- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகர்ம வினையும் பாவமும் தீர

கர்ம வினையும் பாவமும் தீர

- Advertisement -

இந்த உலகத்தில் பிறப்பெடுக்கக்கூடிய ஒவ்வொரு உயிரினமும் முன் ஜென்மத்தில் ஏதாவது ஒரு பாவத்தை செய்திருக்கும். அந்த பாவத்தின் விளைவால் ஏற்பட்ட கர்ம வினைகளை அனுபவிப்பதற்காக தான் இந்த ஜென்மத்தில் பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான கஷ்டங்களுக்கு காரணம் நம்முடைய கர்ம வினைகளும் நாம் செய்த பாவமுமே. இன்றைய காலத்தில் யாரும் பாவம் செய்யாமல் வாழ்வது கிடையாது. தெரிந்தோ தெரியாமலோ பலவிதமான பாவங்களை செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

இந்த பாவத்தின் விளைவால் தான் கர்ம வினைகள் அதிகரிக்கிறது. அந்த கர்ம வினைகளால் தான் நாம் மறு ஜென்மம் என்ற ஒன்றை எடுத்து அதில் படாதபாடு படுவோம். இவை மட்டுமல்லாமல் இந்த ஜென்மத்தில் நம் வாழ்வில் இருக்கக் கூடிய நன்மைகள் எதையுமே பெற முடியாமலும் கஷ்டப்படுவோம். அப்படிப்பட்ட கர்ம வினைகளையும் பாவத்தையும் தீர்ப்பதற்கு செய்யவேண்டிய ஒரு பரிகாரத்தைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

கர்ம வினையும் பாவமும் தீர

பலரும் இறைவழிபாட்டில் ஈடுபடும் பொழுது அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்றுதான் வழிபாடு செய்வார்கள். வழிபாடு செய்வதால் மட்டும் பாவங்கள் என்பது நீங்காது. ஒரு தராசில் ஒரு பக்கம் பாவங்களை வைத்துவிட்டு மறுபக்கத்தில் எதையும் வைக்காமல் இருந்தால் பாவமே அதிகமாக இருக்கும். அதனால் பாவத்தை நீக்குவதற்கு நம்மால் இயன்ற தான தர்மங்களை செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக அன்னதானம் செய்வது என்பது மிகவும் சிறப்பு.

அன்னதானம் செய்வதில் கூட சில சூட்சமங்கள் இருக்கிறது. நன்றாக 3 வேலையும் உணவு கிடைக்கும் என்பவர்களுக்கு அன்னதானம் செய்வது விட ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் இருக்கக்கூடியவர்களுக்கு அன்னதானம் செய்தால் அதன் பலன் அதிகமாகவே இருக்கும். அதே போல் எந்த நாளில் செய்கிறோம் எதை தானமாக தருகிறோம் என்பதை பொறுத்தும் தான தர்மத்தின் பலன் என்பது மாறுபடும்.

- Advertisement -

அதிலும் மாதந்தோறும் வரக்கூடிய இந்த மூன்று நாட்கள் மறவாமல் நம்மால் இயன்ற அன்னதானத்தை வறுமையில் வாடும் ஒரே ஒரு நபருக்காவது செய்வதன் மூலம் கண்டிப்பான முறையில் நம்முடைய கர்ம வினைகளும் பாவங்களும் தீரும் என்று கூறப்படுகிறது. அந்த நாட்கள் தான் அமாவாசை, வளர்பிறை நவமி மற்றும் வளர்பிறை அஷ்டமி. இந்த மூன்று நாட்களிலும் மதிய நேரத்தில் வறுமையால் கஷ்டப்படுபவரை வீட்டிற்கு அழைத்து வந்து தலைவாழை இலை போட்டு கூட்டு, பொரியல், அப்பளம், வடை, பாயசம், ஊறுகாய், சாதம், சாம்பார், ரசம், காரக்குழம்பு, மோர் என்று முழுமையாக நாம் பரிமாற வேண்டும்.

எந்த ஒரு பொருளை நாம் பிறருக்கு தந்தாலும் போதும் என்று கூறாமல் வாங்கிக் கொண்டே இருக்கும் உலகம் இது. ஆனால் சாப்பாட்டை மட்டும்தான் போதும் வயிறு நிறைந்துவிட்டது என்று கூறுவார்கள். அதிலும் ஏதாவது ஒரு கலவை சாதத்தை பொட்டணமாக கட்டி தராமல் இப்படி வீட்டிற்கு அழைத்து வந்து தலைவாழை இலை போட்டு அணைத்து விதமான காய்கறிகளையும் குழம்புகளையும் வைத்து பரிமாறுவதன் மூலம் அவர்களின் வயிறு நிறைவது போல நம்முடைய தான தர்மத்தின் பலனும் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே:சுப காரிய தடை நீங்க

முழு மனதோடு ஆத்மார்த்தமாக ஒருவருடைய கஷ்டத்தில் பங்கெடுத்து அவருடைய கஷ்டத்தை நீக்குவதற்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்யும் பொழுது நம்முடைய கர்ம வினைகள் மற்றும் பாவங்களின் கணக்கு தீர ஆரம்பிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்