வெள்ளை வெஜிடபிள் புலாவ் உதிரி உதிரியாக இப்படி செய்து பாருங்கள், ஒரு பருக்கை கூட தட்டில் மிஞ்சாது!

whote-pulao
- Advertisement -

பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உண்டு. அதிலும் இந்தப் புலாவ் வகைகளை அனைவரும் ரசித்து ருசித்து சாப்பிடுவது வழக்கம். இந்த வகையில் எந்த மசாலா பொடிகளையும் சேர்க்காமல் வெள்ளை வெஜிடபிள் புலாவ் இப்படி செய்து கொடுத்தால் தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாமல் அனைத்தையும் சாப்பிட்டு விடுவார்கள். காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்யப்படும் இந்த வெஜிடபிள் புலாவ் ஆரோக்கியம் மிகுந்ததாக இருக்கும். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் காய்கறிகளை தவிர்த்து நீங்கள் விரும்பிய வேறு காய்கறிகளையும் சேர்த்து செய்யலாம். வெள்ளை வெஜிடபிள் புலாவ் எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் காண்போம் வாருங்கள்.

carrot-beans-peas

வெள்ளை வெஜிடபிள் புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – ஒரு கப், சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பட்டை – 1, கிராம்பு – 4, பிரிஞ்சி இலை – 1, ஏலக்காய் – 1, அன்னாசிப்பூ – 1, பெரிய வெங்காயம் -1, பச்சை மிளகாய் – 2, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி – தலா அரை கப், தக்காளி – 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், தண்ணீர் – ஒரு கப், தேங்காய் பால் – ஒரு கப், உப்பு தேவையான அளவிற்கு.

- Advertisement -

வெள்ளை வெஜிடபிள் புலாவ் செய்முறை விளக்கம்:
வெள்ளை வெஜிடபிள் புலாவ் செய்ய முதலில் பாஸ்மதி அரிசியை ஒரு கப் அளவிற்கு எடுத்து நன்கு களைந்து ஒன்றிரண்டு முறை அலசி தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் தேவையான காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கர் அல்லது மூடியுள்ள ஏதாவது ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். பாத்திரம் சூடானதும் அதில் தேவையான அளவிற்கு நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி கொள்ளுங்கள்.

pulao

எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரகம், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, அண்ணாச்சி பூ, ஏலக்காய் போன்ற மசாலா பொருட்களை சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் பச்சை மிளகாயை கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு போன்றவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

- Advertisement -

நீங்கள் பச்சைப் பட்டாணி சேர்ப்பதாக இருந்தால் மற்ற காய்கறிகள் பாதி அளவிற்கு வெந்ததும் சேர்த்தால் போதும். காய்ந்த பட்டாணியை ஊற வைத்து சேர்ப்பதாக இருந்தால் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறிகள் நன்கு வெந்து வந்ததும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் ஒரு டீஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்குங்கள். பச்சை வாசம் போக நன்கு அனைத்தும் வதங்கியதும், ஊற வைத்த அரிசியை நன்கு வடிகட்டி சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

pulao1

பின்னர் ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு 2 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். ஒரு கப் தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பாலும் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் பால் சேர்த்தால் இன்னும் கூடுதல் சுவையுடன் இருக்கும். அவ்வளவு தாங்க தேவையான அளவிற்கு உப்பு போட்டு இப்போது மூடி வைத்தால் பத்தே நிமிடத்தில் பொலபொலவென உதிரி உதிரியாக வெள்ளை வெஜிடபிள் புலாவ் தயாராகிவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த புலாவ் ஒருமுறை வீட்டில் முயற்சி செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -