11/2/2022 கடைசி தை வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை இவ்வாறு வழிபட தீராத பணக்கஷ்டம் தீரும்! தவறவிட்டு விடாதீர்கள்.

vilakku-uppu-lakshmi
- Advertisement -

மகாலட்சுமியை வழிபடுவதற்கு உகந்த கிழமை வெள்ளிக்கிழமை ஆகும். அதிலும் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமான பலன்களைக் கொடுக்கக் கூடியதாக அமைந்துள்ளது. அந்த வகையில் ஆடி வெள்ளி, தை வெள்ளி போன்றவையும் அடங்குகிறது. இதில் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய நாளில் மகாலட்சுமியை வழிபட தீராத பணக்கஷ்டம் தீர்வதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் மகாலட்சுமியை எப்படி முறையாக வழிபடுவது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தை வெள்ளிக்கிழமைக்கு முந்தைய நாளன்று பூஜை அறை மற்றும் வீட்டை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மேலும் பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்களையும் தேய்த்து கழுவி நன்கு சுத்தம் செய்து காய வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் எழுந்து வாசலில் கூட்டி பெருக்கி பசுஞ்சாணம் அல்லது மஞ்சள் தண்ணீர் தெளித்து கொள்ளுங்கள். பின்னர் மாக்கோலமிட்டு கொள்ளுங்கள். மாக்கோலம் இடுவது மஹாலக்ஷ்மியை வீட்டிற்குள் வரவேற்கும் அற்புத வழியாகும்.

- Advertisement -

பின்னர் பூஜை அறையில் இருக்கும் மஹாலக்ஷ்மி மற்றும் அனைத்து தெய்வங்களின் திரு உருவத்திற்கும் சந்தன, குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மஹாலக்ஷ்மி தாயாருக்கு ஏலக்காய் மாலை, கிராம்பு மாலை போன்றவற்றை கோர்த்து போட்டுக் கொள்ளுங்கள். அது போல் விஷ்ணுவுக்கு துளசி மாலையும், சிவனுக்கு வில்வ மாலையும், பிள்ளையாருக்கு அருகம்புல் மாலையும் கிடைத்தால் போடுங்கள்.

தீர்த்தக் கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நான்கைந்து துளசி இலைகள், கொஞ்சம் பச்சை கற்பூரம், ஏலக்காய் பொடித்து தூவி கொள்ளுங்கள். இது தெய்வ கடாட்சத்தை கொடுக்கும். பின்னர் திரி சூலம், வேல், சங்கு போன்ற பொருட்களை வைத்திருப்பவர்கள் அதற்கு உரிய முறையில் அலங்கரித்துக் கொள்ளுங்கள். பின்னர் இறைவனுக்கு பிடித்த நைவேத்தியம் படைக்க வேண்டும். இனிப்பான ஏதாவது ஒரு நைவேத்தியத்தை படைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமையில் வாங்க வேண்டிய முக்கிய பொருட்கள் பச்சரிசி, வெல்லம், கல் உப்பு, மஞ்சள் கிழங்கு ஆகியவையாகும். சிறுசிறு கிண்ணங்களில் இது போல் பச்சரிசி, வெல்லம், உப்பு, மஞ்சள், துவரம் பருப்பு போன்றவற்றை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக் கிழமையில் உப்பு தீபம் ஏற்றுவது, வெற்றிலை தீபம் ஏற்றுவது போன்றவை சிறந்த பலன்களை கொடுக்கும். வெற்றிலையின் மீது பச்சரிசியை பரப்பி அதன் மீது அகல் விளக்கு ஒன்றை வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு! அது போல வாழை இலை மீது உப்பைப் பரப்பி அதன் மீது விளக்கு ஒன்றை வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சகல பிரச்சினைகளையும் தீர்த்து சௌபாக்கியம் கொடுக்கும் அற்புத பரிகாரமாக அமையும்.

இப்படி அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தீபங்களை ஏற்றி பயன்பெறலாம். எதுவும் செய்யாவிட்டாலும், குத்துவிளக்கு ஏற்றி பூஜை செய்வது ரொம்ப விசேஷமான பலன்களைக் கொடுக்கும். குத்து விளக்கிற்கு அலங்கரித்து நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி ஐந்து முகங்களுடன், ஐந்து ஜோதியை எரிய விட்டால் ரொம்பவே சுபீட்சம் நிலைத்திருக்கும். தீராத கடன்கள் தீரவும், நலிந்த தொழில், வியாபாரம் விருத்தி அடையவும் தை வெள்ளிக்கிழமைகளில் மனதார மகாலட்சுமி மந்திரங்களை உச்சரித்து இவ்வாறு பூஜை செய்ய வேண்டும். மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான தாமரை மலர்களால் அர்ச்சிப்பது, குங்கும அர்ச்சனை செய்வதும், நாணய அர்ச்சனை புரிவதும் விசேஷமான பலன்களைக் கொடுக்கும்.

- Advertisement -