காரசாரமான வெண்டைக்காய் மசாலா இப்படி செஞ்சு பாருங்க! எல்லா சாதத்திற்கும் சூப்பரா இருக்கும்.

vendakkai-masala2
- Advertisement -

எல்லோருக்கும் வெண்டைக்காய் என்றால் மிகவும் பிடித்தமான ஒரு காய்கறி வகையாக இருக்கும். ஆனால் அதை சரியாக சமைக்கா விட்டால் அதன் பிசுபிசுப்பு தன்மை அதனை வெறுக்க வைத்து விடும். ஆனால் வெண்டைக்காய் மசாலாவாக இப்படி ஒரு முறை செய்து கொடுத்தால், இனி அடிக்கடி இதைத்தான் வீட்டில் இருப்பவர்கள் கேட்பார்கள். அந்த அளவிற்கு சுவையை தரும் இந்த வெண்டைக்காய் மசாலா நாமும் எப்படி செய்வது? என்பதை கற்றுக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

vendakkai

வெண்டைக்காய் மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – கால் கிலோ, கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, கருவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை, மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மல்லித் தூள் – 2 டீஸ்பூன், கரம் மசாலா – அரை டீஸ்பூன், சோம்பு தூள் – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், தயிர் – அரை கப், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

வெண்டைக்காய் மசாலா செய்முறை விளக்கம்:
முதலில் கால் கிலோ வெண்டைக்காயை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். நல்லெண்ணெய் ஊற்றி செய்யும் பொழுது வெண்டைக்காய் சுவையாக இருக்கும்.

vendaikai1

இப்போது வெட்டி வைத்துள்ள வெண்டைக்காய்களை போட்டு ஒரு முறை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை எளிதாக நீங்கும். வெண்டைக் காய்களை எடுத்து விட்டு அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

- Advertisement -

கடுகு பொரிந்து வரும் பொழுது சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதனை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ளவும். பின்னர் பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

vendakkai-masala

வெங்காயம், தக்காளி நன்கு மசிய வதங்கிய பிறகு அரை கப் அளவிற்கு தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் சோம்பு தூள் ஆகியவற்றை மேற்கூறிய அளவின்படி சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை வெங்காயம், தக்காளியுடன் சேர்த்து கலந்துவிடுங்கள். இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். உப்பு, காரம் இப்பொழுது உங்கள் தேவைக்கு ஏற்ப சரி பார்த்து மசாலா வாசம் போனதும் நீங்கள் வறுத்து வைத்துள்ள வெண்டைக்காயை சேர்க்க வேண்டும்.

vendakkai-masala1

வெண்டைக்காயுடன் மசாலா நன்கு கலந்து கொள்ள அரை கப் அளவு தேவையான தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு மூடி போட்டு மூடி விடுங்கள். பத்து நிமிடத்தில் வெண்டைக்காய் மசாலா எல்லாம் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து தண்ணீர் வற்றி கெட்டியாக மசாலா கலவையுடன் சூப்பராக வெந்து வந்திருக்கும். அவ்வளவுதான் ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த வெண்டைக்காய் மசாலா அலாதியான சுவை உள்ளதாக இருக்கும்.0 நீங்கள் தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும். இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்க!

- Advertisement -