- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் இந்த புரோட்டின் இட்லியை நீங்களும் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள். பிறகு...

உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் இந்த புரோட்டின் இட்லியை நீங்களும் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள். பிறகு அடிக்கடி செய்து கொண்டே இருப்பீர்கள்

- Advertisement -

இட்லி என்றாலே அரிசி மாவு வைத்து சமைக்கக் கூடிய ஒரு உணவுப் பொருள் என்று அனைவருக்குமே தெரியும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு உணவாக இட்லி பார்க்கப்படுகிறது. மருத்துவர்கள் தோசையை விட இட்லி தான் உடலுக்கு மிகவும் சிறந்த உணவு என்று பரிந்துரை செய்கின்றனர். அதிலும் புரதச்சத்து நிறைந்த இந்த பச்சைப் பயிறு இட்லியை ஒருமுறை செய்து பாருங்கள். குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் நிறமும், சுவையும் அவர்களுக்கு பிடித்த தாகவே இருக்கும்.இட்லியை இதுவரை வெள்ளை நிறத்தில் மட்டும் பார்த்த குழந்தைகள் திடீரென பச்சை நிறத்தில் இருக்கும் இட்லியை பார்த்தவுடன் உற்சாகமாகி சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். வாருங்கள் இதனை எப்படி செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

idli-sambar

முதலில் ஒரு கப் பச்சை பயிறு மற்றும் ஒரு கப் இட்லி அரிசியை ஒன்றாக சேர்த்து நன்றாகக் கழுவிக் கொண்டு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு மற்றொரு பாத்திரத்தில் அரை கப் உளுந்தம் பருப்பை சேர்த்து கழுவிக்கொண்டு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பச்சைபயிறு மற்றும் இட்லி அரிசியை தண்ணீர் வடிகட்டி சேர்த்து நன்றாக அரைத்துக் கொண்டு, ஒரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். பின்னர் உளுத்தம் பருப்பையும் இவ்வாறு மாவாக அரைத்து அதனையும் பச்சைபயிறு மாவு இருக்கும் அதே பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். இவற்றுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு 5 மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும்.

pachai_payaru

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, ஒவ்வொரு இட்லி தட்டிலும் அரைத்து வைத்துள்ள மாவினை ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து, மூடி போட்டு நன்றாக வேக விடவேண்டும். 15 நிமிடத்திலிருந்து 20 நிமிடத்திற்குள் இட்லி நன்றாக வெந்து விடும். பின்னர் மூடியை திறந்து இட்லியை வெளியே எடுத்து இதனுடன் சாம்பார் அல்லது சட்னி சேர்த்து கொடுத்து பாருங்கள். சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

- Advertisement -

பச்சைப்பயிறு இட்லியின் நன்மைகள்:
பச்சை பயிரில் அதிக அளவு புரதச் சத்து இருக்கிறது. குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடலில் அதிக அளவு கொழுப்புச் சத்து சேராமல் தவிர்க்கிறது. பச்சைப்பயறில் பி காம்ப்ளக்ஸ் அதிகமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் உடலுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய அயன், பொட்டாசியம், மக்னீசியம் அதிகமாக இருக்கிறது.

idli

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பச்சைப்பயிறு இட்லியை தங்கள் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த உணவு உடல் எடையைகுறைப்பததில் மிகுந்த பலனைக் கொடுக்கிறது. இதனை காலை உணவாக எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது. மூன்று இட்லி சாப்பிட்டாலே வயிறு முழுவதும் நிரம்பி விடும். சீக்கிரத்தில் பசி எடுக்காது.

சற்று முன்