காரசாரமான தக்காளி புளி சட்னி ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க! நாலு நாளானாலும் கெட்டுப் போகாது!

spicy-tomato-chutney
- Advertisement -

காரசாரமான தக்காளி புளி சட்னி இப்படி வச்சு கொடுத்தா 10 இட்லி சாப்பிட்டாலும் பத்தவே செய்யாது. இந்த புளி சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சாதத்திற்கு கூட அட்டகாசமாக இருக்கும். ரொம்பவே சுலபமாக செய்யக் கூடிய இந்த தக்காளி புளி சட்னி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வெங்காயம் எதுவும் சேர்க்காமல் செய்யும் இந்த சட்னியை இதே முறையில் நீங்களும் செய்து பாருங்கள், இனி அடிக்கடி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். தக்காளி புளி சட்னி செய்வது எப்படி? என்பதை இந்த பதிவில் இனி தொடர்ந்து காண்போம் வாருங்கள்.

tomato

தக்காளி புளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய தக்காளி – 5, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, புளி – அரை எலுமிச்சை அளவு, பூண்டு பற்கள் – 10, நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

தக்காளி புளி சட்னி செய்முறை விளக்கம்:
இந்த புளி சட்னி செய்ய முதலில் ஐந்து பெரிய அளவிலான தக்காளி பழங்களை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து காம்பு இருக்கும் பகுதியை நீக்கி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பூண்டு பற்களை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்க்க வேண்டும். இப்போது இதனுடன் 2 ஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்.

chutney1

குழம்பு மிளகாய் தூள் சேர்க்க கூடாது, தனி மிளகாய் தூள் சேர்ப்பது நல்லது. அரை மூடி எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை உருட்டி எடுத்து விதைகள் இல்லாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது மிக்ஸியை இயக்கி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். காரச் சட்னிக்கு நல்லெண்ணெய் ஊற்றினால் நன்றாக இருக்கும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

- Advertisement -

உளுந்து நன்கு வறுபட்டதும் நீங்கள் எடுத்து வைத்துள்ள பூண்டு பற்களை உரலில் நன்கு இடித்துக் கொள்ளுங்கள். இடித்த பூண்டு பற்களை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும். பூண்டு கருகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். பூண்டு பொன்னிறமாக வறுபட்டதும் தேவையான அளவிற்கு பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேருங்கள். இப்படி தாளிப்பு கொடுத்ததும் அரைத்து வைத்துள்ள சட்னியை ஊற்றி கொதிக்க விட வேண்டும். இந்த சட்னிக்கு அதிகம் தண்ணீர் சேர்க்கக் கூடாது. ஜாரை கழுவிய தண்ணீர் மட்டும் அரை கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.

chutney01

இப்போது மூடி போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். இடையிடையே மூடியைத் திறந்து கிண்டி விடுங்கள். ஐந்து நிமிடத்தில் தக்காளி சட்னி நீர்க்க இல்லாமல், எண்ணெய் பிரிந்து கெட்டியாக ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் அடுப்பை அணைத்து ஆற விட்டு விட வேண்டியது தான். ரொம்பவே சுவையாக இருக்கும். இந்த தக்காளி புளி சட்னி இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள மட்டுமல்லாமல் சாதத்திற்கு கூட பிசைந்து சாப்பிடலாம். சுவைத் தரும் இந்த தக்காளி சட்னியை இதே முறையில் இதை அளவுகளில் நீங்களும் வீட்டில் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -