உங்க வீட்டில் ரேஷன் கோதுமை மாவு வச்சிருக்கீங்களா? சுவையான மசாலா பூரி இப்படி மட்டும் செஞ்சு பாருங்க, இனி அடிக்கடி செய்வீங்க! தொட்டுக்க கூட எதுவும் செய்ய வேண்டாம்.

- Advertisement -

சுவையான மசாலா பூரி இப்படி ஒரு முறை செஞ்சு கொடுத்தா, இதற்கு சைட் டிஷ் கூட தேவையே கிடையாது. பூரியை அதிகம் விரும்புபவர்கள் இந்த மசாலா பூரியையும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கு ரொம்பவே பிடித்து போய்விடும். மொறு மொறு சூப்பர் டேஸ்டி மசாலா பூரி எப்படி வீட்டிலேயே எளிதாக தயாரிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மசாலா பூரி செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – கால் கிலோ, வேக வைத்த உருளைக்கிழங்கு – ஒன்று, ரவை – இரண்டு டேபிள் ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு, மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், கறி மசாலா தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

மசாலா பூரி செய்முறை விளக்கம்:
முதலில் மசாலா பூரி செய்வதற்கு 1/4 கிலோ அளவிற்கு கோதுமை மாவை சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். சலித்து எடுத்த இந்த மாவுடன் வேக வைத்த ஒரு உருளைக் கிழங்கை நன்கு மசித்து கலந்து விட வேண்டும். இதற்கு முதலில் உருளைக் கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு ரவையை லேசாக வறுத்து எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். வறுக்காத ரவை சேர்க்கக் கூடாது.

பின்னர் இதனுடன் கொஞ்சம் கொத்தமல்லியை நன்கு அலசி சுத்தம் செய்து எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ, அவ்வளவு பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் வாயில் தட்டுப்படும். பின்னர் கொஞ்சம் கறி மசாலா தூள், கொஞ்சம் மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். மிளகாய் தூளுக்கு பதிலாக காஷ்மீரி மிளகாய் தூள் இருந்தால் ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள், நல்ல நிறம் கொடுக்கும்.

- Advertisement -

காஷ்மீரி மிளகாய் தூள் காரம் கொடுக்காது எனவே இதை சேர்ப்பது நல்லது. பின் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது மாவை ஒன்றுடன் ஒன்று கலந்து விடும்படி நன்கு பூரி மாவுக்கு பிசைவது போல பிசைய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து பிசைந்து வாருங்கள். பூரி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து விட்டதும், கொஞ்சம் எண்ணெயை மேற்புறமாக தடவி விடுங்கள். பின்னர் ஐந்து நிமிடம் கழித்து ஒரு பூரி கட்டையில் எப்பொழுதும் பூரி சுடுவது போல கொஞ்சம் எண்ணெயை தேய்த்து வட்டமாக மாவை திரட்டி பரப்பிக் கொள்ளுங்கள்.

பூரி ரவுண்ட் ஷேப்பில் வருவதற்கு ஏதாவது ஒரு முனை பகுதி கூர்மையாக இருக்கும் படியான டிபன் பாக்ஸை கவிழ்த்து அழுத்துங்கள். பின்னர் வெளிப்புறமாக இருக்கும் மாவை எல்லாம் எடுத்துவிட்டு பார்த்தால் ரவுண்டாக உங்களுக்கு பூரி மாவு கிடைக்கும். சப்பாத்திக்கு தேய்ப்பது போல இதை ரொம்பவும் மெல்லிதாக தேய்க்க கூடாது எனவே ஓரளவுக்கு தடிமனாக தேயுங்கள். அதற்காக ரொம்பவும் தடிமனாகவும் தேய்த்து விடாதீர்கள். முனைப்பகுதிகள் கண்டிப்பாக தடிமனாக இருக்கக் கூடாது.

பூரி மாவுக்கு எப்பொழுதும் கோதுமை மாவை தேய்க்காதீர்கள். எண்ணெயை அதற்கு பதிலாக தேய்த்தால் நீங்கள் எண்ணெயில் போட்டு எடுக்கும் பொழுது எண்ணெய் நிறம் மாறாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும், வீணாகாது. இப்போது ஒவ்வொரு பூரிகளாக போட்டு இரண்டு புறமும் சிவக்க எடுத்துப் பாருங்கள், டேஸ்ட்டியான மசாலா பூரி ரெடி! இந்த பூரிக்கு தொட்டுக்க கூட தேவையில்லை அப்படியே சாப்பிடலாம். நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -