தக்காளி தொக்கு ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க! 10 நாட்கள் பிரிட்ஜில் வைக்காவிட்டாலும் கெட்டுப் போகாது.

- Advertisement -

தக்காளி தொக்கு ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொருவர் முறைப்படி செய்வார்கள். அந்த வரிசையில் மிகவும் சுவையான, சீக்கிரம் கெட்டுப் போகாத வகையில், ஒரு காரசாரமான தக்காளி தொக்கு எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெளியூருக்கு சுற்றுலா செல்லும்போது, ஹாஸ்டலில் தங்கி படித்து வேலை செய்பவர்களுக்கும், இந்தத் தொக்கு ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். ஃப்ரிட்ஜில் வைக்காவிட்டாலும் பத்து நாட்களுக்குக் கெடாது. ஃப்ரிட்ஜ்ல வெச்சா ஒரு மாதம் வரைக்கும் கூட வைத்து சாப்பிடலாம்.

thakkali-thokku2

Step 1:
1 கிலோ அளவு பழுத்த தக்காளி, 1 பெரிய நெல்லிக்காய் அளவு புளி, எடுத்துக் கொள்ள வேண்டும். தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். புளியை சிறு சிறு துண்டுகளாக, கிள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். புளியில் இருக்கும் நார், ஓடு, இவைகளை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், புளி கரைசலை சேர்க்கப் போவதில்லை. புளியை அப்படியே சேர்க்கப் போவதால் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Step 2:
அடுப்பில் கடாயை வைத்து, அதில் 4 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த தக்காளி தொக்கிற்க்கு கட்டாயம் நல்லெண்ணெய் பயன்படுத்துங்கள். அந்த எண்ணெயில் தோல் உரித்த 5 போல் பூண்டை பொடியாக நறுக்கிப் போட்டு வதக்க வேண்டும். அதன் பின்பாக வெட்டி வைத்திருக்கும் தக்காளியையும், கிள்ளி வைத்திருக்கும் புளியையும் ஒன்றாக எண்ணையில் போட்டு வதக்கி 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து, தக்காளியானது தண்ணீர்விட்டு குழைந்து வெந்த பதத்திற்கு வரும்வரை, வதக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் எடுக்கும்.

thakkali-thokku1

Step 3:
தக்காளிப்பழம் நன்றாக வெந்து, தண்ணீர் விட்டு பச்சை வாடை நீங்கிய பின்பு, அடுப்பை விட்டு இறக்கி, அதை நன்றாக ஆற வைத்து விட வேண்டும். இப்போது இந்த விழுதினை மிக்ஸி ஜாரில் ஊற்றி பேஸ்டாக அரைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

Step 4:
மீண்டும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 5 டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, நன்றாக காய விட வேண்டும். அதன் பின்பாக, கடுகு 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை 1 கொத்து, வரமிளகாய் 2, போட்டு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை எண்ணெயில் ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து தக்காளி தொக்கை கொதிக்க விடுங்கள். தக்காளி தொக்கு 5 நிமிடங்கள் கொதித்த பின், வரமிளகாய் தூள் – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – 2 ஸ்பூன், வறுத்து அரைத்த வெந்தயப் பொடி – 1 டேபில் ஸ்பூன், பெருங்காயம் 1/2 ஸ்பூன், இவைகளை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

thakkali-thokku3

தக்காளி தொக்கில் இருந்து நாம் ஊற்றிய எண்ணெய் கக்கிக்கொண்டு, வெளியே வரும் வரை சிவக்க வைக்க வேண்டும். நன்றாக சிவந்து, சிட சிடப்பு அடங்கி வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி இதை ஆற வைத்து, கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொண்டால், ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே பத்து நாட்களுக்கு மேல் ஆனாலும் கெட்டுப் போகவே போகாது. உங்கள் வீட்டிலும் இந்த குறிப்பை ஒரு முறை முயற்சி செய்து சோதித்துப் பாருங்கள். மிகவும் சுவையான சைட் டிஷ் இது. இட்லி, தோசை, சுட சுட சாப்பாட்டிற்கு கொஞ்சம் இந்த தக்காளி தொக்கு இருந்தாலே போதுமே.

- Advertisement -

thakkali-thokku1

பின்குறிப்பு: தக்காளியைக் கழுவி வெட்டும் போதும், அதில் கொஞ்சம் கூட தண்ணீர் இருக்கவே கூடாது. தக்காளியை நன்றாக துடைத்துவிட்டு தான் வெட்ட வேண்டும். தொக்கை அரைக்கும் மிக்ஸி ஜாரிலும், தண்ணீர் கொஞ்சம் கூட இருக்கக் கூடாது. ஜாரை, முன்பாகவே கழுவி நன்றாக உலர வைத்துக் கொள்ளுங்கள். தக்காளியும் புளிப்பு சுவை கொண்டது. அதில் சேர்த்திருக்கும் புளியும் அதிக புளிப்பு சுவை கொண்டது. இதனால்  தொக்குக்கு சேர்க்கப்படும் உப்பு காரம் தூக்கலாக தான் இருக்க வேண்டும். இறுதியாக உங்களுக்கு தேவைப்பட்டால் தக்காளி தொக்கை, இறக்குவதற்கு முன்பு, ஒரு ஸ்பூன் அளவு வெல்லத்தைப் போட்டு கலந்து விட்டு இறக்கிக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கேரளா ஸ்டைல் அவியல், சூப்பரா எப்படி செய்யறதுன்னு பாக்கலாமா?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -