- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ செழிப்பில் உயர தாயார் மந்திரம்

செல்வ செழிப்பில் உயர தாயார் மந்திரம்

- Advertisement -

நாலு பேர் மதிக்கத்தக்க வகையில் செல்வ நிலையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும். பெரும் சாம்ராஜ்யத்தை அமைத்து பெயர் புகழ் அந்தஸ்தில் கொடி கட்டி பறக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பல பேருக்கு இருக்கும். ஆனால் சில பேருக்கு மட்டும் அந்த ஆசை நிறைவேறுகிறது, சில பேருக்கு மட்டும் தான் அந்த அதிர்ஷ்டம் அடிக்கிறது.

பல பேர் முயற்சி செய்யும்போது, தோல்வி அடைகிறார்கள். செய்யும் வேலையில் பின்னடைவு, வியாபாரத்தில் பின்னடைவு, லாபம் சம்பாதிக்க முடியவில்லை, வேலையில் முன்னேறி செல்ல முடியவில்லை, இதற்கெல்லாம் என்ன தீர்வு. அந்த பத்மாவதி தாயாரை நினைத்து வழிபாடு செய்வதே ஒரே தீர்வு.

- Advertisement -

தினம் தினம் பத்மாவதி தாயாரை நினைத்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து, இந்த ஒரு வார்த்தையை சொன்னால், உங்கள் வாழ்வில் முன்னேற்றம் அசுர வேகத்தில் வளரும். தினம் தினம் உங்களுடைய வேலையை துவங்குவதற்கு முன்பு, சொல்ல வேண்டிய பத்மாவதி தாயார் மந்திரம். மந்திரத்தை சொல்லி ஒரு வேலையை தொடங்கினால் அந்த வேலை நிச்சயம் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும்.

மந்திரம்

ஓம் ஹ்ரீம் பத்மாவதியே வஷட் !

- Advertisement -

வேண்டிய வரங்களை எல்லாம் வேண்டியபோது வாரி வாரி வழங்கும் சக்தி கொண்டவள் இந்த பத்மாவதி தாயார். அவளை வசியம் செய்யும் ஒரே ஒரு வரி சக்தி வாய்ந்த மந்திரம் இதுதான். ஒவ்வொருவருக்கும் தங்கள் மனதிற்கு இருக்கும் கஷ்டங்களை தங்களுடைய தாயிடம் பகிர்ந்து கொண்டால் மனபாரம் குறையும் என்று சொல்லுவார்கள். அது போல தான் இந்த தாயாரிடம் நீங்கள் வேண்டுதல் வைக்க வேண்டும். பத்மாவதி தாயாரை உங்கள் தாயாக நினைத்து வேண்டுதலை வையுங்கள்.

ஒவ்வொரு வேலையை துவங்கும் போதும், அம்மா பத்மாவதி தாயாரே எனக்கு பக்க தூணையாக இரு என்று சொல்லி, அந்த வேலையை துவங்குங்கள். முடிந்த நேரத்தில் எல்லாம் மனதிற்குள் அம்மாவின் முகத்தைக் கொண்டு வந்து, மேலே சொன்ன மந்திரத்தை சொல்லுங்கள். வாழ்க்கையில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதுவெல்லாம் தடை கற்களாக இருக்கிறதோ, அதெல்லாம் படி கற்களாக மாறிவிடும்.

இதையும் படிக்கலாமே: கர்ம வினையும் பாவமும் தீர

மனதிற்குள் நீங்காமல் இருக்கும் குழப்பங்கள் தீரும். சந்தோஷம் பிறக்கும். வாழ்க்கையை எப்படியும் வாழ்ந்திடலாம் என்ற தைரியமும் பிறக்கும். நான் தனி ஆள் அல்ல. என்னுடைய துணைக்கு கடவுள் இருக்கின்றார் என்று நம்பிக்கையும் பிறக்கும். அந்த நம்பிக்கையே உங்களை வாழ்க்கையில் உயர்த்தியும் விடும். உங்களுக்கும் தாயாரின் மீது நம்பிக்கை இருந்தால் இந்த ஆன்மீகம் பதிவு உங்களுக்கே சமர்ப்பணம்.

சற்று முன்