குழம்பு வைக்க நேரம் இல்லையா கவலையை விடுங்க, பத்து நிமிஷம் இருந்தா போதும் அருமையான தக்காளி குருமா செஞ்சு முடிச்சிடலாம். இட்லி தோசை சப்பாத்தி சாதம் எல்லாத்துக்கும் ஒரு பக்கா சைடு டிஷ்.

- Advertisement -

இந்த தக்காளியை வைத்து தக்காளி தொக்கு, தக்காளி சட்னி எல்லாம் செய்திருப்போம். இது எல்லாம் நமக்கு தெரிந்த உணவு தான். தக்காளி குருமாவும் தெரியாத ஒரு உணவு கிடையாது அதுவும் பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் அதிகமான பொருட்கள் செலவு செய்யாமல், அதிக நேரம் எடுக்காமல் சீக்கிரத்தில் அதே நேரத்தில் ஒரு நல்ல சுவையான தக்காளி குருமா எப்படி செய்ய முடியுமா என்பது தான் இதில் முக்கியம். வாங்க இந்த சிம்பிள் தக்காளி குருமாவை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்: தக்காளி – 6, தேங்காய் சின்னதாக நறுக்கியது – 1/4 கப், வெங்காயம் -1, சோம்பு -1 டீஸ்பூன், பட்டை இலை -2,மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன் ,மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன், கரம் மசாலா -1 டீஸ்பூன், சர்க்கரை – டீஸ்பூன், உப்பு – டீஸ்பூன்,கொத்து மல்லி – 1 கைப்பிடி.

- Advertisement -

இந்த குருமா செய்வதற்கு முதலில் ஆறு தக்காளியை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல நைசாக அரைத்து ஒரு பவுலின் தனியாக ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தேங்காயும் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் குக்கரை வைத்த பிறகு குக்கர் சூடானவுடன், அதில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பிரிஞ்சி இலை போட்டு பொரிந்த பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கிய பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் இரண்டையும் சேர்த்த பிறகு அடுப்பை லோ ஃப்லேமில் வைத்து மிளகாய்த்தூள் பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்து வைத்த தக்காளி விழுதை இதில் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு, அரைத்து வைத்த தேங்காய் விழுதையும் கலந்து உப்பு சேர்த்த பிறகு கரம் மசாலா, சர்க்கரை இரண்டையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த குருமா கொஞ்சம் தண்ணியாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். இப்போது இதையெல்லாம் சேர்த்த பிறகு ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். விசில் இறங்கியவுடன் குக்கர் மூடியை திறந்து நறுக்கி வைத்து கொத்தமல்லியை மேலே தூவி பரிமாறலாம்.

இதையும் படிக்கலாமே: இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி ஒருமுறை இப்படி வச்சு பாருங்க இனி தேங்காய் சட்னி என்றாலே இப்படித்தான் வைப்பீங்க, அவ்வளவு ருசியாக இருக்கும்.

இந்த குருமா இட்லி, தோசைக்கு மட்டுமல்ல சப்பாத்தி, பூரி,இடியாப்பம் போன்றவைகளுக்கு கூட இது நன்றாகவே இருக்கும். இத்தனை சுலபமாக செய்யக்கூடிய இந்த தக்காளி குருமாவை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

- Advertisement -