வாழைக்காய் வறுவல்! வேக வைத்து இப்படி கூட செய்யலாமா? இது தெரிஞ்சா நீங்களும் செஞ்சு பாக்க ஆசப்படுவீங்க!

raw-banana-varuval
- Advertisement -

வாழைக்காய் என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் ஒரு காய் வகையாகும். வாழைக்காயில் இருக்கும் நார் சத்துக்கள் செரிமானத்திற்கு மிகவும் உதவும் வகையில் இருக்கும். வாழைக்காய் குடலில் இருக்கும் கொழுப்பு செல்களை அழித்து தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ளும். இதனால் உடல் எடை கணிசமாக குறையும். அடிக்கடி வாழைக்காயை உணவில் எடுத்துக் கொள்வதால் உடலில் இருக்கும் குளுக்கோஸ் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. வாழைக்காயில் வைட்டமின், கால்சியம், மக்னீசியம் ஆகியவை நிறைந்திருப்பதால் நம் அன்றாட உணவில் அடிக்கடி வாழைக்காய் சேர்த்துக் கொள்வது நல்லது.

valakkai

வாழைக்காய் வாய்வு என்று பலரும் தவிர்த்து விடுகின்றனர். ஆனால் வாழைக்காயில் இருக்கும் சத்துக்கள் எலும்புகளுக்கு வலிமை கொடுத்து மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. எனவே இதில் பூண்டு, பெருங்காயம் எல்லாம் சேர்த்து செய்வதால் உடலுக்கு ஆரோக்கியம் தரும். குழந்தைகள் அடிக்கடி விரும்பி கேட்கும் இந்த வாழைக்காய் வறுவல் எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

- Advertisement -

வாழைக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 2, பெரிய வெங்காயம் – ஒன்று, இடித்த பூண்டு பல் – 6, குழம்பு மிளகாய்த் தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் – 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, எண்ணெய் – தேவையான அளவிற்கு, உப்பு – தேவையான அளவிற்கு.

raw-banana-vazhakkai

வாழைக்காய் வறுவல் செய்முறை விளக்கம்:
முதலில் வாழைக்காய்களை தோல் சீவி வட்டவட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும். நீங்கள் வாழைக்காய்களை வெட்டியவுடன் தண்ணீரில் போட்டுக் கொண்டால் கறுத்துப் போகாது. பின்னர் அடுப்பை பற்ற வைத்து வாழைக்காயை 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வாழைக்காய் சீக்கிரமே வெந்துவிடும் எனவே கவனத்துடன் பார்ப்பது நல்லது. அவ்வபோது கத்தி எடுத்து சொருகி பார்த்தால் தெரியும். சுலபமாக உள்ளே சென்றால் அடுப்பை அணைத்து வடிகட்டி ஆற விட வேண்டியது தான்.

- Advertisement -

பின்னர் வாழைக்காய்கள் நன்கு ஆறியதும் அதனுடன் குழம்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு தேவையான அளவிற்கு போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குள் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் அதில் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும். லேசாக இடித்த பூண்டு பற்களை தோலுடன் அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள்.

raw-banana-fry

பின்னர் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதக்கி வந்ததும், அதில் மசாலாவுடன் பிரட்டி வைத்த வாழைக்காய்களை போட்டு கலந்து விட வேண்டியது தான். ஒரு ஐந்து நிமிடத்திற்கு அந்த எண்ணெயிலேயே பிரட்டிக் கொண்டு இருந்தால் போதும்! ரொம்ப ரொம்ப சுவையான வாழைக்காய் வெந்து வறுவலாக வந்துவிடும். இந்த சுலபமான வாழைக்காய் வறுவல் நீங்களும் ஒருமுறை வீட்டில் முயற்சி செய்து பார்த்து பயனடையலாமே!

- Advertisement -