1000 வருடம் பழமையான சிவன் கோவில் மண்ணில் புதைந்துகிடக்கும் மர்மம்

sivan-kovil

நம் முன்னோர்கள் கட்டிய அனைத்து கோவில்களும் நமக்கு அப்படியே கிடைத்ததா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் கூற வேண்டும். அந்நிய படையெடுப்புகளால் சில கோவில்கள் சிதிலமடைந்தது என்றால் இன்னும் சில கோவில்கள், நாம் சரிவர கவனிக்காததால் சிதிலமடைந்து. அந்த வகையில் முக்கால் பாகம் மண்ணுக்குள் புதைந்து கேட்பாரற்று கிடைக்கும் ஒரு அற்புத சிவன் கோவிலை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

llingam

வேலூர் மாவட்டம் கம்பராஜபுரம் என்னும் கிராமத்தில் தான் இந்த அற்புத சிவன் கோவில் புதைந்துகிடக்கிறது. சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியை ஆண்டு விக்ரம சோழன் என்னும் மன்னம் இந்த கோவிலிற்காக பலவற்றை தானமாக கொடுத்திருக்கிறார் என்று கூறுகிறது இங்குள்ள கல்வெட்டு குறிப்புக்கள்.

பழங்காலத்தில் இது ‘கருப்பு கோவில்’ என்றழைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் இந்த கோவில் முழுவதும் கருப்பு கற்களால் கட்டப்பட்டுள்ளது.

kalvettu

இந்தக் கோயிலின் கருவறை மண்ணினுள் புதைந்துள்ளதால் லிங்கம் இல்லை. உருளை வடிவமான தூண்கள் கோவிலில் சுற்றியுள்ள மண்டபத்தை தாங்கி நிற்கிறது. கோவிலின் வெளி பக்கத்திலுள்ள நந்தி, தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த கோவிலுக்கு கிழக்கு பக்கமும், தெற்கு பக்கமும் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் உல் பகுதியில் முனிவர்கள் லிங்கத்தை வழிபடுவது போன்ற சிற்பங்களும், நடன மங்கைகளின் சிற்பங்களும் காணப்படுகிறது. கருவறையின் தேவ கோட்டத்தில் வெளிச்சுவர்களில் இந்திரன் லிங்கத்தை வழிபடுவது போன்ற காட்சிகளும், இசைக்கலைஞர்களின் சிற்பங்களும் காட்சியளிக்கின்றன. கிடைத்த கல்வெட்டுகளை வைத்து பார்க்கும் பொழுது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டை இந்த கோவில் சேர்ந்ததாக இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த கோவிலில் பூஜை நடந்து கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று கருதப்படுகிறது. அதோடு இந்த கோவில் பாதிக்குமேல் புதைந்துள்ளதால் இதை பற்றிய கல்வெட்டு குறிப்புக்கள் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை.

pokkisam

பல நூறு ஆண்டுகளாக போற்றப்பட்டு வந்த இந்த கோவிலில் திடீரென ஏன் பூஜைகள் நிறுத்தப்பட்டன? இந்த கோவில் எப்படி புதைந்தது? இப்படி பல கேள்விகளுக்கான விடைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. விடை கிடைக்கும் பட்சத்தில் இது குறித்து பல மர்மங்கள் வெளியில் வரும் என்பது நிச்சயம்.

கோவிலுக்கு மேலே எழுப்பப்பட்டிருக்கும் கோவில்

இதேபோன்று அதிசயத்தை கொண்ட ஒரு கோவில் திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 7 கிலோ மீட்டர் தூரத்தில் சர்க்கார் பெரியபாளையம் என்னும் ஊரில் உள்ளது. இந்த கோவிலானது ராமாயண காலத்தில் ராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவர், இந்த இடத்தில் ஈசனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்ததால் இங்குள்ள மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்ற பெயர் வந்ததாக கூறுகிறது வரலாறு. சுக்ரீவர் லிங்கத்தை பிரதிஷ்டை செய்வது போன்ற சிற்பம் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது இதற்கு சான்றாக திகழ்கிறது. இந்த கோவில் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது என்பதற்கான சான்றுகளும் இந்த கல்வெட்டில் இருக்கின்றது.

sivan-koil

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இந்த கோவில்  1952 ல் கொண்டுவரப்பட்டது. இந்த கோவிலின் அஸ்திவாரத்தை பலப்படுத்த கோவிலின் தரைப்பகுதியில் உள்ள கற்களை பிரித்து தோண்டி பார்த்தபோது, தற்போதுள்ள கோவிலைப் போலவே பூமிக்கு அடியிலும், இதே போன்ற கட்டமைப்பை கொண்ட ஒரு கோவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பூமிக்கு அடியில் இருக்கும் ஒரு கோவிலுக்கு மேல் மற்றொரு கோயில் அமைக்கப்பட்டிருப்பது அதிசயமான ஒன்றுதான்.