தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து வரக்கூடாத பத்து பொருட்கள்.

women3
- Advertisement -

திருமணமான பெண்கள் தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்ல கூடாத பொருட்கள் என்று சிலவற்றை சாஸ்திரங்கள் நமக்கு கூறியிருக்கின்றன. அவை என்ன என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 1. கூர்மையான பொருட்களான அரிவாள், கத்தி, அரிவாள் மனை, ஊசி போன்றவற்றை எடுத்துச் செல்ல கூடாது. இதனால் இரு வீட்டிற்கும் பகைமை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இதனை தவிர்க்க வேண்டும்.

2. வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பம், முறம், மாப் போன்றவற்றை எடுத்து வரக்கூடாது. இதனால் இரு வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்படக்கூடும்.

- Advertisement -

3. புதிதாக திருமணமானவர்களுக்கு மளிகை பொருட்களை சீதனமாக கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. இதை வருடந்தோறும் கடைபிடிப்பவர்களும் இருக்கிறார்கள். அதில் முக்கிய பொருளான புளியை தவிர்க்க வேண்டும். இதை சீதனமாகவோ அல்லது கடனாகவோ பெற்றால் உறவுகளுக்கு இடையே விரிசல் ஏற்படக் கூடும்.

4. கல் உப்பு மற்றும் எண்ணெய் இவை இரண்டையும் எடுத்து வரக்கூடாது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும். அதனால் இதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

5. தாய் வீட்டில் பயன்படுத்திய விளக்கு, பூஜை அறையிலோ அல்லது வரவேற்பரையிலோ பயன்படுத்திய எந்த விளக்காக இருந்தாலும் அதை புகுந்து வீட்டிற்கு எடுத்து வருதல் கூடாது. விளக்கானது வீடு முழுவதும் வெளிச்சத்தை கொடுத்து நேர் வினைகளை ஏற்படுத்தியிருக்கும். அதை புகுந்த வீட்டிற்கு கொண்டுவந்தால் பிறந்த வீட்டில் இருள் சூழும் என்பது நம்பிக்கை.

6. தாய் வீட்டில் முருங்கை மரம் இருந்தால் அதிலிருந்து முருங்கைக்காய், முருங்கைக் கீரை, முருங்கைப்பூ போன்றவற்றையும், பாகற்காய், அகத்திக்கீரை, கருவேப்பிலை போன்றவையும் எடுத்து வரக்கூடாது. இதனால் பல கசப்பான விஷயங்கள் ஏற்படக்கூடும். எனவே இதனை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

7. பிறந்த வீட்டில் இருக்கும் அரிசி படியை எடுத்து வருதல் கூடாது. இது ஒரு குடும்பத்தின் தானியங்களை நிர்ணயிக்கும் படியாக கருதப்படுகிறது. இதை தாய் வீட்டில் இருந்து எடுத்து வருவதனால் தாய் வீட்டிற்கு வறுமையை ஏற்படுத்தும்.

8. முறம், இது அரிசி புடைப்பதற்காக பயன்படுத்தப்படுவது. இதை திருமண சீதனமாகக் கூட வாங்கி தர மாட்டார்கள். ஏனென்றால், இது ஈம சடங்கிற்கு பயன்படுத்தப்படுவதால் இதை நல்ல விஷேஷங்களில் தவிர்ப்பது வழக்கம். அதனால் இதனை தாய் வீட்டில் இருந்து எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும்.

9. திருமணமான பெண்கள் தங்கள் தாய் வீட்டிற்கு சென்று அசைவ உணவை எடுத்து வருதல் கூடாது. அங்கு சென்று சாப்பிட்டு வரலாமே தவிர அதனை வீட்டிற்கு எடுத்து வருதல் கூடாது. இது முற்றிலும் தவறு. பெண்கள் இதனை தவிர்த்தல் நல்லது.

10. சிலர் தாங்கள் வசிக்கும் இடத்தில் கோலமாவு கிடைக்காததால் அதை தாய் வீட்டிற்கு சென்று எடுத்து வருகிறார்கள். கோலமாவை இலவசமாக எடுத்துவருத்தல் என்பது கூடாது. வேண்டுமென்றால் இதற்கான தொகையை தாயிடம் கொடுத்துவிட்டு எடுத்து வரலாம்.

- Advertisement -