மீதியான இட்லியை தூக்கி போடாமல் அதனை இவ்வாறு சுவையாக சமைத்துக் கொடுத்தால் போதும், கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் முழுவதுமாக காலியாகி விடும்

idli
- Advertisement -

மசாலா இட்லி இந்தியாவின் பிரபலமான, ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. இட்லி காலை மற்றும் இரவு நேரங்களில் உணவாக பரிமாறப்படுகிறது. இட்லி உடன் சட்னி, சாம்பார், போன்றவை மிகவும் சுவையாக இருக்கும். இது சாதாரண கடைகள் முதல் விலை உயர்ந்த உணவகங்கள் வரை எல்லா இடங்களிலும், எல்லா வகையான மனிதர்களாலும் சாப்பிடக்கூடிய ஒரு பிரபலமான உணவு. இட்லி தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மற்றும் வட இந்தியாவிலும் நிறைந்துள்ளது.மசாலா இட்லி, மீதமான இட்லி அல்லது ஆரிய இட்லியுடன் வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, ஆகியவற்றை கொண்டு செய்யப்படும். மசாலாவுடன் கலந்து பரிமாறப்படுகிறது. இவ்வாறு செய்யும் பொழுது இட்லியின் சுவை கூடும் அதே சமயத்தில் இட்லி உப்புமா போன்று செய்யாமல், புதுமையாக மசாலா இட்லி அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். பாருங்கள் இந்த மசாலா இட்லி எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
இட்லி – 5, எண்ணெய் – 2 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன், கொத்தமல்லி ஒரு குத்து, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் – 1ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், தக்காளி – 2, உப்பு – 1ஸ்பூன்,

- Advertisement -

செய்முறை:
ஒரு கடாயில்  2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ளவும். எண்ணெய் சூடானதும் பொடியாக 1 நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் மென்மையாகும் வரை வறுத்துக் கொள்ளவும். அதனுடன் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அதனுடன்  அதனுடன் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பின்னர் 2 தக்காளி பழங்களை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து  சேர்த்துக் கொள்ளவும்.

- Advertisement -

நன்கு கலந்த பின்னர் சிறிதளவு தண்ணீர் தெளித்து, மூடி வைத்து, 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். அல்லது எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவைக்கவும். பின்னர் மசாலா நன்றாக சுருண்டு வந்ததும் ஆரிய இட்லி துண்டுகளை சேர்த்து  உடைந்து விடாமல் மென்மையாக கிளற வேண்டும்.

மீண்டும் மூடி வைத்து 5 அல்லது 6 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேக வைக்கவும். இப்பொழுது சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடவும். தயிர் பச்சடி அல்லது வெள்ளரிக்காய் பச்சடியுடன் பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மசாலா இட்லி தயாராகிவிடும்.

- Advertisement -