10 நிமிடத்தில் ரவா லட்டு இப்படி செய்து பாருங்கள், பத்து நாள் ஆனாலும் டேஸ்ட் மாறாவே செய்யாது பிரஷ்ஷாகவே இருக்கும்.

rava-laddu2
- Advertisement -

பொதுவாக ரவா லட்டு செய்பவர்கள் செய்யும் முறையை விட இந்த முறையில் நாம் செய்வதால் நீண்ட நாட்களுக்கு ரவா லட்டு மிகுந்த தரத்துடன் முதல் நாள் செய்த அதே சுவையுடன் அப்படியே இருக்கும். பொதுவாக ரவா லட்டு விரும்பிகள் அது செய்வதற்கு சுலபமாக இருக்கும் என்பதால் கடகடவென ரவையை வறுத்து, சர்க்கரையை போட்டு கிண்டி உருண்டை பிடித்து விடுவார்கள். ரவா லட்டு செய்வது ரொம்ப ரொம்ப சுலபம் என்பதால் சிறு குழந்தைகள் கூட எளிதாக செய்து விடுவார்கள். ஆனால் முறையாக இப்படி ரவா லட்டு செய்து பாருங்கள், எவ்வளவு நாட்கள் ஆனாலும் அதன் குணம் மாறாது அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். சூப்பரான முறையில் ரவா லட்டு செய்வது எப்படி? தெரிந்து கொள்ள மேலும் இந்த பதிவை பின் தொடருங்கள்..

idli-rava1

‘ரவா லட்டு’ செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்த ரவை – ஒரு கப், சர்க்கரை – முக்கால் கப், தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த் தூள் – கால் டீஸ்பூன், காய்ச்சி ஆறின பால் – அரை கப், நெய் – 3 டேபிள் ஸ்பூன், முந்திரிப் பருப்பு 10, பாதாம் பருப்பு – 5, உலர் திராட்சை – 10.

- Advertisement -

‘ரவா லட்டு’ செய்முறை விளக்கம்:
ரவா லட்டு செய்ய முதலில் ரவையை நன்கு சூடு ஏற வறுத்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் ரவை லட்டு செய்யும் பொழுது திட்டு திட்டாக இல்லாமல் நைசாக சூப்பராக வரும். பின்னர் அதே மிக்ஸி ஜாரில் சர்க்கரையை சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை பாகு காய்ச்சி சேர்ப்பது எல்லாம் சரி வராது. இந்த முறையில் அரைத்து சேர்த்தால் சுவை கூடும்.

rava-laddu

பிறகு முந்திரி, பாதாம் பருப்புகளை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏலக்காய்களை தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தேங்காயின் தோல் பகுதியை நீக்கி வெள்ளையாக இருக்கும் சதைப் பகுதியை மட்டும் துருவலாக துருவி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த துருவிய தேங்காயை வெறும் வாணலியில் லேசாக 2 நிமிடம் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை வறுத்து சேர்ப்பதால் சீக்கிரம் ரவா லட்டு கெட்டுப் போகாது, சுவையும் அற்புதமாக இருக்கும்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து நான்ஸ்டிக் பேன் அல்லது அடி கனமான வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக நெய் ஊற்றி வறுத்து அரைத்த ரவை சேர்த்து கட்டி தட்டாமல் நன்கு உதிரியாக கிளறி கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் வறுத்தெடுத்த தேங்காய் துருவலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பொடி பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

rava-laddu1

கடைசியாக ஏலக்காய் தூள் மற்றும் அரைத்த சர்க்கரையையும் சேர்த்து ஒருமுறை நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த சமயத்தில் காய்ச்சி ஆறிய பாலை ஊற்றி லேசாக கிண்டிக் கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு இதே சூட்டுடன் லேசாக கை பொறுக்கும் அளவிற்கு உருண்டைகளை கைகளால் பிடித்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் வறுத்து சேர்ப்பதால் நீண்ட நாட்களுக்கு புதிதாக செய்தது போல நன்றாக இருக்கும். இந்த முறையில் நீங்களும் ரவா லட்டு செய்து பாருங்கள், அட்டகாசமான சுவையை சுவைத்து மகிழலாம்.

- Advertisement -