கண் திருஷ்டியால், கெட்ட சக்தியால் வரக்கூடிய உடல் அசதி, தலை பாரத்தை உடனடியாக போக்கிக்கொள்ள இப்படி செய்தாலே போதுமே!

thalai-vali

நம்மில் நிறைய பேருக்கு இந்த பிரச்சனை இருக்கும். அழகாக உடை அணிந்து கொண்டு, அலங்காரம் செய்து கொண்டு, வெளியில் சென்று வீடு திரும்பியதும் உடல் அடித்துப்போட்டது போல வலி இருக்கும். தலைபாரம், தலையை வெடிக்கச் செய்யும். இந்த பிரச்சனை வருவதற்கு உடல் ரீதியான சில காரணங்களும் உண்டு. அசதி அலைச்சல் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் இப்படிப்பட்ட தலைபாரம் உடல் அசதியும் ஏற்படும். ஆனால் சில பேருக்கு கண்திருஷ்டியினாலும், கண்ணுக்கு தெரியாத சில எதிர்மறை ஆற்றலின் தாக்கத்தினாலும் தீராத தலைவலி வருவதற்கு, உடல் அசதி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

சில பேருக்கு உடலில் கண்ணுக்கு தெரியாத கெட்ட சக்திகள் ஊடுருவி இருக்கும்பட்சத்தில் தலை வலித்துக் கொண்டே இருக்கும். எத்தனை மருத்துவரை அணுகினாலும் இந்த பிரச்சினைக்கு விடிவு காலம் பிறக்காது. சிலருக்கு கெட்ட சக்தி உடலில் இருப்பதன் காரணமாக முடி உதிர்வு கூட அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு இருப்பதாக சந்தேகம் இருந்தால் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து பார்க்கலாம்.

முதல் பரிகாரமாக கொஞ்சம் தண்ணீரை ஒரு அகலமான பாத்திரத்தில் அடுப்பில் வைத்து சூடு பண்ணிக் கொள்ளுங்கள். அதில் மாட்டு கோமியத்தை சிறிதளவு ஊற்றி, அந்த தண்ணீரை 5 நிமிடங்கள் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி செய்தால் கண் திருஷ்டியால் இருக்கக்கூடிய தலைபாரம் உடனே சரியாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் குளிக்கின்ற வெதுவெதுப்பான தண்ணீரில் கூட மாதத்திற்கு ஒருமுறை கோமியத்தை, ஒரு சிறிய  அளவு ஊற்றி கலந்து, அதில் குளித்தாலும் உடலில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

kettasathi-1

இந்த பரிகாரத்திற்கு நீங்கள் தண்ணீரை பயன்படுத்துவீர்கள் அல்லவா? அது சுத்தமான தண்ணீராக இருக்க வேண்டும். அதாவது கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீராக எடுக்கலாம். அல்லது பைப்பிலிருந்தும் தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். அது நேரடியாக பூமியிலிருந்து வரும்படி இருக்க வேண்டும். டோங்குகளுக்கு சென்று அதன் பின்பு வந்த தண்ணீரை பயன்படுத்தினால் உடனடி பலனை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

இதேபோல் சிறிய பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, இரண்டு கரு வெற்றிலைகளை நன்றாக நசுக்கி அந்த தண்ணீரில் போட்டு, அந்த தண்ணீரை ஆவிப் பிடித்தாலும் எதிர்மறை ஆற்றினால் வரக்கூடிய உடல்நல கோளாறுகள் உடனே சரியாகிவிடும்.

vetrilai

சில பேருக்கு காரணம் தெரியாமல் தலை முடி உதிரும். ஒரு சில நாட்களில் ஆரோக்கியத்துடன் அழகாக இருந்தவர்கள் கூட, உடல் சோர்வாக எலும்பும் தோலுமாக மாறிவிடுவார்கள். இது எதிர்மறை ஆற்றலின் தாகமாக இருந்தால், குளிக்கும் நீரில் இதேபோல் கரு வெற்றிலையை நசுக்கி போட்டு சிறிது நேரம் கழித்து அந்தத் தண்ணீரில் குளித்தால் முடி உதிர்வு விரைவில் குறையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

avi-pidithal

உடலில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றலின் தாக்கம், நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் நிச்சயமாக எதிர்மறை விளைவுகளை உண்டு பண்ணிவிடும். இதிலிருந்து விடுபட, இந்த குறிப்புகளை எல்லாம் இத்தனை நாட்கள் தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. எப்போதெல்லாம் உங்களுக்கு பிரச்சனை என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.