நிறைய பெற்றவர்களுக்கு இன்றைய சூழ்நிலையில் இருக்கும் கவலை, திருமண வயதை கடந்தும் என்னுடைய பிள்ளைக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. முப்பது வயதைக் கடந்தும் என்னுடைய பிள்ளைக்கு திருமணம் நடக்கவில்லை, எவ்வளவோ வரன் வருகிறது, ஆனால் கல்யாணம் கைகூடி வர மாட்டேங்குது என்று சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட பிரச்சனை உங்களுடைய வீட்டில் இருந்தால், உங்களுடைய பெண் பிள்ளைகளுக்கோ, ஆண் பிள்ளைகளுக்கோ திருமணம் நடக்க வேண்டும் என்றால், பின் சொல்லக்கூடிய இந்த பரிகாரத்தை செவ்வாய் கிழமை அன்று துர்கை அம்மன் கோவிலில் செய்ய வேண்டும். உங்கள் வீட்டு பக்கத்தில் சிவன் ஆலயங்களில் அல்லது வேறு ஏதாவது ஆலயங்களில் துர்க்கை அம்மன் சன்னிதானம் இருந்தால், அந்த சன்னிதானத்திலேயே இந்த பரிகாரத்தை தொடர்ந்து, 27 வாரம் செய்து வாருங்கள்.
27 ஆவது வாரம் முடிவதற்குள்ளாகவே உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. (கணவன் மனைவி பிரிந்து இருந்தால் இரண்டு பேரும் ஒன்று சேர வேண்டும் என்பதற்காகவும் கணவன், மனைவி யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.) அந்த அற்புதம் வாய்ந்த, சக்தி வாய்ந்த பரிகாரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
பை செவ்வாய்க்கிழமை துர்க்கை வழிபாடு
கை செவாய்க்கிழமையில் இந்த வழிபாட்டை துவங்கி விடுங்கள். வரும் செவ்வாய்க்கிழமையில் அல்லது அடுத்த வாரம் வரக்கூடிய செவ்வாய் கிழமை உங்களுடைய சௌகரியத்திற்கு இந்த வழிபாட்டை நீங்கள் துவங்கலாம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லுவார்கள். இந்த தை செவ்வாயில் உங்கள் பிரச்சனைகளுக்கு வழி கிடைக்க போகிறது என்று நினைத்துக் கொண்டு இந்த பதிவை படியுங்கள்.
வீட்டு பக்கத்தில் இருக்கும் துர்க்கை அம்மன் கோவிலுக்கு முதல் வாரம் செவ்வாய்க்கிழமை ஒரு எலுமிச்சம்பழம் வாங்கி கொடுத்து, ஒரு மண் அகல்விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். சில பேர் வீட்டில் எலுமிச்சை பழம் தீபம் போடக்கூடிய வழக்கம் இருக்கும். உங்கள் வீட்டில், உங்கள் அம்மா தாத்தா பாட்டி என்ன சொல்கிறார்கள், எலுமிச்சம் பழத்தில் தீபம் போடலாம் என்று சொன்னால் எலுமிச்சம் பழத்தில் தீபம் போடலாம்.
நீங்கள் எலுமிச்சம் பழத்தில் தீபம் போட்டாலும், மண் அகல் விளக்கில் தீபம் போட்டாலும், குருக்களிடம் இந்த எலுமிச்சம் பழத்தை கொடுத்து அம்பாளின் பாதத்தில் வைக்க சொல்ல வேண்டும். அதற்கு முன்பு அந்த எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக்கொண்டு உங்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு தாய் இந்த பரிகாரத்தை செய்தால், என்னுடைய குழந்தைக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து குருக்களிடம் அந்த பழத்தை கொடுத்து, துர்க்கை அம்மன் பாதத்தில் வைத்து விட சொல்லுங்கள்.
முதல் வாரம் 1 எலுமிச்சம் பழம், துர்க்கை அம்மன் பாதத்தில் வைத்து துர்க்கை அம்மன் சன்னிதானத்திற்கு முன்பு 1 விளக்கு ஏற்ற வேண்டும். இரண்டாவது வாரம் 2 எலுமிச்சம் பழங்களை கையில் வைத்து உள்ளம் உருக வேண்டி, துர்க்கை அம்மன் பாதத்தில் வைத்து விட்டு, 2 தீபங்களை ஏற்ற வேண்டும். இதே போல மூன்று வாரம், நான்காவது வாரம் என்று தொடர்ந்து செய்ய வேண்டும். 26 ஆவது வாரம், 26 எலுமிச்சம் பழங்களை துர்க்கை அம்மன் பாதத்தில் வைத்துவிட்டு, 26 விளக்குகளை ஏற்ற வேண்டும்.
27 வது வாரம் தான், 27 எலுமிச்சம் பழங்களை வாங்கி மாலையாக கோர்த்து துர்க்கை அம்பாளுக்கு போட்டு, 27 விளக்குகள் ஏற்றி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து, உங்களால் முடிந்த நெய்வேத்தியம் செய்து வைத்து, இந்த பரிகாரத்தை சிறப்பாக நிறைவு செய்து கொள்ள வேண்டும். இதுபோல வழிபாட்டை செய்பவர்கள் வீட்டில் இருக்கும் சுபகாரியத் தடை நிச்சயம் விலகும். முழு நம்பிக்கையோடு இதை செய்தால் அடித்து ஆணித்தனமாக சொல்லலாம்.
எந்த தோஷம் உங்கள் பிள்ளைக்கு இருந்தாலும் சரி, அந்த தோஷங்கள் எல்லாம் விலகி நல்ல திருமண வாழ்க்கை அமையும். திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய வாழ்க்கை மிக மிக சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் துர்க்கை அம்மன் சன்னிதானத்தில் இந்த வழிபாட்டை செய்து நல்ல பலனை பெறவும். 27 வாரத்திற்குள் திருமணம் நிச்சயமாகிவிட்டாலும் இந்த வழிபாட்டை இடையே நிறுத்தக்கூடாது.
இதையும் படிக்கலாமே: தை வெள்ளிக்கிழமை குங்கும அர்ச்சனை
27 வாரமும் செய்து முடிக்க வேண்டும். இடையே மாதவிடாய் தடைகள் பெண்களுக்கு வந்தால் அந்த வாரத்தை மட்டும் தவிர்த்து விட்டு அடுத்த வாரத்தை கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். திருமணமாகாத பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று துர்க்கை அம்மனை நாங்களும் வேண்டிக் கொண்டு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.