- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதடைகளை நீக்கும் குலதெய்வ தீபம்

தடைகளை நீக்கும் குலதெய்வ தீபம்

- Advertisement -

நாம் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அந்த செயலில் பலவிதமான தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது, எதையும் வெற்றிகரமாக செய்து முடிக்கவில்லை என்று வருத்தப்படும் பொழுது அந்த தடைகளை தவிடுபொடி ஆக்குவதற்கு பலவிதமான தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோம். எப்பேர்ப்பட்ட தெய்வத்தை நாம் வழிபட்டாலும் அந்த தெய்வத்தின் பலன் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் முதலில் குலதெய்வத்தின் அருள் என்பது நமக்கு வேண்டும். அதனால் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்தை நாம் வழிபாடு செய்ய வேண்டும். ஒருவேளை குலதெய்வத்தை வழிபாடு செய்தும் குலதெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியவில்லை என்றாலோ நம்முடைய கஷ்டங்கள் குறையவில்லை என்றாலோ இந்த ஒரு தீபத்தை ஏற்ற குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெறலாம். நம்முடைய கஷ்டங்களும் தடைகளும் விலகவும் ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட தீபத்தை எப்படி ஏற்றுவது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தடைகளை நீக்கும் குலதெய்வ தீபம்

பலருக்கும் தங்களுடைய குலதெய்வம் எது என்று நன்றாகவே தெரியும். ஒரு சிலருக்கு மட்டும் குலதெய்வம் எது என்று தெரியாமல் இருக்கும். குலதெய்வம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் குலதெய்வமே துணை குலதெய்வமே காக்க வேண்டும் என்று மனதார நினைத்துக் கொண்டு செய்யக்கூடிய வழிபாடு நேரடியாக குலதெய்வத்தை சென்றடையும் என்றும் அதன் மூலம் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒரு சிலருக்கு குலதெய்வத்தின் அருள் கிடைப்பதில் தடைகள் இருக்கும். அப்படிப்பட்டவர்களும் சரி குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாகப் பெற வேண்டும் என்று நினைப்பவர்களும் சரி தங்களுடைய வீட்டில் மிகவும் எளிமையான முறையில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபட்டால் போதும்.

- Advertisement -

இந்த தீபத்தை வாராவாரம் வெள்ளி, செவ்வாய் போன்ற கிழமைகளில் ஏற்றலாம். பௌர்ணமி, அமாவாசை போன்ற பிரபஞ்ச பேராற்றல் மிகுந்த தினங்களில் ஏற்றலாம். ஆண் தெய்வமாக இருந்தாலும் சரி பெண் தெய்வமாக இருந்தாலும் சரி இந்த தீப வழிபாடு உகந்ததாகவே கருதப்படுகிறது. தீபம் ஏற்றுவதற்கு ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி அந்த நல்லெண்ணெயுடன் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்ற வேண்டும். பிறகு அதில் சுத்தமான வீட்டில் தயார் செய்த மஞ்சள் தூள் ஒரு சிட்டிகையும், ஒரு ஏலக்காயும், ஒரு கொட்டை பாக்கையும் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்தை ஏற்றும்பொழுது “குலதெய்வமே காத்து ரட்சிக்க வேண்டும்” என்று முழு மனதோடு குலதெய்வத்தை நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும். குலதெய்வத்துக்கு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைத்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீபத்தை நாம் நம்முடைய வீட்டு பூஜை அறையில் கிழக்கு பார்த்தவாறு ஏற்ற வேண்டும். குலதெய்வத்தின் படம் இருக்கும் பட்சத்தில் குலதெய்வ படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றலாம். குலதெய்வத்தின் படம் இல்லை என்பவர்கள் ஒரு சிறிய மண் குடுவை அல்லது செம்பு சொம்பு முழுக்க தண்ணீர் ஊற்றி நிரம்பி வைத்து விட்டு அதை குலதெய்வமாக பாவித்து அதற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: எதிரிகளை விலகச் செய்யும் ஞாயிற்றுக்கிழமை பரிகாரம்

இப்படி யார் ஒருவர் முழு மனதோடு குலதெய்வத்தை நினைத்து இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் அவர்கள் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் தவிடு பொடி ஆகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்