ரெண்டே நிமிடத்தில் செய்யக் கூடிய பொட்டுக் கடலை சட்னிக்கு இந்த 4 பொருட்கள் இருந்தால் போதுமே!

pottu-kadalai-chutney1
- Advertisement -

தினமும் விதவிதமான சட்னி செய்து பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இந்த பொட்டுக் கடலை சட்னி ரொம்பவே வித்தியாசமானதாக இருக்கும். மேலும் நல்ல சுவை கொண்ட இந்த பொட்டு கடலை சட்னி இட்லி, தோசை, உப்புமா, கிச்சடி, இடியாப்பம், ஆப்பம் போன்றவற்றுக்கு கூட சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கும். அவசரத்திற்கு எதையும் எதிர்பார்க்காமல் வீட்டில் இருக்கும் இந்த நான்கு பொருட்களை வைத்தே செய்யக் கூடிய இந்த சுவையான பொட்டுக்கடலை சட்னி எளிதாக நாமும் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

பொட்டுக்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
எண்ணெய் – தேவையான அளவு, காய்ந்த மிளகாய் – 6, பூண்டு பற்கள் – 4, பொட்டுக் கடலை – அரை கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், புளி – ஒரு கோலிகுண்டு அளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காய்த் தூள் – 2 சிட்டிகை.

- Advertisement -

பொட்டுக்கடலை சட்னி செய்முறை விளக்கம்:
பொட்டு கடலை சட்னி செய்வதற்கு முதலில் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஆறு வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகாயை லேசாக வறுபட்டதும், 4 பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்து வதக்குங்கள். பூண்டு மற்றும் மிளகாய் வறுபட்டதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை கப் அளவிற்கு பொட்டுக் கடலை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும். புளி ஒரு சிறிய கோலி குண்டு அளவு உருட்டி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் ஆற வைத்துள்ள மிளகாய் மற்றும் பூண்டு ஆகியவற்றை எண்ணெயுடன் அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்த இந்த சட்னிக்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான். முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். உளுந்து பொன்னிறமாக வறுபட்டதும் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி தாளித்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இறுதியாக 2 சிட்டிகை அளவிற்கு பெருங்காயத் தூள் சேர்த்து அடுப்பை அணைத்து கொள்ளுங்கள். பின்னர் சட்னியுடன் இந்த தாளிப்பை சேர்த்து ஒரு கலக்கு கலக்கினால் போதும் சுவை மிகுந்த சட்டென ரெண்டே நிமிடத்தில் செய்யக் கூடிய பொட்டு கடலை சட்னி தயாராகி விட்டிருக்கும். இதே முறையில், இதே அளவுகளில் நீங்களும் உங்கள் வீட்டில் செய்து வீட்டில் இருக்கும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று விடலாமே!

- Advertisement -