை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

சாதரண குலாப் ஜாமூனிற்கு கம்பிப் பதம் அளவிற்கு சர்க்கரை பாகு தயாரிப்பார்கள். ஆனால் இது பிஸ்கட் உருண்டைகள் என்பதால் சீக்கிரமே உரிந்து கொள்ளும். இதற்காக நிறைய நேரம் கொதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. லேசாக தண்ணீர் மாதிரி இல்லாமல் பிசு பிசு என்று கெட்டியாக சர்க்கரைப்பாகுவாக மாறியதும் அடுப்பை அணைத்துவிடுங்கள். பிறகு இந்த உருண்டைகளை எல்லாம் பாகில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்தால் போதும்! எல்லா சுகர் சிரப்பையும் பிஸ்கட் உருண்டைகள் உரிந்து கொள்ளும். அதன் பிறகு சாப்பிட்டு பாருங்க சாஃப்டான டேஸ்டான பிஸ்கட் குலோப் ஜாமுன் சூப்பராக ரெடி ஆகி இருக்கும். நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்.

- Advertisement -