அனைவரும் விரும்பி சாப்பிட ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த சில்லி கார்லிக் நூடுல்ஸ் மட்டும் போதுமே

noodals
- Advertisement -

நூடுல்ஸ் என்று சொன்னால் போதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது நாவிலும் எச்சில் ஊறும். சமைக்கத் தெரியாதவர்கள் கூட இந்த உணவை எளிதாக சமைத்து விடலாம். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட நூடுல்ஸ் செய்து கொடுத்தால் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்க்கு அனைவருக்கும் பிடித்த உணவாக உள்ளது இந்த நூடுல்ஸ். ஒவ்வொரும் ஒவ்வொரு வித்தியாசமான சுவையில் நூடுல்சை சமைக்க முடியும். சிலர் க்ரீமியாகவும், சிலர் காரமாகவும், சிலர் புளிப்பு சுவையிலும் என பலவித சுவைகளில் நூடுல்ஸை சமைத்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் அனைவருக்கும் பிடித்த சுவை என்றால் காரம், உப்பு அனைத்தும் சமமாக இருக்கின்ற சுவையாகும். அவ்வாறு இந்த சில்லி, கார்லிக் நூடுல்சை எவ்வாறு சமைக்க வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் – 300 கிராம், எண்ணெய் – 3 ஸ்பூன், பூண்டு – 3 பல், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – ஒன்று, கேரட் – ஒன்று, கோஸ் – 50 கிராம், குடைமிளகாய் – ஒன்று, வெங்காயத்தாள் – சிறிதளவு, வினிகர் – ஒரு ஸ்பூன், சோயா சாஸ் – ஒரு ஸ்பூன், சில்லி சாஸ் – ஒரு ஸ்பூன், மிளகுத் தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அடுப்பின் மீது வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக சூடானதும் அதில் 300 கிராம் நூடுல்ஸ் சேர்த்து வேக வைக்க வேண்டும். பிறகு இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து விடவேண்டும். நூடுல்ஸ் நன்றாக வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி நூடுல்சை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

பிறகு கேரட், பூண்டு, குடைமிளகாய் மற்றும் கோஸ் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, அதில் மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள பூண்டு, கோஸ், கேரட் மற்றும் குடைமிளகாய் இவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் சிறிதளவு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இவற்றிற்குத் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் வினிகர், ஒரு ஸ்பூன் சில்லி சாஸ், ஒரு ஸ்பூன் தக்காளி சாஸ் இவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் சேர்க்க வேண்டும்.

அதன் பின்னர் இவற்றுடன் வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். ஒரு ஐந்து நிமிடம் நூடுல்ஸ் முழுவதுமாக மசாலாவுடன் சேரும்வரை தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சுட சுட அனைவருக்கும் பரிமாறி கொடுக்க வேண்டும். அவ்வளவுதான் மிகவும் சுவையான சில்லி கார்லிக் நூடுல்ஸ் சட்டென தயாராகிவிட்டது.

- Advertisement -