1 கப் மைதா மாவு இருந்தால் போதும் நொடியில் போண்டா செய்து அசத்தலாம்! ருசியான மைதா போண்டா எளிதாக செய்வது எப்படி?

- Advertisement -

வீட்டில் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று அடம் பிடிக்கும் பொழுது சட்டென நொடியில் செய்து அசத்த கூடிய இந்த ருசியான மைதா போண்டா செய்வது ரொம்ப சுலபம் தான்! காரச் சட்னி, தேங்காய் சட்னியுடன் மைதா போண்டாவை தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அபாரமான ஒரு ருசியை அனுபவிக்கலாம். சுவையான மைதா போண்டா எளிதாக எப்படி வீட்டிலேயே தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

மைதா போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
மைதா மாவு – 100 கிராம், கடலை மாவு – 2 ஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

மைதா போண்டா செய்முறை விளக்கம்:
முதலில் மைதா மாவு 100 கிராம் அளவிற்கு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவு 2 டீஸ்பூன் அளவிற்கு சேர்க்க வேண்டும். அப்போது தான் போண்டா உள்ளே மொறு மொறுவென்றும் வெளியே மெத்தென்றும் வரும். பின்னர் அதனுடன் கால் டீஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பெருங்காயத்தூள் கால் டீஸ்பூனுக்கும் குறைவாக கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெயில் பலகாரங்கள் செய்யும் பொழுது எப்பொழுதும் பெருங்காயம் சேர்த்து செய்வது மிகவும் நல்லது. பெரிய வெங்காயம் தோலுரித்து பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு 2 பச்சை மிளகாயை கழுவி சுத்தம் செய்து பின் காம்பு நீக்கி பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு இணுக்கு கறிவேப்பிலையை கழுவி உருவி பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே போல கொத்தமல்லித் தழையையும் கழுவி நன்கு தண்ணீர் இல்லாமல் உதறிவிட்டு ஒரு கைப்பிடி அளவிற்கு வருமாறு பொடி பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த போண்டாவிற்கு கொத்தமல்லி தழை அதிகமாக சேர்க்கும் பொழுது ருசியும் அதிகமாக இருக்கும். இப்போது இந்த போண்டா மாவிற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். மைதா போண்டா செய்வது ரொம்பவே சுலபமான ஒரு வழி முறையாகும்.

இந்த எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவிற்கு தண்ணீர் விட்டு கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்கும் பொழுது கவனமாக சேர்க்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளிக்க வேண்டுமே தவிர மொத்தமாக அப்படியே ஊற்றினால் போண்டா மாவு வீணாகிவிடும். தண்ணீர் சேர்க்கும் பொழுது அழுத்தம் கொடுக்காமல் லேசாக மாவை பிசைய வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

எண்ணெய் தேவையான அளவிற்கு அதில் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். எண்ணெய் நன்கு கொதித்த பின்பு நீங்கள் எடுத்து வைத்துள்ள மாவை கைகளால் ஒவ்வொரு சிறு சிறு உருண்டையாக உருட்டி போடுங்கள். எல்லா புறங்களிலும் நன்கு சிவக்க வறுக்கவும். மிதமான தீயில் வைத்து பொரித்து எடுங்கள், அப்போது தான் உள்ளேயும், வெளியேயும் ஒரே சீரான நிலையில் வேகும். மொறுமொரு மைதா போண்டா நொடியில் தயார் செய்வதற்கு இதே முறையை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் ரொம்பவே ருசியாக இருக்கும்.

- Advertisement -