நாளை 21/1/2023 தை அமாவாசையில் தவறாமல் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன?

thai-amavasai-valipadu
- Advertisement -

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் பொதுவாக பிரபஞ்சத்தின் சக்தி அதிகரித்து காணப்படும். பிரபஞ்சத்தில் நடக்கும் இந்த மாற்றம் பல்வேறு பலன்களையும் கொடுக்கிறது. அமாவாசை பித்ருகளுக்கு உகந்த திதியாக கொண்டாடப்படுகிறது. அதிலும் தை அமாவாசை மிகவும் மகத்துவமானதாக போற்றப்படுகின்றது. அப்படிப்பட்ட இந்த தை அமாவாசை நாளை அதிகாலை 4.25 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.20 மணி வரை நீடிக்கிறது. இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன? நமக்கு நன்மைகள் தரக்கூடிய வழிபாடுகள் என்னென்ன? என்பது போன்ற பயனுள்ள ஆன்மீக குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தை அமாவாசையில் பித்ருக்கள் பூமிக்கு வந்து நம்மை ஆசீர்வதிக்க கூடிய நல்ல நாளாக இருக்கின்றது. இந்த நாளில் இறந்த போன நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் கடமைகள் ஒவ்வொன்றும் நமக்கான நற்பலன்களை அள்ளிக் கொடுக்கின்றன. அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து, பல புண்ணிய ஸ்தலங்களில் நீராடி வழிபடுபவர்களும் உண்டு.

- Advertisement -

பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், எளியவர்களுக்கு தான தர்மங்கள் செய்வதும் இந்நாளில் ரொம்பவே விசேஷமான விஷயமாக இருந்து வருகிறது. தை அமாவாசையில் விரதம் இருக்க வேண்டியவர்கள், தந்தையை இழந்த ஆண் மக்களும், கணவனை இழந்த பெண்களும் ஆவர். இவர்கள் விரதமிருந்து அதிகாலை நீராடி இறந்தவர்களுக்கு படையல் இட்டு மனதார அவர்களை வழிபட வேண்டும். எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பின்னர் படையல் உணவை காக்கைக்கு முதலில் வைத்து காகத்தை அழைக்க வேண்டும். இந்த நாளில் பித்ருக்கள் காக ரூபமாக வந்து படையல் சாதத்தை முதலில் எடுத்த பின்பு தான் வீட்டில் மற்றவர்கள் அனைவரும் சாப்பிட வேண்டும் என்பது நியதி! இவ்வாறு செய்ய பித்ருக்களின் ஆசீர்வாதம் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். அவர்கள் ஆசீர்வாதம் இருந்தால் வாழ்க்கையில் மென்மேலும் உயரத்தை நோக்கி சென்று கொண்டே இருக்கலாம். எவ்வளவு தடைகள் இருந்தாலும் அவையெல்லாம் ஒவ்வொன்றாக உடைப்படுவதை நீங்கள் காணலாம்.

- Advertisement -

பித்ரு ஆசிர்வாதமும், குலதெய்வ ஆசீர்வாதமும் கிடைக்கக்கூடிய இந்த தை அமாவாசையில் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு விஷயம், பசுக்களுக்கு தானம் செய்வது ஆகும். பசுக்களுக்கு சூரிய பகவானுக்கு உகந்த கோதுமை தவிட்டை அன்றைய நாளில் தானம் செய்வது சிறப்பு! முந்தைய நாளே கோதுமை தவிட்டை ஊற வைத்து அதை மறுநாள் காலையில் நீராடி விட்டு பசுக்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

கோதுமை தவிடு கிடைக்காவிட்டால் அரிசி கலந்த உணவுகள், வாழைப்பழம், அகத்திக்கீரை போன்றவற்றையும் தானம் செய்யலாம். படையல் சாப்பாட்டை காகம் எடுக்கவில்லை என்றாலும், உங்களுடைய கண்களுக்கு தானம் கொடுக்க பசுக்கள் கிடைக்கவில்லை என்றாலும் பித்ருக்கள் சாபம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் ஒரு முறையேனும் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி விட்டு வரலாம்.

இதையும் படிக்கலாமே:
பூஜை அறையில் இந்த 1 வார்த்தையை எழுதி வைத்தால் போதும். தெய்வங்கள் உங்கள் பூஜை அறையில் வந்து விரும்பி அமர்ந்து கொள்ளும்.

பின் ஒவ்வொரு பௌர்ணமி மற்றும் அமாவாசையில் வரக்கூடிய சோடசக்கலை இந்த தை அமாவாசையில் 22 ஆம் தேதி அதிகாலை 2:20 மணியிலிருந்து 4:20 மணி வரையிலும் இருக்கிறது. இந்த இரண்டு மணி நேரத்தில் ஐந்து வினாடிகள் சோடசக்கலை நேரமாக இருக்கிறது என்று அகத்தியர் பாடலில் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஐந்து நொடி எப்போது வரும்? என்பது மக்கு தெரியாது எனவே இந்த இரண்டு மணி நேரம் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து நாம் இறைவழிபாடு செய்து மனமுருகி வேண்டினால் வேண்டியது வேண்டியபடி அப்படியே கிடைக்கும் என்கிற நம்பிக்கை உண்டு. சக்தி வாய்ந்த இந்த நேரத்தில் ஒரே ஒரு வேண்டுதலை மட்டுமே முன் வைக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -