சமையல் கட்டில் தக்காளி நறுக்கும் போது இதை செஞ்சா கூட ஹீரோயின் மாதிரி நீங்களும் பளபளன்னு இருக்கலாமே! 10 பைசா செலவில்லை ஆனால் என்றும் 16 போல முகமா?

face-tomato
- Advertisement -

எல்லா பெண்களுக்கும் தான் ஹீரோயின் போல இருக்க வேண்டும் என்று தான் ஒரு நினைப்பு உண்டு. அவர்களுடைய முகமும் மேக்கப் இல்லாவிட்டால் நம்முடைய முகம் போல தான் இருக்கும். ஆனால் இது பலருக்கும் புரிவதில்லை. இயற்கையாகவே நம்முடைய முகம் அவர்களைப் போல பளபளன்னு ஜொலிப்பதற்கு அதிக செலவு செய்ய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. நாம் சமையல் கட்டில் வேலை செய்யும் பொழுது இந்த ஒரு விஷயத்தை செய்து வந்தாலே போதும், எப்போதும் முகம் பளிங்கு போல மின்னும். அப்படியான ஒரு ரகசிய அழகு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நம் அன்றாடம் சமையல் செய்யும் பொழுது நறுக்கக் கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும் சாறு எத்துணை சத்துக்களை கொண்டுள்ளது. இவற்றில் இருந்து தினமும் ஏதேனும் ஒரு சாற்றை நீங்கள் முகத்தில் தடவி உலர விட்டாலே போதும், சருமத்திற்கு தேவையான அத்தனை சத்துக்களும் கிடைக்கும். நீங்கள் பார்லருக்கு சென்று ஆயிரம் ஆயிரம் ஆக செலவு செய்தாலும் அதில் வெஜிடபிள் மற்றும் ஃப்ரூட்ஸ் கண்டிப்பாக இருப்பதை நாம் பார்த்திருப்போம். இதை ஏன் இயற்கையான முறையில் நாம் கடைப்பிடித்து பார்க்க கூடாது?

- Advertisement -

நம் முகத்தில் வழியும் எண்ணெய் பசை நீங்கி நம்முடைய சரும துளைகளுக்குள் இருக்கும் பாதிப்புகளை குறைத்து, நம்முடைய முகத்தை எப்பொழுதும் இளமையாகவும், தோற்ற பொலிவுடனும் இருக்க செய்ய இயற்கையான பொருட்களுக்கு மிஞ்சிய மருந்து கிடையாது. அதிலும் குறிப்பாக நாம் தக்காளி நறுக்கும் பொழுது இதை செய்தால் போதும் என்றும் பதினாறு போல நீண்ட நாள் இளமையோடு இருக்கலாம்.

காய்கறி நறுக்கும் பொழுது தக்காளியை பாதி அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் போல சர்க்கரையை தூவி கொள்ளுங்கள். தேன் இருந்தால் அதிலிருந்து நாலைந்து சொட்டுகளை விட்டுக் கொள்ளுங்கள். எலுமிச்சை சாறு இருந்தாலும் அதிலிருந்து நாலைந்து சொட்டுகளை அதில் விட்டுக் கொள்ளுங்கள். பின்னர் முகம் முழுவதும் நன்கு மசாஜ் செய்வது போல மசாஜ் செய்யுங்கள்.

- Advertisement -

இந்த மசாஜ் ரொம்பவே எஃபக்டிவாக இருக்கும். இதில் இருக்கும் அத்தனை பொருட்களும் மூலிகை மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது ஆகும். மேலும் இதில் இருக்கும் எக்ஸ்ட்ராக்ஸ் உங்களுடைய சரும துளைகளுக்குள் ஊடுருவி சென்று இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உயிர்ப்பிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. மேலும் உங்களுடைய சரும துளைகளை இறுக செய்து இளமையை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

இதையும் படிக்கலாமே:
இப்படி குளித்தால் போதும் பொடுகு போய் விடும். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. ஆமாங்க பொடுகு மறைய நீங்கள் இப்படி குளித்தால் மட்டும் போதும். அது எப்படின்னு பாக்கலாம் வாங்க.

மசாஜ் செய்த பின்பு அப்படியே இருபது நிமிடம் உலர விட்டு விடுங்கள். அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவி விடுங்கள். இது போல நீங்கள் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்து பாருங்கள். உங்களுடைய முகத்தில் பருக்களோ அல்லது கருந்திட்டுகளோ தோன்றவே தோன்றாது. மேலும் உங்களுடைய முகம் எப்பொழுதுமே பளபளன்னு பளிச்சுன்னு மின்னும். பத்து பைசா செலவில்லாமல் வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை வைத்தே நீங்கள் எப்படி ஹீரோயின் போல ஜெலிக்கலாம்? என்று ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -