தை மாதம் வெள்ளிக்கிழமை, செவ்வாய் கிழமை, ஞாயிற்றுக்கிழமை எல்லா நாளுமே அம்பாளுக்கு உரிய நாட்கள் தான். உங்களுடைய வீட்டில் சுப காரிய தடைகள் இருக்கிறது என்றால், நீங்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். சில வீடுகளில் பெண்களுக்கு அமைந்த கணவர் சரியாக இருக்க மாட்டார், குடும்பத்தை சரியாக கவனித்துக் கொள்ள மாட்டார், சரியான வேலைக்கு செல்ல மாட்டாங்க, அல்லது கணவருக்கு ஏதாவது தீராத உடல் உபாதைகள் இருக்கும்.
பெண்களுடைய இல்லற வாழ்க்கை ரொம்பவும் கஷ்டத்தில் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி கெட்டுப் போக காரணம் காரணம் கணவராக இருப்பார். உங்களுடைய கணவரை நல்வழிப்படுத்த வேண்டும், உங்கள் கணவருடைய ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்க வேண்டும், கணவன் மனைவி ஒற்றுமை வேண்டும் மாங்கல்யம் பலம் வேண்டும்.
கணவரிடம் இருக்கும் கெட்ட பழக்கம் நீங்க வேண்டும் என்றும் இந்த பரிகாரத்தை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்யலாம், அல்லது கோவிலுக்கு சென்றும் செய்யலாம். அது உங்களுடைய விருப்பம். வீட்டிலிருந்தபடி இந்த பரிகாரத்தை எப்படி செய்வது. கோவிலுக்கு சென்று இந்த பரிகாரத்தை எப்படி செய்வது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
தை மாதம் பெண்கள் செய்ய வேண்டிய அம்பாள் வழிபாடு
தை செவ்வாய்க்கிழமை, தை வெள்ளிக்கிழமை அல்லது நீங்கள் வேலைக்கு போகும் பெண்களாக இருந்தால் தை ஞாயிற்றுக்கிழமை கூட வீட்டில் அம்பாளை நினைத்து இந்த பூஜையை செய்யலாம். பூஜை அறையை அலங்காரம் செய்து அம்பாளுக்கு வாசம் நிறைந்த பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் எந்த அம்மன் திரு உருவப்படம் இருந்தாலும் இந்த பூஜையை தாராளமாக செய்யலாம். மல்லிகை பூ, செவ்வரளி பூ, எந்த வாசம் நிறைந்த பூக்களை கொண்டும் அம்பாளுக்கு அலங்காரம் செய்து விடுங்கள்.
ஒரு தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு, பூ, பழம் வளையல் மஞ்சள் குங்குமம் இன்னும் உங்களுக்கு வசதி இருந்தால், பெண்கள் பயன்படுத்தக்கூடிய கண் மை, மருதானி, சீப்பு மஞ்சள் கயிறு இதுபோல பொருட்களை எல்லாம் அந்த தட்டில் வாங்கி வைக்க வேண்டும். முடிந்தால் ஒரு ரவிக்கை துணி, 500 ரூபாய்க்கு ஒரு புடவை எடுக்க முடியும் என்றால் தாராளமாக ஒரு புடவையும் வாங்கி எடுத்து ஒரு தட்டில் வாங்கிய பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்து அம்பாள் முன்பு வைத்து விடுங்கள். ஒரு விளக்கு ஏற்றி வையுங்கள். ஒரு சக்கரை பொங்கலோ பால் பாயாசமோ நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள். மணக்க மணக்க சாம்பிராணி தூபம் போட்டு விடுங்கள்.
இப்போது உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது அதை அம்பாள் இடம் சொல்லுங்கள். குலதெய்வத்தை மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். நீங்கள் திருமணமாகாத பெண்களாக இருந்தால் நல்ல கணவன் தேவை, நல்ல வாழ்க்கை தேவை என்று இந்த பூஜையை செய்யலாம். உங்கள் பெண்ணுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தும் தாய்மார்கள் இந்த பூஜையை செய்யலாம். அல்லது உங்களுடைய கணவருக்கே என்ன பிரச்சனை இருக்கிறதோ அந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்றும் வேண்டுதலை வைத்து விடுங்கள்.
பிறகு “ஓம் ஹ்ரீம் தேவியை நமஹ” என்ற இந்த மந்திரத்தை சொல்லி அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். ஒரு வெற்றிலையின் மேல் குங்குமத்தை போட்டு அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தை ஒரு டப்பாவில் போட்டு நீங்களும் நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இந்த குங்குமத்தை கொடுக்கலாம். இறுதியில் கற்பூர ஆராதனை காண்பித்து இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
தட்டில் வாங்கி அலங்காரம் செய்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா, அந்த பொருட்களை எல்லாம் ஏதேனும் ஒரு ஏழை பெண்ணுக்கு தானமாக கொடுத்து விடுங்கள். திருமணமான பெண்ணுக்கு கொடுக்கலாம், திருமணமாகாத பெண்ணுக்கு கொடுக்கலாம். அது உங்களுடைய விருப்பம் ஆனால் அந்த பொருட்களை தானம் செய்து விடுங்கள் இவ்வளவுதான் பரிகாரம்.
இதுவே நீங்கள் ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று இந்த தட்டை அம்பாளின் முன்பு வைத்து, மனமுருக வேண்டுதல் செய்து, கொண்டு பிரார்த்தனை வைத்து, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கோவிலிலேயே ஒரு பெண்ணுக்கு இந்த பொருட்களை தானம் கொடுப்பதாக இருந்தாலும் கொடுக்கலாம், தவறு கிடையாது. இந்த தை மாதம் முடிவதற்குள் மனநிறைவோடு இந்த பரிகாரத்தை செய்பவர்கள் வீட்டில் நிச்சயம் மங்கலம் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: தை செவ்வாய் கிழமை துர்க்கை பரிகாரம்
அந்த வீட்டில் இருக்கும் பெண்ணினுடைய கஷ்டம் முழுமையாக தீரும் என்பது நம்பிக்கை. உள்ளவர்களுக்கு இந்த பரிகாரம் சமர்ப்பணம். எல்லோருடைய குடும்பத்திற்கும் அந்த அம்பாளின் ஆசி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்து இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.