தை மாத ராசி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Thai-matha-rasi palan
- Advertisement -

ஒவ்வொரு மாதம் பிறக்கும் பொழுதே நமக்கு எப்படி இருக்கும்? என்கிற ஆர்வம் வந்து விடுகிறது. இம்மாதம் முழுவதும் என்னென்ன நிகழ்வுகள் நடக்க போகிறது? லாப, நஷ்டங்கள் என்னென்ன? என்கிற கவலையும் கூடவே சேர்ந்து வந்து விடுகிறது. 12 ராசிக்காரர்களுக்கும் இந்த தை மாதத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்க இருக்கிறது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு தை மாதம் அற்புதமான நல்ல பலன்களைக் கொடுக்க இருக்கிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள். கசப்பான நிகழ்வுகளை மறந்து புதிய பயணத்தை நோக்கி பயணம் செய்வீர்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையப் போகிறது. குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு புதிய யுக்திகளை கையாளுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற வார்த்தைகள் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி விடும் என்பதை நினைவில் வைத்து செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உங்கள் ராசிக்கு அனுகூல பலன்கள் உண்டு.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு தை மாதம் அனுகூலமான நல்ல பலன்கள் கொடுக்க இருக்கிறது. இதுவரை நிலவி வந்த மந்தமான சூழ்நிலை நீங்கி, புதுப்பொலிவுடன், புத்துணர்வாக செயலாற்றக் கூடிய அமைப்பாக இருக்கிறது. கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகளை கலைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமையை வெளிக்கொணர வேண்டிய அற்புத வாய்ப்புகள் பெற இருக்கிறீர்கள். வியாபார ரீதியான மந்த நிலை நீங்கி வியாபாரம் சூடுபிடிக்க துவங்கும். தொழில் ரீதியான போட்டி பொறாமைகளை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிறுசிறு பிரச்சனைகள் நீங்கிவிடும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு தை மாதம் நல்ல பலன்களை தரப் போகிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும் இனிப்பாக இருப்பதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேற இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் காலதாமதம் ஆகலாம். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் முடிவுக்கு வரும். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளை சாதுரியமாக கையாளுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை முன்பை விட பொறுப்பாக செய்வீர்கள். தாய்வழி உறவினர்கள் ஆதரவு பெருகும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது.
பரிகாரம்: செவ்வாய் கிழமையில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும்.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு தை மாதம் அமோகமான பலன்களை கொடுக்க இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்தும் எண்ணத்தில் இருப்பீர்கள். இடமாற்றம் குறித்த விஷயங்களில் சாதகமான பலன்கள் உண்டு. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கமான சூழ்நிலைகளை எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். தொலை தூர இடங்களிலிருந்து சுப செய்திகளை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்து கொள்வது நல்லது.
பரிகாரம்: திங்கட்கிழமைகளில் சிவனுக்கு வில்வம் சாற்றி வழிபட்டு வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு தை மாதம் அற்புதமான வழிகளை கொடுக்க இருக்கிறது. திக்குத் தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த உங்களுக்கான பாதை தென்பட இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் ஈகோவை தவிர்த்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்திற்கான முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேல் அதிகாரிகளுடன் தேவையற்ற பிரச்சனைகளில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூல பலன்களைப் பெற இருக்கிறீர்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.
பரிகாரம்: வியாழன் கிழமையில் குரு வழிபாடு செய்து வர நினைத்தது நடக்கும்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு தை மாதம் சிறப்பான பலன்களை கொடுக்க இருக்கிறது. மனைவிவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். தேவையற்ற விஷயங்களை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் சிறுசிறு சண்டை சச்சரவுகள் அவ்வபோது வந்து செல்லும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் மேலோங்கி காணப்படும். வரவுக்கு மீறிய செலவுகள் மாதத்தின் பிற்பகுதியில் அதிகரிக்கும் என்பதால் ஆடம்பரத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் படிப்படியாக குறையத் துவங்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர வழிபாடு செய்து வர மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு தை மாதம் அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. இதுவரை உங்களை திசைதிருப்பி கொண்டிருந்த ஒரு விஷயத்தில் இருந்து வெளிவந்து லட்சிய பாதையை நோக்கி பயணம் மேற்கொள்வீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த தேவையற்ற சந்தேகங்கள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை மேலோங்கும். பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை செலவிடுவீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். புதிய ஒப்பந்தங்களை பெறுவீர்கள். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்ப்பது நல்லது. புதிதாக பணியாளர்களை பணியமர்த்தும் முன்பு யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பொறுப்புகளை சரிவர செய்து முடிப்பீர்கள். குடும்பத்தின் தேவைகளையும் நிறைவேற்றி மகிழ்வீர்கள். செலவுகள் வந்து கொண்டே இருந்தாலும் அதற்குரிய வரவுகளும் வந்து சேரும் என்பதால் கவலை கொள்ள தேவை இல்லை.
