ஒரு கப் இட்லி மாவு, ஒரு கப் தேங்காய் இருந்தால் போதும் இந்த சுவையான பால் பணியாரத்தை நினைத்தவுடனே செய்துவிடலாம்

paniyaram
- Advertisement -

குழந்தைகள் பள்ளி முடிந்து வந்ததும் சாப்பிடுவதற்காக எதையாவது கேட்பது வழக்கம் தான். எனவே அவர்கள் விரும்பி சாப்பிடுவதற்கு ஏற்றவாறு சுவையான இனிப்பு பலகாரங்கள் செய்து கொடுத்தால் மிகவும் ஆர்வமாக சாப்பிடுவார்கள். இனிப்பு என்றாலே அதற்கு செய்ய வேண்டிய வேலைகள் பல வகையாக இருக்கும், நேரம் அதிகமாக செலவாகும் என்பது தான் உண்மை. ஆனால் வீட்டில் இருக்கும் இட்லி, தோசை மாவை வைத்தே சட்டென ஒரு இனிப்புப் பலகாரத்தை செய்து கொடுக்க முடியும். வாருங்கள் தோசை மாவில் செய்யக்கூடிய இந்த சுவையான பால் பணியாரத்தை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

children-snacks

தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – ஒரு கப், தேங்காய் – 1, சர்க்கரை – 150 கிராம், ஏலக்காய் பொடி – ஒரு ஸ்பூன், ஆப்ப சோடா மாவு – அரை ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் பணியாரத்திற்கு தேவைப்படும் தேங்காய் பால் எடுத்து வைக்க வேண்டும். அதற்காக முதலில் ஒரு தேங்காயை உடைத்து, தேங்காய் துருவல் பயன்படுத்தி நன்றாகத் துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் துருவிய தேங்காயை ஒரு கப் அளவு இருக்குமாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

coconut-milk

பிறகு இந்த தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து, முதலில் தேங்காய் அளந்த அதே கப்பில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் வடிகட்டி பயன்படுத்தி தேங்காய் பாலை மட்டும் தனியாக வடிகட்ட வேண்டும். பிறகு மீண்டும் அதே தேங்காயில் முக்கால் கப் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு, இரண்டாம் தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் ஒன்றரை கப் தண்ணீர் மட்டும் ஊற்றி தேங்காய் பால் எடுக்க வேண்டும்.

- Advertisement -

இந்த தேங்காய் பாலில் 150 கிராம் சர்க்கரை, ஒரு ஸ்பூன் ஏலக்காய்த்தூள், மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு ஒரு கப் இட்லி மாவில் அரை ஸ்பூன் ஆப்ப சோடா மாவு, அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். மாவு கெட்டியான பதத்தில் இல்லை என்றால் அதனுடன் சிறிதளவு அரிசி மாவு சேர்த்து கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

paniyaram1

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கைகளை பயன்படுத்தி இட்லி மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு பொறித்தெடுக்க வேண்டும். இந்த உருண்டைகள் அனைத்தும் நன்றாக பபொறிந்ததும் இவற்றை வேறுதட்டிற்க்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

coconut-paal-paniyaram1

இவ்வாறு அனைத்து மாவையும் உருண்டைகளாக பொரித்து எடுத்த பின்னர் அனைத்து உருண்டைகளையும் தேங்காய் பாலில் சேர்க்கவேண்டும். சிறிது நேரம் இவற்றை அப்படியே ஊறவிட்டு பிறகு சாப்பிடுவதற்கு பரிமாறி கொடுத்தால் போதும். மிகவும் அருமையான சுவையில் சூப்பராக இருக்கும். இதனை குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிட்டு மகிழ்வார்கள்

- Advertisement -