மணக்க மணக்க தக்காளி ரசம் இப்படியும் வைக்கலாம். இந்த ரசம் வாசத்திற்கு பக்கத்து வீட்டில் இருந்தே சாப்பிட ஆட்கள் வருவார்கள் என்றால் பாருங்க.

rasam
- Advertisement -

ரசம் வைப்பது ரொம்ப ரொம்ப ஈஸி. ஆனால் சுவையாக அவ்வளவு எளிதில் எல்லோராலும் ரசத்தை வைத்து விட முடியாது. ரசத்தை ஒவ்வொருவர் வீட்டில் ஒவ்வொரு மாதிரி வைப்பார்கள். தக்காளி ரசத்தை ஒரு முறை பின் சொல்லக் கூடிய குறிப்புகளை பின்பற்றி வைத்து பாருங்கள். இதன் வாசனை பக்கத்து வீட்டு வரைக்கும் வீசும். கொஞ்சம் ரசம் கொடுங்களேன், அப்படின்னு பக்கத்து வீட்டு இருப்பவர்கள் கூட வந்து கேட்பார்கள். அந்த அளவிற்கு சுவையான ஒரு ரசம் எப்படி வைப்பது தெரிந்து கொள்வோமா.

முதலில் ஒரு உரலில் மிளகு – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டேபிள் ஸ்பூன், பூண்டு பல் – 10, போட்டு நன்றாக இடித்துக் கொள்ளுங்கள். இது ஒன்றும் இரண்டுமாக தான் இடிபட்டு இருக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1/2 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி விடுங்கள். மீடியம் சைஸில் இருக்கும் பழுத்த 4 தக்காளி பழங்களை காம்புகளை மட்டும் நீக்கிவிட்டு முழுசாக அந்த தண்ணீரில் போட்டு, கொதிக்க வையுங்கள். பத்து நிமிடங்கள் கொதிக்கட்டும். அதன் பின்பு தண்ணீரை ஆற வையுங்கள். தக்காளி பழத்தின் மேலே இருக்கும் தோல் லேசாக பிரிந்து வந்துவிடும். அதை நீக்கி விடுங்கள். உங்கள் கையை கொண்டு தக்காளி பழத்தை அந்த தண்ணீரில் நன்றாக கல் உப்பு போட்டு கரைங்கள்.

இந்த தக்காளி கரைசலோடு மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், நசுக்கி வைத்திருக்கும் மிளகு சீரக பூண்டு பொடி, ரச பொடி – 1 1/2 டேபிள்ஸ்பூன், சேர்த்து இதை மீண்டும் அடுப்பில் வைத்துவிட்டு பத்து நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடுங்க. இதன் பச்சை வாடை நீங்கட்டும் அதன் பின்பு அரை லிட்டர் அளவு தண்ணீரை இதில் ஊற்றி, அடுப்பில் இருந்து இதை இறக்கி விடுங்கள். (கடையில் வாங்கிய ரசப்படி நீங்கள் அரைத்த ரசப்பொடி எதை வேண்டுமென்றாலும் சேர்க்கலாம்.)

- Advertisement -

ஒரு தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கருவாப்பிலை, வரமிளகாய் 3 கிள்ளி போட்டு தாளித்து இதை அப்படியே ரசத்தில் ஊற்றி ரசத்தை அடுப்பில் வைத்து ஒரு நிமிடம் லேசாக சூடு செய்யுங்கள். அதிகமாக கொதிக்க விடக்கூடாது. அடுப்பை அணைத்து விடுங்கள். மேலே கொத்தமல்லி தழையை தூவி சுடச்சுட பரிமாறினால் சூப்பரான ரசம் தயார்.

இதையும் படிக்கலாமே: இந்த வடை சுட உளுந்தே தேவை இல்லை. இப்படி ஒரு சூப்பர் ரெசிபியை இவ்வளவு ஹெல்தியான ஈவினிங் ஸ்நாக்ஸா சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க.

சுட சுட சாதத்தில் இந்த ரசத்தை ஊற்றி வாசத்திற்கு கொஞ்சம் நெய் விட்டு பிசைந்து அப்படியே சாப்பிட்டு பாருங்கள். வேற லெவல் டேஸ்ட் இருக்கும்.

- Advertisement -