உங்கள் தலைமுடி வலுவில்லாமல் லேசாக பிடித்து இழுத்தாலே உடைந்து விடுகிறதா? அப்படின்னா வாரம் ஒருமுறை இதைச் செஞ்சு பாருங்க, கையில் பிடிக்கவே முடியாத அளவிற்கு அடர்த்தியாக வளரும்!

hair-curd-onion-curry
- Advertisement -

ஒரு பெண்ணின் அழகு கூந்தலிலும் அடங்கி உள்ளது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான். அலைபாயும் அடர்த்தியான கருங்கூந்தலுக்கு மயங்காத ஆளே கிடையாது. கருகருவென கையில் பிடிக்க முடியாத அளவிற்கு முடி அடர்த்தியாக இருக்கும் பெண்களை கண்டாலே பல பெண்களுக்கு வயிற்றெரிச்சலும், பொறாமையும் வந்துவிடும். அந்த அளவிற்கு அடர் கூந்தல் இன்று எவ்வளவு பேருக்கு இருக்கிறது? என்பது ஆச்சரியப்படும் ஒரு விஷயம் தான். வலுவில்லாத கூந்தலுக்கு வலு கொடுக்கக்கூடிய ஒரு அற்புத சக்தி இந்த பொருட்களுக்கு உண்டு. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வலுவான கூந்தல் பெறுவதற்கு முதலில் தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் தலையை பின்னி பின்னல் போட்டுக் கொண்டால் போதும். வலுவில்லாத கூந்தலுடையவர்கள் ஒரு நாளைக்குப் பத்து முறை கூந்தலை அவிழ்த்து பின்னிக் கொண்டிருந்தால் மேலும் வலு குறையும். ஈரத் தலையுடன் கட்டாயம் தலைமுடியை வாரக்கூடாது. இப்படி வாரும் பொழுது கூந்தல் வேரிலிருந்து உதிரத் தொடங்கும்.

- Advertisement -

முதலில் கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள். பச்சை கறிவேப்பிலையாக இருக்க வேண்டும். பிரஷ்ஷான இந்த பச்சை கருவேப்பிலையை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். கறிவேப்பிலை கருங்கூந்தலை பெற செய்யும் என்பது எல்லோருக்கும் தெரியும். கறிவேப்பிலையை ஏதாவது ஒரு முறையில் தினமும் உணவில் எடுத்துக் கொண்டு வந்தால் இளநரை மற்றும் செம்பட்டை முடி பிரச்சனை வரவே செய்யாது.

கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவுவதும், இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். அத்தகைய இந்த கறிவேப்பிலையுடன் நான்கு சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் தலை முடியின் வேர் கால்களுக்குள் சென்று தலைமுடியை வலுவாக்கும் அதீத சக்தி கொண்டுள்ளது. எனவே ஒரு கைப்பிடி கறிவேப்பிலையுடன், 4 சின்ன வெங்காயம் மட்டும் தோலுரித்து சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதுடன் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

புளிக்காத கெட்டி தயிராக இருப்பது மிகவும் நல்லது. கெட்டியான தயிர் நம் கூந்தலை மிருதுவாக்கும் அற்புத ஆற்றல் படைத்தது. செயற்கையாக கூந்தல் சிடுக்குகள் இல்லாமல் அலை பாய்வதற்கு பலவிதமான கண்டிஷனர்கள் உபயோகிக்கிறோம். ஆனால் வீட்டில் இருக்கும் இந்த தயிர் நம் கூந்தலை இயற்கையான முறையில் மிருதுவாக்கி அலைபாய செய்யும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இயற்கையான முறையில் கிடைக்கும் அழகு நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்கக் கூடிய ஒன்றாக இருக்கும் எனவே எதையும் இயற்கையாக செய்வது மிகவும் நல்லது.

தயிர் சேர்த்த பின்பு நன்கு கலந்து விட்டு தலையில் வேரிலிருந்து, நுனிப்பகுதி வரை எல்லா இடங்களிலும் தடவி ஊற வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் சேர்த்து உள்ளதால் உடலை குளிர்ச்சி பெறாமல் பாதுகாக்கும் எனவே ஜலதோஷம் பிடிக்கும் என்கிற பயம் தேவையில்லை. இந்த பேக் போட்டு 10 நிமிடம் நன்கு ஊற வைத்துவிட்டு பின்னர் சீயக்காய் அல்லது மைல்டான ஷாம்பு வகைகளை போட்டு குளித்து விட்டு வந்து பாருங்கள், நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். ஒரு முறை போட்டால் நல்ல ஒரு மாற்றம் தெரியும். நீங்கள் தொடர்ந்து வாரம் ஒரு முறை இதை செய்து பாருங்கள், முடி உதிர்வது நின்று, கையில் பிடிக்க முடியாத அளவிற்கு முடி கருகருவென அடர்த்தியாக வளரும்.

- Advertisement -