- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாழ்க்கையில் இருக்கக்கூடிய சகல தடைகளும் நீங்குவதற்கு ஆகாயத்தாமரை ஒன்று போதும்.

வாழ்க்கையில் இருக்கக்கூடிய சகல தடைகளும் நீங்குவதற்கு ஆகாயத்தாமரை ஒன்று போதும்.

- Advertisement -

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் மனிதர்கள். அப்படி முன்னேற வேண்டும் என்று நினைத்து எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைந்து விட்டால் அவர்கள் தான் பாக்கியசாலிகளாக கருதப்படுகிறார்கள். வெற்றி அடையாமல் ஏதாவது ஒரு சூழ்நிலையில் தடைகள் ஏற்படும் பொழுது அந்த தடைகளை தவிர்ப்பதற்கு சரி செய்வதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன. முயற்சியோடு கூடிய பரிகாரத்தை செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் தடைகள் அனைத்தும் விலகும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எந்த செடியை வைத்து பரிகாரம் செய்தால் நம்முடைய தடைகள் அனைத்தும் விலகும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

வாழ்வில் நடக்கக்கூடிய ஒவ்வொரு செயலும் வெற்றிகரமாக நடக்க வேண்டும். குழந்தைகளாக இருப்பவர்கள் படிப்பில் வெற்றிகரமாக செயல்பட வேண்டும். படித்து முடித்துவிட்டு வேலை தேடும் பொழுது நல்ல வேலை கிடைக்க வேண்டும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்க வேண்டும். தொழில் செய்பவராக இருந்தால் அதில் லாபம் அதிகரிக்க வேண்டும்.

- Advertisement -

குடும்பத்தில் நல்ல சுப நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும். இப்படி பல நல்ல விஷயங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் நம் வாழ்வில் இருந்து கொண்டு இருக்கிறது. இதில் நமக்கு தடைகள் ஏற்படும் பொழுது அதனால் மன வருத்தம் அதிகரிக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரத்தை இப்பொழுது பார்ப்போம்.

பொதுவாக அனைத்து நீர் நிலைகள் அதாவது குளம், குட்டை, ஏரி என்று இருக்கக்கூடிய நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை என்னும் செடி இருக்கும். இந்த செடியை புதன்கிழமை அன்று பறித்து கொண்டு வீட்டிற்கு வர வேண்டும். வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் அதாவது காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9 ஆகிய நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு வெள்ளை நிற துணியில் மஞ்சளை தடவி காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மஞ்சள் நிற துணியில் ஆகாயத்தாமரை செடியை வெளியில் தெரியாத அளவிற்கு நன்றாக சுத்தி கொள்ள வேண்டும். பிறகு இதை வீட்டின் வடகிழக்கு மூலையில் யார் கையும் படாத அளவிற்கு மேலே ஒரு ஆணி அடித்து மாட்டி விட வேண்டும்.

காலையிலும், மாலையிலும் நாம் பூஜை செய்யும் பொழுது இதற்கும் சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர வேண்டும். 49 வது நாள் இந்த செடியை மறுபடியும் நீர்நிலைகளிலேயே போட்டுவிட்டு புதிதாக வேறு ஒரு செடியை எடுத்து வந்து இதே பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு பூ நம்மிடம் இருந்தால் பண பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.

இவ்வாறு நாம் நம் வீட்டில் இந்த செடியை இப்படி வைப்பதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய தடைகள், தடங்கல்கள் அனைத்தும் நீங்கி வெற்றிகரமான வாழ்க்கையை நம்மால் அமைக்க முடியும்.

சற்று முன்