மாம்பழ சீசன் துவங்கி விட்டாலே வீட்டில் மாம்பழத்திற்கு பஞ்சமே இருக்காது, இப்படி 2 நிமிஷத்தில் ‘மாம்பழ குல்ஃபி’ ரொம்பவே சுலபமாக செஞ்சு கொடுத்து பாருங்க, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!

mango-kulfi2
- Advertisement -

விதவிதமான ஐஸ்கிரீம் வகைகளில் வீட்டிலேயே எளிமையாக மற்றும் ஆரோக்கியமான முறையில் தயாரிக்கக்கூடிய இந்த மாம்பழ குல்ஃபி நிச்சயம் உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்க போகிறது. ஜூன் மாதம் வந்து விட்டாலே மாம்பழ சீசன் களைகட்ட தொடங்கிவிடும். விதவிதமான நல்ல சுவையுள்ள மாம்பழங்களை வாங்கி வைத்திருப்பவர்கள் ஒரே ஒரு மாம்பழம் கொண்டு இப்படி குல்ஃபி தயாரித்து பாருங்கள், ரொம்பவும் சுவையானதாக இருக்கும். சூப்பரான மாம்பழ குல்ஃபி எப்படி தயாரிப்பது? என்பதை இனி பார்ப்போம்.

மாம்பழ குல்ஃபி செய்ய தேவையான பொருட்கள்:
பால் – கால் லிட்டர், மாம்பழம் – ஒன்று, சர்க்கரை – 4 ஸ்பூன்.

- Advertisement -

மாம்பழ குல்ஃபி செய்முறை விளக்கம்:
மாம்பழ குல்ஃபி செய்வது ஒன்றும் மிகப் பெரிய கஷ்டமான வேலை எல்லாம் கிடையாது ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒன்றுதான். வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்த ஐஸ்கிரீம் வகைகளில் இந்த மாம்பழ குல்ஃபி ஃபேவரிட் லிஸ்டில் இடம் பெறப் போகிறது. இதற்கு ஒரு மாம்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மாம்பழம் ஐந்திலிருந்து ஆறு குல்ஃபிகள் செய்ய வரும். இதற்கு ஒரு நல்ல சுவையுள்ள இனிப்பான மாம்பழத்தை எடுத்துக் கொள்வது நல்லது. அதன் மேல்தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் சதைப்பற்றை மட்டும் எடுக்க வேண்டும். மாம்பழத்தின் கொட்டையை நீக்கிவிட்டு சதைப்பகுதியை மட்டும் ஸ்பூன் அல்லது கரண்டியைப் பயன்படுத்தி வழித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் இவற்றை சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் கால் லிட்டர் அளவிற்கு பால் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் எதுவும் இதில் சேர்க்கக்கூடாது. 4 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடுங்கள். மாம்பழத்தின் சுவைக்கு ஏற்ப சர்க்கரையை கூட்டி குறைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். தண்ணீர் எதுவும் சேர்க்காததால் அதிக நேரம் கொதிக்க வேண்டிய அவசியமில்லை.

- Advertisement -

பின்னர் இந்த பாலை நன்கு ஆற வைத்துக் கொள்ள வேண்டும். சூடாக இருக்கும் பொழுது பயன்படுத்தக்கூடாது, நன்கு ஆறிய இந்த பாலை மிக்ஸி ஜாரில் மாம்பழ கலவையுடன் சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது மாம்பழம் இன்னும் கெட்டியாக இருக்கும். இந்த பதத்திற்கு நீங்கள் அரைத்தால் தான் குல்ஃபி செய்ய வரும். மாம்பழ குல்ஃபி செய்யும் பொழுது எந்த விதமான மில்க்மைட் அல்லது கிரீம் வகைகளை சேர்க்க வேண்டிய அவசியமில்லை, மாம்பழம் ரொம்பவே க்ரீமியானது.

பின்னர் சிறு சிறு டம்ளர்கள் அல்லது குல்ஃபி மோல்ட் உங்களிடம் இருந்தால் அதில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். முக்கால் பாகம் அளவிற்கு ஊற்றி அதன் மீது அலுமினியம் ஃபாயில் பேப்பர் அல்லது சாதாரண பாலிதீன் கவரை சதுரமாக வெட்டி கொண்டு இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். அப்பொழுது தான் குல்ஃபி நல்ல கெட்டி படும். மூடி வைத்த பிறகு அதில் லேசாக ஓட்டை போட்டு குல்ஃபி குச்சி அல்லது ஐஸ்க்ரீம் குச்சிகளை சொருகி வையுங்கள். இரவு இதை செய்து வைத்தால் மறுநாள் காலையில் நல்ல க்ரீமியான கெட்டியான குல்ஃபி தயாராக இருக்கும். இந்த குல்ஃபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக நிச்சயம் இருக்கும், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -