வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை வைத்து குழந்தைகள் விரும்பும் சுவையான கப் கேக்கை உங்கள் வீட்டிலேயே சுலபமாக செய்து கொடுங்கள்

cup-cake
- Advertisement -

இனிப்பு சுவை என்றாலே குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அதேபோல் சாக்லேட், கேக் என்றால் அவர்களுக்கு அதில் பிரியம் அதிகமாக இருக்கும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இவற்றை ருசிக்கத் தயாராக இருப்பார்கள். இவ்வாறு குழந்தைகளுக்கு பிடித்த இந்த கேக்கை கடைகளுக்குச் சென்று வாங்கி கொடுப்பதென்பது தொடர்ந்து செய்யக்கூடிய காரியம் அல்ல. அது மட்டுமல்லாமல் கடைகளில் விற்கப்படும் கேக் எத்தனை நாட்களுக்கு முன்னர் செய்தது என்றும் கூட நமக்குத் தெரியாமல் இருக்கும். எனவே அதனை வாங்கிக் கொடுக்கும் பொழுது ஒரு வித சந்தேகத்துடன் தான் வாங்கிக் கொடுத்திருப்போம். இவ்வாறு குழந்தைகள் ஆசைப்பட்டதை அவர்களுக்கு கொடுக்க ஆரோக்கியமான இந்த கப் கேக்கை நீங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். அவ்வாறு வீட்டில் இருக்கும் அரிசி மாவை வைத்து செய்யக்கூடிய ஒரு கப் கேக் எப்படி செய்வது என்பது பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், தேங்காய் துருவல் – அரை கப், உப்பு – கால் ஸ்பூன், ஆப்ப சோடா மாவு – 2 சிட்டிகை, நெய் – 3 ஸ்பூன், முந்திரி பருப்பு – 15, ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கப் அரிசியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து 2 அல்லது 3 முறை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஊற வைத்த அரிசியில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி, அதனை மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.

பின்பு இதனுடன் அரை கப் துருவிய தேங்காய், கால் ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொண்டு, அதனுடன் இரண்டு சிட்டிகை ஆப்ப சோடா மாவு சேர்த்துக் கலந்து விட வேண்டும்.

- Advertisement -

பிறகு முக்கால் கப் வெல்லத்தை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பின் மீது வைத்து கட்டிகள் இல்லாமல் கரையும் அளவிற்கு, அடுப்பை சிம்மில் வைத்து சூடுபடுத்த வேண்டும். பிறகு இதனை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி தூசுகள் இல்லாமல் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த வெல்லக் கரைசலையும் அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.

பிறகு அடுப்பின் மீது ஒரு பேனை வைத்து, நெய் ஊற்றி, அதில் முந்திரி பருப்புகள் மற்றும் இரண்டு சில்லு தேங்காயை பொடியாக நறுக்கி சேர்த்து, இரண்டையும் பொன்னிறமாக வறுத்துக் கொண்டு, அதனையும் இந்த மாவுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு ஒரே அளவிலான சிறிய கப்களை எடுத்துக் கொண்டு, அதில் மாவை ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் வேக வைத்தால் போதும் சுவையான கப் கேக் தயாராகி விடும்.

- Advertisement -