பத்து நாள் ஆனாலும் கெட்டுப் போகாத சுவையான தக்காளி தொக்கை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். வெளியூர் பயணம் செல்வதாக இருந்தாலும் இதனை எடுத்து செல்லலாம்

thakkali
- Advertisement -

வீட்டில் உள்ள பெண்களுக்கு திடீரென்று ஏதேனும் வெளியில் செல்ல வேண்டிய வேலை வந்துவிட்டால் அப்பொழுது வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்து வைத்து விட்டு செல்ல வேண்டுமே என்ற கவலை அவர்களுக்கு வந்துவிடும். அதுபோன்ற நேரங்களில் இந்த தக்காளி தொக்கு மட்டும் வீட்டில் இருந்தால் போதும் எந்தவித கவலையும் இல்லாமல் வெளியில் சென்று வரலாம். அப்படி பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாததும், தேவைப்படும் நேரங்களில் சுடசுட சாதத்துடன் சாப்பிட சுவையானதுமான தக்காளி தொக்கை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

food-compressed

தக்காளி தொக்கு செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கிலோ பழுத்த தக்காளியை எடுத்து நன்றாக கழுவிக் கொண்டு ஈரம் இல்லாத அளவிற்கு ஒரு துணியை பயன்படுத்தி துடைத்துக் கொள்ளவேண்டும். இதில் ஈரம் இல்லாமல் இருந்தால்தான் வெகுநாட்களுக்கு தக்காளி தொக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.

- Advertisement -

பின்னர் அனைத்து தக்காளியையும் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, அதனுடன் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் 5 பல் பூண்டு சேர்த்து வதக்கி கொண்டு, அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி நன்றாக வதங்கியதும் அடுப்பை அனைத்து விட்டு தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

தக்காளி

பிறகு இந்த தக்காளி தொக்கில் சேர்ப்பதற்காக வெந்தயப் பொடியை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்காக அடுப்பின் மீது கடாயை வைத்து கடாய் சூடானதும் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வெந்தயம் நன்றாக சிவந்து பொரிந்து வரும் வரை அடுப்பை சிறு தீயில் வைத்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு சிவந்த வெந்தயத்தை ஒரு சிறிய உரலில் சேர்த்து நன்றாகப் பொடித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு மீண்டும் அடுப்பை பற்றவைத்து ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஐந்து பல் பூண்டை நன்றாக தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொண்டு, அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். தக்காளி தொக்கில் நாம் சேர்த்துள்ள எண்ணெய் தனியாக பிரிந்து வரும்வரை அடுப்பை சிறு தீயில் வைத்து தக்காளி தொக்கை கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

tomato1

எண்ணெய் நன்றாக பிரிந்து வந்ததும் தக்காளி தொக்கில் இறுதியாக செய்து வைத்துள்ள வெந்தய பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான தக்காளி தொக்கு தயாராகிவிட்டது. இதனை சுடச்சுட சாதம், இட்லி, சப்பாத்தி போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் வெளியூர் பயணங்கள் செல்வதாக இருந்தால் இன்பா தக்காளி தொக்கை தாராளமாக 10 நாட்கள் வைத்து சாப்பிடலாம்.

- Advertisement -