சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையான இந்த மீல் மேக்கர் குருமாவை ஒருமுறை இப்படி அரைத்து வைத்த மசாலா சேர்த்து செய்து பாருங்கள்

meal-maker-gravy4
- Advertisement -

சப்பாத்தி, பூரி என்றாலே அதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட எப்பொழுதும் உருளைக்கிழங்கு மசாலா தான் செய்கிறோம். ஹோட்டல்களில் சாப்பிட்டோம் என்றால் சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்ள சென்னா மசாலாவும், பூரியுடன் தொட்டு கொள்ள உருளைக்கிழங்கு மசாலாவும் கொடுக்கப்படுகிறது. ஆனால் வீட்டில் இவற்றிற்கு மாறாக சற்று வித்தியாசமான மீல்மேக்கர் மசாலா கிரேவி செய்து சுவைத்துப் பாருங்கள். இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதனை சாப்பிடுவதற்கு அசைவ உணவின் சுவையில் இருக்கும். இதன் சுவைக்கு எத்தனை சப்பாத்தி, பூரி வேண்டுமானாலும் சாப்பிடலாம். தின்ன தின்ன திகட்டாமல் இருக்கும். வாருங்கள் இந்த மீல் மேக்கர் கிரேவியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

masala-poori1

தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் – 50 கிராம், தேங்காய் – அரை மூடி, பெரிய வெங்காயம் – 3, சோம்பு – ஒரு ஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், கசகசா – ஒரு ஸ்பூன், கரம் மசாலா – ஒரு ஸ்பூன், பொட்டுக்கடலை – ஒரு ஸ்பூன், முந்திரி – 5, எண்ணெய் – 3 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரை மூடி தேங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் கசகசாவை கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மூன்று வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக அரிந்து கொள்ள வேண்டும். பிறகு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

kola

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு பாத்திரம் வைத்து ,அதில் நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் சூடானதும் அதில் 50 கிராம் மீல் மேக்ககரை சேர்த்து, அதனுடன் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு கொதி வரும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு அடுப்பை அனைத்து, மீல்மேக்கரை வெளியே எடுத்து ஆற வைக்க வேண்டும். பின்னர் அதில் இருக்கும் தண்ணீர் அனைத்தையும் கைகளால் பிழிந்து வேறு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய தேங்காய், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை, ஐந்து முந்திரி மற்றும் ஊறவைத்த கசகசா இவை அனைத்தையும் சேர்த்து, அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

meal-maker-gravy

பிறகு இந்த மசாலாவுடன் ஒரு ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 10 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு, அவற்றுடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பின்னர் மீல்மேக்கரை இவற்றுடன் சேர்த்து அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -