ஜவ்வரிசி வைத்து இப்படி சுவையான போண்டா செய்ய முடியுமா? என்று ஆச்சரியப் படுத்தும் வகையில் சுவையான ஜவ்வரிசி போண்டா!

javvarisi-bonda1
- Advertisement -

பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி வரும் குழந்தைகளுக்கு அவர்கள் வந்த உடனே மகிழ்ச்சியாக சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு வகைகளை செய்து வைப்பது ஒவ்வொரு தாய்மாரின் வழக்கமான ஒரு செயலாகும். அவ்வாறு செய்யக்கூடிய அந்த உணவு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்க வேண்டும். அதிலும் கொஞ்சம் கரமுர கார சுவையுடன் ஏதேனும் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியை செய்து கொடுத்தால் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அப்படி ஜவ்வரிசி வைத்து செய்யக்கூடிய ஒரு போண்டா ரெசிபியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது எப்பொழுதும் செய்யும் கார போண்டா, வெங்காய போண்டா போன்று இல்லாமல் மிகவும் சுவையாக இருக்கும். வாங்க இதனை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி – ஒரு கப், புளித்த தயிர் – அரை கப், அரிசி மாவு – 2 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, இஞ்சி சிறிய துண்டு – 1, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, கறிவேப்பிலை – ஒரு கொத்து, எண்ணெய் – கால் லிட்டர், உப்பு – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதல் அரை கப் புளித்த தயிரை ஒரு வாய் அகன்ற கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு ஜவ்வரிசியை இரண்டு, மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி கொள்ள வேண்டும்.

பின்னர் ஜவ்வரிசியை தயிருடன் சேர்த்து கலந்து கொண்டு, மூன்று மணி நேரம் நன்றாக ஊறவிட வேண்டும். பிறகு மூன்று மணி நேரம் கழித்து ஜவ்வரிசியுடன் 2 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

- Advertisement -

கலந்து வைத்துள்ள ஜவ்வரிசியுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இவற்றைக் கலந்து வைக்கும் பொழுது மாவு மிகவும் கெட்டியாக இருந்தது என்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும்.

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கலந்து வைத்துள்ள ஜவ்வரிசிக் கலவையில் இருந்து சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் சேர்க்க வேண்டும். அடுப்பை அதிக தீயில் வைத்து போண்டாவை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி போட்டு, அவை லேசாக சிவந்தவுடன் வெளியே எடுத்துவிட வேண்டும். இவ்வாறு செய்து வைத்துள்ள அனைத்து மாவிலும் போட்டி சுட்டு எடுக்க வேண்டும். பிறகு இதனுடன் தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னி சேர்த்து கொடுத்தாலீ சாப்பிடுவதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.

- Advertisement -