பரிகாரம்: நோய் தீர தன்வந்திரி பகவானை வழிபடுவது உத்தமம்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு தை மாதம் அனுகூலமான பலன்களைக் கொடுக்கக் கூடியதாக அமைய இருக்கிறது. சுப காரிய முயற்சிகளில் கைகூடி வரும். நீண்ட நாள் தள்ளி சென்ற நல்ல காரியம் நடக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவேண்டிய பாக்கித் தொகை வந்து சேரும். பொருளாதார ரீதியான ஏற்றம் உத்வேகத்தை கொடுக்கும். கலை துறையில் இருப்பவர்களுக்கு சாதகப் பலன்கள் உண்டு. தேவையற்ற விமர்சனங்களை கருத்தில் கொள்ளாமல் உங்கள் இலக்கை நோக்கி பயணிப்பது நல்லது. உத்யோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகள் மறையும். சமுதாயத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக சிந்தனைகள் அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தை கூடுதலாக கவனிப்பது நல்லது.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் அம்பிகை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு தை மாதம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் கூடிய அமைப்பாக இருக்கிறது. பணம் பல வழிகளிலும் வந்து உங்களை உற்சாகப்படுத்தும். தட்டிச்சென்ற வாய்ப்புகள் திரும்ப கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து மௌனம் காப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் மாற்றம் சாதக பலன் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அவ்வபோது மனரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம் என்பதால் வாகன பராமரிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வாருங்கள் நல்லது நடக்கும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு தை மாதம் அற்புதமான பலன்களை கொடுக்க இருக்கிறது. சூரிய பகவான் உங்கள் ராசியில் இடம் பெயர்ச்சி அடைந்துள்ளதால் தை மாதம் உங்களுக்கு லாபத்தை இரட்டிப்பாக்கி தரும். கணவன் மனைவிக்கு இடையே நடந்து வந்து கொண்டிருந்த உஷ்ணமான எதிர்மறை விஷயங்கள் சாந்தம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகப் பலன்கள் உண்டாகும். அரசு வழி விஷயங்களில் அனுகூல பலன் உண்டு. நடக்குமா? நடக்காதா? என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் நடக்க இருக்கிறது. காலம் கடந்து சில பிரிந்து போன உறவுகள் கூட மீண்டும் வந்து இணைய வாய்ப்புகள் உண்டு. பொருளாதார ரீதியான ஏற்றம் வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்ய உதவும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள் நல்லது நடக்கும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு தை மாதம் மனதிற்கு மகிழ்ச்சியான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. தட்டிச்சென்ற சுபகாரியங்கள் கைகூடி வரும். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் வந்து இணைவார்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை பலப்படும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். புதிய விஷயங்களில் அதிக லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் பெருகும். உங்கள் விடா முயற்சிக்கும் உரிய வெற்றி கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு சுபச் செய்திகள் உண்டு. திடீர் வெளியிட பயணங்களின் பொழுது பாதுகாப்புடன் செல்வது நல்லது. வீடு, மனை வாங்கும் விஷயங்களில் ஒன்றுக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
பரிகாரம்: கிருஷ்ணருக்கு வெண்ணெய் வைத்து வழிபட்டு வாருங்கள் வேண்டியது கிடைக்கும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு தை மாதம் அனுகூலமான பலன்களை கொடுக்க இருக்கிறது. எட்டாக்கனியாக இருந்த சில விஷயங்கள் உங்களை தேடி தானாகவே வந்து சேரும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் வரக்கூடிய யோகம் வந்துவிட்டது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடன் பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்க்கும் வருமானம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளிலும் வந்து சேரும். புதிய விஷயங்களில் புதிய முதலீடுகள் செய்வதால் அனுகூல பலன்களை காணலாம். பொருளாதாரம் ஏற்றம் தரும் என்பதால் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த வருத்தங்கள் மறையும். அமைதியான சூழ்நிலையில் ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
பரிகாரம்: சனிக்கிழமையில் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யுங்கள் நல்லது நடக்கும்.

- Advertisement -