இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி ஒருமுறை இப்படி வச்சு பாருங்க இனி தேங்காய் சட்னி என்றாலே இப்படித்தான் வைப்பீங்க, அவ்வளவு ருசியாக இருக்கும்.

coconut-thengai-chutney-recipe
- Advertisement -

காலையில் இட்லி, தோசைக்கு தொடுக்க என்னடா செய்வது? என்று யோசிக்கும் பொழுது சட்டுன்னு நாம் நினைவில் வருவது தேங்காய் சட்னி தான்! தேங்காயை மிக்ஸியில் போட்டு கூடுதலாக சில பொருட்களை சேர்த்து அரைத்து தாளித்து வைத்து விடுவோம் ஆனால் இந்த முறையில் நீங்கள் தேங்காய் சட்னி செய்வதை விட, இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க இனி அடிக்கடி இதே மாதிரி செய்ய ஆரம்பிப்பீங்க. அந்த அளவிற்கு சுவையாக இருக்கக்கூடிய இந்த தேங்காய் சட்னி எப்படி சுலபமாக செய்யப் போகிறோம்? என்பதை இந்த பதிவின் மூலம் தொடர்ந்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் – 4, இஞ்சி துண்டு – ரெண்டு இன்ச், தேங்காய் பற்கள் – அரை மூடி, சின்ன வெங்காயம் – 3, பொட்டுக்கடலை – கால் கப், கல் உப்பு – தேவையான அளவு, தாளிக்க: சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – ரெண்டு.

- Advertisement -

தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் அரை மூடி தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள் அல்லது நீங்கள் பூ போல துருவியும் எடுத்துக் கொள்ளலாம். மற்ற தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை தோல் உரித்து சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி நிறம் மாறி சுருள ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் ஆற வைத்த இந்த மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நீங்கள் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் சின்ன வெங்காயம் தோல் உரித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். கால் கப்பிற்கும் குறைவாக பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளுங்கள். பின் தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு கல் உப்பு ருசியாக இருக்கும் எனவே தூள் உப்பு பயன்படுத்த வேண்டாம். பின்னர் மிக்ஸியை இயக்கி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு சிறு தாளிப்பை இப்போது கொடுக்கப் போகிறோம்.

இதையும் படிக்கலாமே:
இந்த சூப் மட்டும் அடிக்கடி குடித்து பாருங்க உங்களுடைய ரத்த அணுக்களின் எண்ணிக்கை உடனே உயரும்! சோர்வு என்பதே வராது எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை கழுவி உருவி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் காய்ந்த மிளகாய் இரண்டை காம்பு நீக்காமல் அப்படியே போட்டு நன்கு வதக்கி பின்னர் சட்னியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான், ரொம்பவே சுவையாக இருக்கக்கூடிய இந்த தேங்காய் சட்னி ரெசிபி வேறு மாதிரியான சுவையில் இருக்கும். நீங்களும் இதே மாதிரி ஒரு முறை செஞ்சு பாருங்க, இனி இப்படித்தான் தேங்காய் சட்னி வைப்பீங்க!

- Advertisement -