செல்வம் பெருகிக் கொண்டே இருக்க இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என தெரிந்து கொண்டு, நீங்களும் பலன் பெறுங்கள்

swasthik
- Advertisement -

எந்த ஒரு காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் அனைவரும் விநாயகப்பெருமானை வணங்கிவிட்டு, அதன் பிறகு அந்தக் காரியத்தை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்படி முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு தொடங்கும் எந்த ஒரு காரியமும் சிறப்புடன் நடந்து முடியும். அவ்வாறு சிறப்பு வாய்ந்த விநாயகரின் கையில் சிறப்பு சின்னமாக வரையப்பட்டுள்ளது தான் இந்த ஸ்வஸ்திக் சின்னம். நாம் நடந்து செல்லும் பொழுது பலரின் வீட்டு வாசலிலும் இந்த ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டுள்ளதை பார்த்திருப்போம். அவ்வாறு இதனை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். இவ்வாறு இந்த ஸ்வஸ்திக் சின்னம் எப்படி பயன்படுத்தப்படுகிறது? அதற்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது? இதனை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த ஸ்வஸ்திக் சின்னத்தின் வடிவமானது நான்கு திசைகளையும் குறிக்கின்ற விதத்தில் இருக்கிறது. மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும், ஒவ்வொரு கோடும் ஒன்றிற்கு மேல் குறுக்கே செல்லுமாறு இந்த ஸ்வஸ்திக் சின்னம் வரையப்படுகிறது. வீட்டு நிலை வாசலில் மஞ்சள், குங்குமம் பயன்படுத்தி இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து வைப்பார்கள்.

- Advertisement -

ஸ்வஸ்திக் என்றால் தடையற்ற வாழ்வு என்று பொருள்படுகிறது. இந்த ஸ்வஸ்திக் சின்னம் வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும் சின்னமாக அமைகிறது. ஸ்வஸ்திக் என்பது ஜெர்மனியில் அதிர்ஷ்ட அடையாளமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் நலனின் சின்னமாகவும் இந்த ஸ்வஸ்திக் இருக்கிறது.

ஸ்வஸ்திக் என்ற இந்தப் பெயர் சமஸ்கிருதத்திலிருந்து சூழப்பட்டுள்ளது. இதில் “ஸ்” என்பதற்கு நல்லது என்றும், “அஸ்தி” என்பதற்கு நல வாழ்வு என்பதும் பொருள் படுகிறது. ஸ்வஸ்திக் சின்னத்தில் இருக்கக்கூடிய எட்டு கோடுகளும், எட்டுத் சின்னங்களை குறிக்கிறது. இதன் நடுவே இருக்கும் மையப்புள்ளி மனிதனின் ஆன்மாவை குறிக்கிறது.

- Advertisement -

வீட்டில் உள்ளவர்களின் ஆத்மா எட்டு திசைகளிலும் உள்ள கடவுள்களை பிரார்த்தனை செய்ய வேண்டும், என்பதற்காகவே ஸ்வஸ்திக் சின்னம் வரையப்படுகிறது. இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை வீட்டின் கதவுகளிலும் நிலை வாசலிலும் அல்லது பண பெட்டியின் மீதும் வரைந்து வைப்பதன் மூலம் செல்வம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி நேர்மறை சக்திகள் அதிகரிக்கும்.

சமஸ்கிருதத்தில் ஸ்வஸ்திகா என்பதற்கு “அதிர்ஷ்டம்” “நன்மை” என்று பொருள் இருக்கிறது. இவ்வாறு இந்த சின்னத்தை வரைந்து தொழுவதன் மூலம் நம்மிடையே இருக்கும் அனைத்து விதமான கசப்புகள் மறைந்து நல்ல எண்ணங்கள் மட்டுமே நிலவிக் கொண்டிருக்கும். வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் விலகி ஓடும். நமக்குத் தீமை செய்து விட வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட நம்மிடம் வந்தவுடன், அவர்களின் மனதும் நேர்மறையாக மாறிவிடும். இவ்வாறு அனைத்தும் நன்மையாக நடக்க நமது வீட்டின் கால் படாத இடத்தில் இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை மஞ்சள், குங்குமம் பயன்படுத்தி வரைந்து வைக்க வேண்டும்.

- Advertisement -