விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரின் ஆசி பெற்று நீங்கள் நினைத்தது நிறைவேற இந்த சுவையான பால் கொழுக்கட்டையை மறக்காமல் விநாயகர் படையலில் வைத்து விடுங்கள்

pall
- Advertisement -

பூஜை என்றாலே அதில் இனிப்பு இல்லாமல் இருக்காது. அதுவும் இனிப்பை அதிகம் விரும்பும் விநாயகருக்கான பூஜையில் நிச்சயம் இனிப்பு சம்பந்தப்பட்ட உணவுகள் நெய்வேதியமாக இருக்க வேண்டும். அரிசி மாவு போஜனங்கள் அனைத்தும் விநாயகர் விரும்பி சாப்பிடகூடிய உணவுகளாகும். இவ்வாறு அரிசி மாவுடன் வெல்லம் சேர்த்து செய்யும் இந்த பால் கொழுக்கட்டையை விநாயகர் சதுர்த்தி அன்று படையலில் வைத்து விநாயகரை மகிழ்வித்து அவரின் ஆசியை பெறலாம். வாருங்கள் இந்த பால் கொழுக்கட்டையினை எவ்வாறு சுவையாக சமைப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

mothagam3

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – ஒரு கப், தேங்காய் – 1, வெல்லம் – ஒன்றரை கப், உப்பு – ஒரு சிட்டிகை, நெய் – 2 ஸ்பூன், முந்திரி – 10, திராட்சை – 10, ஏலக்காய் – 3.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு தேங்காயை உடைத்து அதனை நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் மூன்று ஏலக்காயும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். மிக்ஸி ஜாரின் மூடியை திறந்து சிறிதளவு தண்ணீர் விட்டு மறுபடியும் அரைத்து ஒரு வடிகட்டியை பயன்படுத்தி தேங்காய் பாலை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஒரு கப் அளவு திக்கான தேங்காய்ப்பால் எடுத்து வைக்க வேண்டும்.

தேங்காய்

அடுப்பைப் பற்ற வைத்து அதன் மீது ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் விட்டுக் கொள்ள வேண்டும். அதனுடன் நன்றாகப் பொடித்த வெல்லத்தை சேர்த்து, வெல்லம் நன்றாக கரைந்து வரும்வரை அடுப்பை சிறு தீயில் வைத்து, அதன் பின் இந்தக் கரைசலை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

மறுபடியும் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைத்துக்கொண்டு, ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் அரிசி மாவு சேர்த்து அதனுடன் கொதிக்க வைத்த தண்ணீரையும் சேர்த்து நன்றாக கிளறி பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

boiling-water

குறிப்பு: எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறிய உருண்டைகளாக இருக்க வேண்டும். பெரிய அளவு உருண்டைகளாக செய்து விட்டால் அவை சீக்கிரத்தில் வேகாது. இவ்வாறு அரிசி மாவு வேகாமல் இருந்தால் பால் கொழுகட்டையின் சுவை நன்றாக இருக்காது.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு அகன்ற பாத்திரம் வைத்து, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் நன்றாக கொதித்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக தண்ணீரில் சேர்த்து அடுப்பை சிறிய தீயில் வைத்து வேகவைக்க வேண்டும். சிறிது நேரத்தில் உருண்டைகள் நன்றாக வெந்து மேலே எழும்பி வர ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் கரண்டியை வைத்து கிளறி விடவேண்டும். இவ்வாறு சிறிது நேரம் அப்படியே வேக வைத்தால் உருண்டைகள் நன்றாக வெந்துவிடும்.

paal-kolukattai

அதன்பின் வடிகட்டி வைத்துள்ள வெல்லக் கரைசலை இதனுடன் சேர்த்து சிறிது நேரம் நன்றாகக் கொதிக்க விடவேண்டும். பின்னர் எடுத்து வைத்துள்ள திக்கான தேங்காய்ப் பாலையும் சேர்த்து விட்டு இரண்டு நிமிடத்தில் அடுப்பை அனைத்துவிட வேண்டும். அதன்பின் ஒரு தாளிப்பு கரண்டியை பயன்படுத்தி அதில் நெய் சேர்த்து முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாக வறுத்து பால் கொழுக்கட்டையுடன் சேர்த்து விட வேண்டும். அவ்வளவுதான் விநாயகருக்கு பிடித்த சுவையான பால் கொழுக்கட்டை தயாராகிவிட்டது.

- Advertisement -