ஊரே மணக்கும் பருப்பு ரசம் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! உங்க வீடு மட்டுமில்ல, ஏழு தெருவுக்கு வாசனை அப்படி இருக்கும்.

paruppu-rasam
- Advertisement -

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் ரசம் தினமும் கூட செய்து சாப்பிடலாம். பருப்பு ரசத்தை தினமும் செய்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும் கூடவே சளி, கபம், இருமல் போன்ற பிரச்சனைகளும் நம்மை நெருங்காமல் இருக்கும். சிலருக்கு என்ன தான் செய்தாலும் ரசம் விஷம் போல வரும். ஒரு ரசம் கூட வைக்க தெரியவில்லை என்று பல பேரிடம் அவமானப்பட்ட நீங்கள், இந்த முறையில் ஒரு முறை பருப்பு ரசம் வைத்துக் கொடுங்கள். வீட்டில் இருக்கும் அனைவரும் பாராட்டித் தள்ளி விடுவார்கள். அருமையான பருப்பு ரசம் செய்வது எப்படி? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

thordal

ரசம் வைக்க தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – முக்கால் கப், மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – அரை டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – இரண்டு கொத்து, பச்சை மிளகாய் – 2, பழுத்த பெரிய தக்காளி – ஒன்று, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், தனியாத் தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கெட்டியாக கரைத்த புளித்தண்ணீர் – அரை கப், கொத்தமல்லி தழை நறுக்கியது – ஒரு கைப்பிடி.

- Advertisement -

ரசம் செய்முறை விளக்கம்:
முதலில் துவரம் பருப்பை குக்கரில் போட்டு சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிகட்டி கொள்ளுங்கள். ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பை பற்ற வைத்து 4 விசில் விட்டு எடுங்கள். பின்னர் வெறும் வாணலியில் மிளகு சேர்த்து 2 நிமிடம் நன்கு லேசாக வறுக்க வேண்டும். பின்னர் அதனுடன் சீரகம் சேர்த்து வறுத்து எடுங்கள். நன்கு ஆறியதும் அதனை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

milagu-rasam2

குக்கரில் பிரஷர் இறங்கியதும் வெந்த பருப்பை நன்கு மசித்து 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நீர்க்க கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்து வந்ததும் கறிவேப்பிலையை கழுவி துருவி சேர்த்து தாளியுங்கள்.

- Advertisement -

பின்னர் பச்சை மிளகாய் கீறி சேர்த்து வதக்குங்கள். பின்னர் தக்காளி பழத்தை நன்கு கைகளால் பிசைந்து அதனுடன் சேர்த்து வதக்குங்கள். தக்காளிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மூடி போட்டு 2 நிமிடம் கழித்து திறந்து வதக்கினால் சீக்கிரம் வதங்கும். தக்காளி மசிய வதங்கியதும் கெட்டியாகக் கரைத்து வைத்துள்ள அரை கப் புளி தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடுங்கள். மூடி போட்டு 5 நிமிடம் வேக விட்டால் புளித் தண்ணீர் நன்கு கொதித்து பச்சை வாசம் போய் விடும். இந்த சமயத்தில் மஞ்சள் தூள், தனியாத்தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் ரசத்திற்கு தேவையான உப்பு சேர்த்து கரைத்து வைத்துள்ள பருப்பு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.

milagu-rasam

5லிருந்து 8 நிமிடத்திற்குள் ரசம் நன்கு கொதித்து வரும். ரசம் கொதித்து வரும் சமயத்தில் நீங்கள் அரைத்து வைத்துள்ள மிளகு, சீரக தூள் சேர்த்து கலந்து விட வேண்டும். மிளகு, சீரகத்தூள் இறுதியாக தான் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு 2 நிமிடம் கொதித்த பிறகு நறுக்கிய மல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சுலபமாக ஐந்தே நிமிடத்தில் ரசத்தை ஊரே மணக்கும் படி செய்துவிடலாம். இந்த ரசம் உடல் ஆரோக்கியத்திற்கு வலிமையை கொடுக்கும். சளி, இருமல் போன்ற தொந்தரவுகளை விரட்டியடிக்கும். இதே முறையில் நீங்களும் செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -